உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத சரிவு: ஆர்.பி.ஐ., எச்சரிக்கையால் சிறிய மீட்சி

ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத சரிவு: ஆர்.பி.ஐ., எச்சரிக்கையால் சிறிய மீட்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கரன்சி வணிகத்தில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு, நேற்று, 84 ரூபாய் 41 காசு என்ற சரிவை தொட்டது.நாட்டின் கரன்சி மதிப்புக்கு எதிராக ஊக வணிகம் செய்வதை தடுக்குமாறு, வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டதால், ரூபாய் மதிப்பு 6 காசு உயர்ந்தது.அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கியதில் இருந்தே, அந்நாட்டின் டாலர் மதிப்பு, சர்வதேச அளவில் பல நாடுகளின் கரன்சிக்கு எதிராக வலுப்பெறத் துவங்கியது.நவம்பர் 2022க்கு பின், பன்னாட்டு கரன்சிகளுக்கு எதிரான டி.எக்ஸ்.ஒய்., டாலர் குறியீடு, மிக அதிகபட்சமாக 108.09 ஆக நேற்று உயர்ந்தது.அதோடு, இந்திய சந்தைகளில் இருந்து கிட்டத்தட்ட 33,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை நவம்பரில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றதும், ரூபாய் மதிப்பை வீழ்ச்சி காணச் செய்தது.யூரோ மற்றும் பவுண்டு ஆகிய கரன்சிகளின் பலவீனத்தால், டாலர், நேற்று கணிசமான உயர்வு கண்டது. இதனால், ரூபாய் மதிப்பு 84 ரூபாய் 41 காசாக வீழ்ச்சி கண்டது.தன்வசமுள்ள டாலரில், ஒரு பகுதியை ரிசர்வ் வங்கி விற்பனை செய்ததால், ரூபாய் மதிப்பு மேலும் சரியாமல் தடுக்கப்பட்டது.மேலும், கரன்சி வணிகத்தில், இந்திய ரூபாய்க்கு எதிரான ஊக வணிகம் கூடாது என, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்த தகவல் வெளியானது.இதுவும் ரூபாய் மதிப்பு, சரிவில் இருந்து சிறிது மீளக் காரணமானது.நவம்பரில் இந்திய ரூபாய் மதிப்பு0.5% சரிவுமற்ற ஆசிய நாடுகளின் கரன்சி0.9% - 2.2% சரிவு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
நவ 23, 2024 07:33

பக்கத்து வீட்டுக்காரர் கூடுதலாக ஒரு மாடி கட்டினால் ஒப்பீட்டளவில் நமது வீடு சிறியதாக ஆகிவிடும் .ஆனால் அளந்து பார்த்தால் நம் வீட்டின் அளவு மாறியிருக்காது. அது போலதான் இதுவும். டாலரின் மதிப்பு கூடி டாலருக்கு எதிராக எல்லா நாட்டுக் கரன்சிகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. ஏற்றுமதியாளர்களுக்கு அனுகூலம்.


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 23, 2024 12:09

உங்கள் கருத்து சரியே. ஆனால் இதே போல முன்பு சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது ஒரு வார இடைவெளியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் ஒன்றரை ரூபாய் வீழ்ச்சி கண்டதும் ஐம்பத்து எட்டில் இருந்து ஐம்பத்து ஒன்பதரைக்கு அன்றைய பாஜகவினர் பாராளுமன்றத்தில் எப்படி எல்லாம் ரகளை செய்தனர் என்னவெல்லாம் பேசினர் என்பதும் அதே பாஜகவினர் இப்போது ஒன்பது துவாரங்களையும் காற்று நுழைய இடமின்றி மூடிக்கொண்டு இருப்பதையும் எண்ணினால் சிரிப்பு சிரிப்பா வரணுமே


விஜயவேல்
நவ 23, 2024 03:37

நூறு ரூவாயைத் தொடலாம். சாதனைதான்.


Vadivelu
நவ 23, 2024 12:31

தொட்டு விட்டீல் ஏற்றுமதியாளர்களுக்கு கொள்ளை லாபம். பெரும்பான்மை பொது மக்களுக்கு நஷ்டம் கதுவும் இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை