உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காதல் திருமணத்துக்கு மறுப்பது தற்கொலைக்கு துாண்டியதாகாது: உச்ச நீதிமன்றம்

காதல் திருமணத்துக்கு மறுப்பது தற்கொலைக்கு துாண்டியதாகாது: உச்ச நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தன் மகனின் காதல் திருமணத்துக்கு தாய் மறுப்பு தெரிவிப்பதை, காதலியை தற்கொலைக்கு துாண்டிய குற்றமாக கருத முடியாது என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஒரு வழக்கில், காதலனின் தாய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, சதீஷ் சந்திர சர்மா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவில் கூறியதாவது:இந்த வழக்கில், தன் மகனின் காதல் திருமணத்துக்கு அவரது தாய் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, தாயின் ஒப்புதல் இல்லாததால் திருமணம் செய்ய முடியாது என்று காதலன் கூறியதால், காதலி தற்கொலை செய்துள்ளார்.காதலனின் தாய் கூறிய வார்த்தைகளே, காதலியை தற்கொலை செய்து கொள்ள துாண்டியதாக கூறப்பட்டுள்ளது.அனைத்து சாட்சியங்களும் இதை நிரூபிப்பதாக உள்ளன. ஆனாலும், காதலனின் தாய் மறுத்ததையே, காதலி தற்கொலை செய்யத் துாண்டியதாக கூறுவதை ஏற்க முடியாது. அவருக்கு மாற்று வாய்ப்புகள் இருந்துள்ளன.மேலும், தற்கொலை செய்த பெண்ணின் பெற்றோர் தான், இந்த காதலுக்கு பெரிதும் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.காதலனின் தாய் மறுப்பு மட்டுமே தெரிவித்துள்ளார். காதலைத் தொடரக் கூடாது என்றோ, பார்க்கக் கூடாது என்றோ எந்த ஒரு நெருக்கடியும் அவர் கொடுக்கவில்லை.திருமணம் செய்யாவிட்டால், தற்கொலை செய்வதாக காதலி தான் மிரட்டியுள்ளார். அப்படியும் காதல் திருமணத்துக்கு காதலனின் தாய் ஏற்கவில்லை. அதையே, தற்கொலைக்கு துாண்டியதாக கூற முடியாது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

aaruthirumalai
ஜன 27, 2025 20:55

திடீரென தெளிவாகுது அப்புறம் கலங்கிபோகுது.


Haja Kuthubdeen
ஜன 27, 2025 19:24

நல்ல தீர்ப்பு


Ganapathy
ஜன 27, 2025 14:31

மிகச்சிறந்த தீர்ப்பு.


lana
ஜன 27, 2025 14:08

அம்மா அப்பாவுக்கு காதல் என்பதை ஏற்றுக் கொண்டு ஆக வேண்டும் என்ற கட்டாயம் உண்டா. அவர்கள் மனிதர்கள் தானே. காதலிப்பது அவர்கள் உரிமை போல ஏற்பதும் மறுப்பது அம்மா அப்பா உரிமை. இதுக்கெல்லாம் தற்கொலை வழக்கு போட்டால் நாளைக்கு ஒரு அம்மா அப்பா கூட வெளியில் இருக்க முடியாது. சிறையில் தான் இருக்க வேண்டும். உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் கல்யாணம் செய்து கொள்ளுங்கள்.


Vrm
ஜன 27, 2025 13:36

எங்க அம்மா அப்பா ஒத்துக்கல, அதுனாலே வீட்ல பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துக்கிறேன் என்று எவ்வளவோ பெண்கள் ஆண்களை டீலில் விட்டுச்சென்றிருக்கிறார்கள். அப்போ ஆணைபெற்ற பெற்றோருக்கு மட்டும் கடலை மறுக்க உரிமையில்லையா..? சரியான தீர்ப்பு.


rama adhavan
ஜன 27, 2025 10:05

சரியான தீர்ப்பு. தாயை கேட்டா காதல் செய்தார்கள். துணிவு இருந்தால், குடும்பம் நடத்த வலிமை இருந்தால், 21 வயது நிறைந்த ஆணும், 18 வயது நிறைந்த பெண்ணும் யார் சம்மதமும் இன்றி மணம் செய்யலாமே? இரு குடும்பத்துக்கும் மணமாகாத பெண்கள் இருந்தால் அக் குடும்பத்தின் கதி என்ன ஆகும்? இந்த காதல் எல்லாம் மசாலா சினிமாவிற்கு தான் லாயக்கு. உண்மையில் பையன் தான் இந்த உயிர் இழப்புக்கு பொறுப்பு. அவனுக்குதான் தண்டனை தர வேண்டும்.


Barakat Ali
ஜன 27, 2025 08:45

லட்சக்க்கணக்கான வழக்குகள் தீர்வு காணப்படாமல் இருக்கும் நிலையில் இது போன்ற வழக்குகளை எடுத்து விசாரித்து நாட்டை வல்லரசு ஆக்குறதுன்னே முடிவு பண்ணிட்டீங்களா ????


நிக்கோல்தாம்சன்
ஜன 27, 2025 06:58

காதலனின் தாய் பணக்காரியோ? என்னம்மா நகரத்தினா இப்படி பண்றீங்களே