உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  சத்தியமூர்த்தி பவனா; விஜய் பவனா?: தி.மு.க., - காங்., அறிக்கை மோதல்

 சத்தியமூர்த்தி பவனா; விஜய் பவனா?: தி.மு.க., - காங்., அறிக்கை மோதல்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் பெயரை, 'சத்திய மூர்த்தி பவன்' என்பதற்கு பதில் 'விஜய் பவன்' என மாற்றுமாறு தி.மு.க., கிண்டல் அடித்ததால் இரு கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தி.மு.க., சட்டத்துறை இணை செயலர் பரந்தாமன் வெளியிட்ட அறிக்கை : த.வெ.க., அரசின் கொள்கை விளக்க குறிப்பில், நேரு, அம்பேத்கர், ஈ.வெ.ரா., பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டே, பா.ஜ.,வின் நிழல் ஆட்சியை த.வெ.க., நடத்திக் கொண்டிருக்கிறது. காங்கிரசுக்கு மானம், ரோஷம் இல்லையா? முதல்வர் விஜயை போற்றி பாடும் பஜனை மடமாகிவிட்ட சத்தியமூர்த்தி பவனை, 'விஜய் பவன்' என மாற்றிக் கொள்ளுங்கள். இந்த அறிக்கைக்கு, பதிலளித்துள்ள காங்., தமிழக பொருளாளர் ரூபி மனோகரன், 'தி.மு.க., ஆட்சியில் அப்போதைய அமைச்சர் ராஜகண்ணப்பன் தாக்கல் செய்த, கொள்கை விளக்க குறிப்புகளில், அம்பேத்கர் பெயர் எங்குமே இல்லை. அப்போது சட்டசபையில் துாங்கிக் கொண்டு இருந்தீர்களா? 'சத்தியமூர்த்தி பவன் பெயரை மாற்ற சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? தேர்தல் தோல்வி பயத்தில் மட்டும், நேரு, அம்பேத்கரை கையில் எடுக்கும், தி.மு.க.,வினர், அறிவாலயத்தின் பெயரை என்னவென்று மாற்றப் போகிறீர்கள்? என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Mani . V
செப் 01, 2026 05:06

அவர்கள், சத்தியமூர்த்தி பவன் என்றோ விஜய் பவன் என்றோ மாற்றிக் கொள்வதில் திருட்டு திமுக வுக்கு என்ன கஷ்டம்? இந்த மொள்ளமாரிக் கூட்டம் அறிவில்லாத அறிவாலயத்தில் அந்த ஈர வெங்காயத்தின் சிலையை வைக்க திராணியில்லை. பேச்சைப் பார், பேச்சை.


kulanthai kannan
ஆக 31, 2026 18:49

தமிழன் செய்தால் சமூக நீதி, சிங்களன் செய்தால் பேரினவாதமா??


duruvasar
ஆக 31, 2026 14:36

ஒருத்தர் அம்பேத்கர் படத்தை சட்டைபையில் வைத்துக்கொண்டு ஒவொரு விஷயத்திலும் அம்பேத்கரின் கருத்துகளுக்கு எதிர் மறையாகவே பேசி வருகிறார். ஆக தவெ க உட்பட அனைவருமே வேடதாரிகள். இதில் இந்தியாவில் மிகவும் பழமையான கட்டிச்சியான காங்கிரஸ் முன்னிலை வகுக்கிறது த வெ க என்பது பெயர் மாற்றம் செய்யப்பட்ட புதிய திமுக அவ்வளவே ..


Kalyanaraman Subramaniam
ஆக 31, 2026 07:35

எதையெடுத்தாலும் "பஜனை மடம்" என்று கூவும் திமுக (திருடர்கள் முன்னேற்றக் கழகம்), கட்டுமரத்தின் சமாதியில், எ.வா. வேலுவும், அல்லக்கை திருட்டு உபிகளும் செஞ்சதை என்னன்னு சொல்லுவாங்க?


A viswanathan
ஆக 31, 2026 10:10

அம்பேத்கார் பெயரை தவிர மற்றதை நீக்கியது பாவம் ஒன்றும் கிடையாது


மேலும் செய்திகள்