உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஜல்லிக்கட்டு காளையின் கொம்புகளுக்கு ரப்பர் கவசம்; பொறியியல் இளைஞரின் புதிய முயற்சி

ஜல்லிக்கட்டு காளையின் கொம்புகளுக்கு ரப்பர் கவசம்; பொறியியல் இளைஞரின் புதிய முயற்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : ஜல்லிக்கட்டு காளைகள் களத்தில் விளையாடும் போது அதன் கொம்புகளால் வீரர்கள் காயம்படாமல் இருக்க சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி முருகேசன் புதிய ரப்பர் கவசத்தை உருவாக்கியுள்ளார்ஸ்பெயினில் நடக்கும் மாடுபிடி சண்டையில் மாடுகளின் கொம்புகளுக்கு ரப்பர் கவசம் பொருத்தப்படுகிறது. தமிழகத்தில் கொம்பால் குத்தவரும் மாடுகளை வெறும் கைகளால் வீரர்கள் அடக்க வருவர். எனவே வீரர்களின் உயிரைக் காப்பாற்றும் வகையில் ரப்பர் கவசம் கண்டுபிடித்தேன் என்கிறார் முருகேசன்.

அவர் கூறியதாவது:

இந்த வகை கவசத்தை ஸ்பெயின் உட்பட வெளிநாடுகளில் இருந்து வாங்கி விற்பனை செய்யலாம் என நினைத்தேன். ஆனால் இறக்குமதி, சுங்கவரி செலவைக் கணக்கிடும் போது ஒரு ஜோடி கவசம் விலை ரூ.3500 ஐ தாண்டியது. இந்த விலை கொடுத்து ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர்கள் வாங்க மாட்டார்கள் என்பதால் நானே உருவாக்க நினைத்தேன். மோல்டு வாங்கி கடினப்படுத்தப்பட்ட ரப்பரை கொண்டு கொம்புகளுக்கு ஏற்ப மூன்று வெவ்வேறு அளவுகளில் இந்த கவசம் தயாரித்தேன். இதை ரூ.1500க்கு விற்கிறேன். இந்த ரப்பர் கவசம் கொம்பின் கூரான முனையில் தட்டையாக பொருந்தி விடும்.ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் போது மாடுகள் வீரர்களை குத்தி தாக்கினாலும் ரப்பர் கவசம் பெரிய அளவில் காயம் ஏற்படுத்தாது. வீரர்களும் துணிச்சலாக மாடுகளை அணுகமுடியும். காங்கேயம், புலிக்குளம், உம்பளச்சேரி, ஆலம்பாடி, பர்கூர் போன்ற தமிழக நாட்டு மாட்டு இனங்கள் தான் போட்டிகளில் பங்கேற்கின்றன. மாடுகள் துன்புறுத்தப்படாமல் விளையாடப்படுகிறது என்பதை இந்த ரப்பர் கவசத்தின் மூலம் உறுதிப்படுத்தும் அதேநேரத்தில் வீரர்கள் காயம்படுவதையும் தவிர்க்க முடியும்.தமிழக அரசு இந்த ரப்பர் கவசத்தை ஆய்வு செய்து போட்டி நடக்கும் போது ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு பொருத்த முன்வரலாம் அல்லது மானிய விலையில் மாட்டின் உரிமையாளர்களுக்கு விற்பனை செய்யலாம் என்றார். இவரிடம் பேச81220 65829.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

vns
ஜன 07, 2024 21:46

நல்ல முயற்சி. தட்டையான பகுதியின் கீழ் அதே அளவில் ஒரு உலோக பில்லை வைத்தால் மாட்டின் கொம்புகள் ரப்பரைக் கிழிப்பதைத் தடுக்கும்.


Vijayakumar
ஜன 07, 2024 21:24

பதற்றத்தில் வீரர்கள் இந்த ரப்பர் கேப்பை பிடித்து இழுத்தால் வெளியே வந்துவிடும். இதனால் பிடி தளர்ந்து மேலும் அடிபட வாய்ப்பு அதிகம். ஆகவே இயற்கையாக விளையாடுவதே சிறப்பு


Raghavan
ஜன 07, 2024 19:01

1500 க்கு பதில் 2000 என்று சொல்லி 500 கமிஷன் கரப்ஷன் கமிஷன் கணக்கில் வைக்கலாம்


sudalai MK
ஜன 07, 2024 17:55

Next, cut all nails, teeth of tiger


Barakat Ali
ஜன 07, 2024 16:40

இதே போல கவசம் போட்டுட்டாங்கன்னா தொல்லை இருக்காது .....


Siddhanatha Boobathi
ஜன 07, 2024 12:53

மாடுபிடித்தலே வெட்டிவேலை. அது இருக்கும் வரை கூடுதல் பாதுகாப்பு நல்லதுதான்


Oru Indiyan
ஜன 07, 2024 12:40

சூப்பர். சிறப்பான முயற்சி. வாழ்த்துக்கள் ஆனால் அரசு , கவசத்திற்கு கருப்பு சிவப்பு அடிப்பார்களே.


rama adhavan
ஜன 07, 2024 12:30

நல்லது. மாடு மிதித்தால் அடி படாமல் இருக்க குளம்புக்களுக்கு ரப்பர் உரை கண்டு பிடிக்கலாம்.


g.s,rajan
ஜன 07, 2024 11:11

Super....


Iniyan
ஜன 07, 2024 07:44

இவர் கண்டுபிடித்தேன் என்று சொல்வதற்கு பதில் ஸ்பெயினில் இருந்து காப்பி அடித்தேன் என்று சொல்லவேண்டும்


மேலும் செய்திகள்











புதிய வீடியோ