உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அமைதியே வெற்றிக்கான அறிகுறி சொல்கிறார் செங்கோட்டையன்

அமைதியே வெற்றிக்கான அறிகுறி சொல்கிறார் செங்கோட்டையன்

சென்னை : ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள், 13 பேர், அ.தி.மு.க., கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப் பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட இளைஞரணி பொருளாளர் சதீஷ், மாணவரணி மாவட்ட செயலர் குருராஜ், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலர்கள் தனகோட்டிராம், மவுதீஸ்வரன், ஐ.டி., பிரிவு மாவட்ட துணைத் தலைவர் மனோஜ்குமார், இணைச் செயலர் முத்துரமணன், வர்த்தகர் அணி மாவட்ட இணைச் செயலர் ராஜா சம்பத் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் என 13 பேர், கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட இணை செயலர் ரேவதிதேவி, மாவட்ட பொருளாளர் சந்திரசேகர், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலர் பழனிசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலர் சசிபிரபு, துணை செயலர் ராஜாசம்பத், இளைஞரணி மாவட்ட செயலர் குருராஜ், மாணவரணி மாவட்ட செயலர் பிரதீப் உட்பட 43 பேர் புதிதாக பொறுப்புகளில் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அ.தி.மு.க.,வில் பிரிந்தவர்களை ஒன்றிணைக்குமாறு காலக்கெடு விதித்த, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி பதவிகளை ஏற்கனவே, பழனிசாமி பறித்தார். மேலும், செங்கோட்டையனின் ஆதரவாளர்களையும் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி வருகிறார். கடந்த செப்.30ல், 40 பேரின் பதவிகளை பறித்த பழனிசாமி, நேற்று மேலும் 13 பேரை பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளார். அமைதியே வெற்றிக்கான அறிகுறி! முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு விஷயத்தில் திடீர் அமைதி ஏன் என்று கேட்கின்றனர். அமைதி என்பது வெற்றிக்கான அறிகுறி. திட்டமிட்டப்படி அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு நடக்குமா என்பது குறித்து, பொதுச்செயலர் பழனிசாமி தான் சொல்ல வேண்டும். கோபி வழியாக நீலகிரி சென்ற பொதுச்செயலர் பழனிசாமியை நான் வரவேற்க செல்லவில்லை என கூறுகின்றனர். அப்போது, நான் சென்னை சென்றிருந்தேன். ஆனாலும், அவருடைய வருகை குறித்து எனக்கு எந்த தகவலும் சொல்லப்படவில்லை. ஏதோ முடிவெடுத்து களம் இறங்கி விட்டார்; ஆனால், வழி தெரியாமல் உள்ளார் என என்னைக் குறித்து கூறுகின்றனர். எனக்கு வழிகாட்டிய எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., ஆகியோரின் வழியில் நான் சென்று கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sun
அக் 04, 2025 11:33

தானும் கெட்டு கூட இருந்தவங்களையும் பழி கொடுத்து இது தேவையா செங்ஸ் ? பத்து நாள் இல்ல! இன்னும் நூறு பத்து நாள் ஆனாலும் உங்களால ஒண்ணும் ஆகப் போறதில்ல..


ஆரூர் ரங்
அக் 04, 2025 11:29

கொள்கை எதிரிகளையும் தயங்காமல் அரவணைத்து கூட்டணியை பெருக்குகிறது திமுக. இருக்கும் ஆட்களையும் வெளியேற்றி சின்னாபின்னமாக ஆக்குகிறார் எடப்பாடி.


Haja Kuthubdeen
அக் 04, 2025 21:32

தேவயில்லாத கட்சிக்கு கட்டுபடாத ஆணிகளை பிடுங்கி எறிவதில் தவறே இல்லை. பன்னீரும் டிடிவியும் செய்யாத சூழ்ச்சியா!!!செங்கோட்டையன் தானாக பேசவில்லை..இப்ப மாட்டிகொண்டு முழிக்கிறார்.உரிய மரியாதையை காப்பாற்றி கொள்ள தவறிவிட்டார்.


PV முத்தூர்
அக் 04, 2025 08:54

அதிமுகாவை விட்டு தினகரன் பின்னால்போய் பதவியைஇழந்து காணாமல் போனார்கல் (Except Senthil Balaji), பன்னீர் பின்னால் போனவர்கள் மீண்டும் அதிமுகாவில் இனைய தண்ணீர் குடுத்துக்கெண்டிருக்கிறாற்கள். MGR, JJ விசுவாசி என்றுகூறுபவர்கள், JJ வால் நீக்கப்பட்டவர்களை கட்சிக்குல் சேர்க்க முயள்வதேன்?


மோகனசுந்தரம்
அக் 04, 2025 06:30

ஹலோ செங்கோட்டையன், உம்முடைய திறமை இவ்வளவுதானா? நீராவது எப்படியாவது அந்த பழனியாண்டியை இறக்குவாய் என்று நினைத்தேன். நீரும் ஒன்றுக்கும் உதவாமல் போய்விட்டாய்.


சமீபத்திய செய்தி