வாசகர்கள் கருத்துகள் ( 2 )
வெற்றி நமதே . தாய் மண் வணக்கம் .
பொது மக்கள் சேரலாம், வயது வரம்பு குறிப்பிடுவதை விட இலஞ்சம் வாங்கிய அனைத்து அரசு அதிகார பிச்சைக்காரர்களை இதற்காக சேர்த்து பயிர்ச்சி கொடுப்பதுதான் சரியாக இருக்கும் இந்நேரத்தில்
புதுடில்லி: நம் பிராந்திய ராணுவத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பதிவு பெற்ற உறுப்பினர்கள் அனைவரையும் உதவிக்கு அழைத்துக்கொள்ள, நம் ராணுவ தளபதிக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது.நம் ராணுவத்துக்கான ஆதரவு சேவைகளை அளிக்கும் பகுதி நேர தன்னார்வலர்களை உறுப்பினர்களாக கொண்ட ராணுவ ரிசர்வ் படையாக, 'டெரிடோரியல் ஆர்மி' எனப்படும் பிராந்திய ராணுவம் செயல்படுகிறது. நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நேரத்திலோ, பேரிடர் காலத்திலோ ராணுவத்துடன் இவர்கள் இணைந்து பணியாற்றுவர். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள இந்த நேரத்தில், பிராந்திய ராணுவத்தினரை உதவிக்கு அழைத்துக்கொள்ள மத்திய அரசுமுடிவு செய்துள்ளது. இதற்கான முழு அதிகாரத்தை நம் ராணுவ தளபதிக்கு வழங்கிஉள்ளது.இது குறித்து, நம் ராணுவ அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை:
நம் ராணுவத்துக்கு உதவியாக பிராந்திய ராணுவத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் பதிவு பெற்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்துக்கொள்ள ராணுவ தளபதிக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, 2025, மே 6 முதல், 2028, பிப்., 9 வரை அமலில் இருக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியால், 1949, அக்., 9ல் பிராந்திய ராணுவம் உருவாக்கப்பட்டது. பொதுமக்களும் பிராந்திய ராணுவத்தில் உறுப்பினர்களாக சேரலாம். வயது வரம்பு, 18 முதல் 42 வரை. அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உடல் மற்றும் மன ரீதியாக தகுதி பெற வேண்டும். கடந்த 1962ல் நடந்த இந்திய - சீன போர், 1965 மற்றும் 1971ல் நடந்த இந்தியா - பாக்., போர், கார்கில் போர் ஆகியவற்றில் நம் ராணுவம், பிராந்திய ராணுவத்தின் உதவியை பெற்றுள்ளது. போர் நிறுத்தம்இதற்கிடையே, இரு நாடுகளும், இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வெற்றி நமதே . தாய் மண் வணக்கம் .
பொது மக்கள் சேரலாம், வயது வரம்பு குறிப்பிடுவதை விட இலஞ்சம் வாங்கிய அனைத்து அரசு அதிகார பிச்சைக்காரர்களை இதற்காக சேர்த்து பயிர்ச்சி கொடுப்பதுதான் சரியாக இருக்கும் இந்நேரத்தில்