உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பட்டா பிழைகளை சரி செய்வதில் வருவாய் துறையினர் அலட்சியம்

பட்டா பிழைகளை சரி செய்வதில் வருவாய் துறையினர் அலட்சியம்

சென்னை : பட்டாக்களில் காணப்படும் பரப்பளவு உள்ளிட்ட பிழைகளை சரி செய்வது தொடர்பான கோப்புகள், வருவாய் துறையில் கிடப்பில் போடப்படுவதால், கட்டுமான திட்ட அனுமதி பணிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகள், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டு உள்ளன. இதில், பத்திரம், பட்டா உள்ளிட்ட ஆவணங்கள், கணினியில் உள்ளீடு செய்யப்படும் நிலையில், பரப்பளவு, பெயர் உள்ளிட்டவற்றில் வேறுபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இந்த பிழைகளை சரி செய்தால் மட்டுமே, விண்ணப்பத்தை கணினி ஏற்கும். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படும் பட்டாக்களில், பரப்பளவு உள்ளிட்ட விபரங்கள் பிழையாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. வருவாய் துறை நடைமுறைகளின் அடிப்படையில், இதுபோன்ற பிழைகள் இருந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் திருத்தம் கோரி விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் அடிப்படையில், வருவாய் கோட்டாட்சியர் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலான வருவாய் கோட்டாட்சியர்கள், இதுபோன்ற பிழைகளை சரி செய்வது தொடர்பான முடிவை எடுக்காமல், கிடப்பில் போடுவதாக புகார் எழுந்துள்ளது.

அனுமதி பாதிப்பு

இதுகுறித்து, தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது: கட்டுமான திட்ட அனுமதி உள்ளிட்ட பணிகள், 'டிஜிட்டல்' முறைக்கு மாற்றப்பட்டு உள்ளன. இதனால், பட்டா போன்ற ஆவணங்கள் குறித்த விபரங்களை, சம்பந்தப்பட்ட அலுவலர்கள், 'ஆன்லைன்' முறையில் சரிபார்த்து கொள்ள வேண்டும். பொதுவாக, பத்திரங்களில் சதுர அடி அடிப்படையிலும், பட்டாவில், 'ஏர்' கணக்கிலும் நிலத்தின் பரப்பளவு குறிப்பிடப்படுகிறது. ஒரு ஏர் என்பது, 1076 சதுர அடி. இதில், சிறிய அளவு வேறுபாடு இருக்கும். இதனால், பத்திரத்தை விட பட்டாவில், 50 முதல், 70 சதுர அடி வரை குறைந்து காண வாய்ப்புள்ளது. இதை சரி செய்து கொடுக்க விண்ணப்பித்தால், அதில் கோட்டாட்சியர்கள் விசாரணையே மேற்கொள்வதில்லை. தங்களுக்கு வேறு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக கூறி, அலட்சியம் காட்டுகின்றனர். பட்டா பிழைகளை சரி செய்ய வேண்டியது, தற்போது மிக முக்கியமானதாக உள்ளது. வருவாய் துறை அதிகாரிகள், இதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

திருத்த எளிய வழி என்ன?

ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.தர்மராஜன் கூறியதாவது: பட்டா உள்ளிட்ட ஆவணங்களை, ஆன்லைன் முறைக்கு மாற்றியது முதல், பிழைகள் தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளன. தற்போதைய நிலவரப்படி, 60 சதவீத பட்டாக்களில் பிழைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதில், அடுத்தடுத்த பரிமாற்றம், வங்கிக்கடன், கட்டட அனுமதி போன்ற விஷயங்களுக்கு செல்வோர் மட்டுமே புகார் செய்கின்றனர். மற்றவர்கள் இன்னும் பிழைகள் இருப்பதை அறியாமல் உள்ளனர். தனியாக ஒரு இணையதளம் ஏற்படுத்தி, அதில் வருவாய் துறையிடம் இருக்கும் பட்டா விபரங்களை வெளியிட வேண்டும். அதில், பிழையான பட்டாக்கள் தொடர்பான சரியான விபரங்களுக்கான ஆதாரங்களை, பொது மக்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் பிழை திருத்தும் பணிகளை, வருவாய் துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இதனால், இப்பிரச்னை எளிதாக முடிவுக்கு வரும். இது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தை அணுகி இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ramesh babu
டிச 23, 2024 12:13

லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் பெயரில் வேண்டும் என்றே பிழையாக பதிவு செய்து வருகின்றனர்


Senthil Ramasamy
டிச 21, 2024 06:47

நாமக்கல் மாவட்டம் இதில் முதல் இடம்


Senthil Ramasamy
டிச 21, 2024 06:42

தமிழ்நாடு வருவாய் துறை மற்றும் பத்திர துறை மிகவும் மோசம்


Ravi Irulandi
டிச 21, 2024 00:09

1/2எ, 1/2பி, 2/பி2 இது எங்களுடைய பத்திரத்தின் சேர்வேஎண்.மொத்தம் 65 சென்ட் என்தந்தைக்கு ,32/1/2 என்தந்தைன்அண்ணனவர்களுக்கு 32/1/2 தர்ட்போது சேர்வேபிரொக்கப்பட்டு 2/பி2 வில்28centpathirampottulathu .analpoomil irupathu 20 cent matumthan.motham 65 cent iyanar enpavaridamirunthu vankiyavai.enathu meethamulle idathai kaliyappather mahatma Ayasamy.karuppasamy.paraman Akiramaipu seithllarkal.ivarhaluku politeness pattavalangappatullathu.servey No,2B/2B UDR patta valangapattulathu. 50.cent Anaithum poliyanavai .ivarkalpeyaril oru cent nilamkoode kidaiyathu Anatthm iyanar pearl ullathu enathuidathaium Ematri Avarkalaium ematramtram seithullargal ithartkum pataidam pakathil Akiramaipu sithularkal.intha pirachanai 15 years running ahikodu irukihirathi.Anathirkum money Entha oru thakunthe Nadavadikaium edukevillai 1000 petision.engellam petision kodukanumo ellla idathilum koduthuvitten.iya Nan mele koori engal 32/1/2 centle 4 cent 2A/2c il ullathu iya Anathirtkum Atharam Ullathu.vendathe mural VAO. Surveyor thasilthar Enathu patta nillthai purampoku nilathil kanpithu ematrm seihirarkal iya itharku thahunthe nadavadikai eduthu enathu nillathai meetutharumpadi mihaum paniudanketukolhiren.my cell:9865351923.thanks yours faithfully.I.Ravi ExArmy


Karunakaran Karan
டிச 20, 2024 06:47

உண்மையை காட்டு


Logan
டிச 19, 2024 22:12

என்னுடைய பட்டா–வில் காணப்படும் குறைகளை திருத்துவதற்கு கடந்த 2 வருடமாக திங்கள் தின மனு,மக்களுடன் முதல்வர் திட்டம் ,தகவல் அறியும் உரிமை சட்டம்,முதலியவற்றின் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளேன். கடைசியாக அரசு துறை சேவை குறைபாடு என வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு கோரவுள்ளேன்.


Marimuthu
டிச 19, 2024 16:45

தங்கள் விண்ணப்பத்துடன் முக்கியமான லிங்கை காந்திதாத்தாவை வைத்தால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்


Praveen Kumar
டிச 18, 2024 17:43

விண்ணப்பம் பெற்றதும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வேலை முடிக்க காலக்கெடு விதித்து சட்டம் ஏற்ற வேண்டும் மற்றும் அந்த அதிகாரி பொறுப்பேற்க வேண்டும்


Sundaresan S
டிச 18, 2024 11:25

அருமையான யோசனைதான். ஆனா பொன்முட்டை இடும் வாத்தை அறுக்க ஒப்பார்களா? நில பதிவுகளில் பெயர் புலஎண் பரப்பு பட்டாதார் பெயர் போன்றவற்றிலும் நிறைந்த பிழைகள் உள்ளன. அதுபோலவே நத்தம் வீட்டு மனை பதிவேடு பட்டாக்களிலும். ஏதோ காரணத்துக்காக பட்டா வழங்காமல் நிலுவை என பதிவை ரத்து செய்ய உரிய ஆவணங்களோடு விண்ணப்பித்தாலும் ஆண்டு கணக்காகிறது. வருவாய் துறை உயரதிகாரிகள் இப்பிரச்சினைகளை அமைச்சருக்கு தெரிவிப்பதில்லையோ?


Chinnamanibalan
டிச 18, 2024 11:23

அரசுத் துறைகளில் நிலவும் லஞ்ச லாவண்யம் காரணமாக இது போன்ற அவலங்கள் நடைபெறுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை