உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உதயநிதியிடம் ஏழரை கேள்விகள்

உதயநிதியிடம் ஏழரை கேள்விகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வந்த காவிரியால் பயிர்கள் வளரும் வேகத்தை காட்டிலும், வராத காவிரியால் ஒரு நாளில் ஒரே நாளில் இந்தியா முழுக்க விஸ்வரூபம் எடுத்து நின்ற தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் இக்கேள்விகளை நீட்டுகிறது இடைத் தேர்தலுக்கு காத்திருக்கும் தமிழகம்1. அறுபது ஆண்டுகால திராவிட ஆட்சியில் 'பகுத்தறிவு' பெற்ற கூட்டம்தான் அன்று தஞ்சாவூர் மேடைக்கு கீழே நின்றிருந்தது எனில், 'அவர்கள் என்னவாக புரிந்து கொண்டிருப்பர்' என்றெண்ணி, 'காவிரியைச்சொன்னேன்' என்று விளக்கினீர்கள்?2. 'தமிழர் நலனுக்காகவே வாழும் உதயநிதி,தஞ்சாவூரில் இருந்து திரும்பி, தந்தை பார்த்து, உறங்கி எழுந்து, சட்டசபை போய் திரும்பியதும், உடன்பிறப்புகளால் தாக்கப்பட்ட திருநெல்வேலி வாலிபரிடம் பேசுவார்' என்ற எங்கள் நம்பிக்கை ஏன் தோற்றது?3. 'அரசு துறையில் யாராவது லஞ்சம் கேட்டால் என் பெயரைச் சொல்லுங்கள் என இன்றைய முதல்வர் சொல்வது போல், நம் ஆட்சிக்காலத்திலும் நாம் சொல்லி இருக்கலாமோ' என்ற எண்ணம் ஒருமுறையேனும் எட்டிப் பார்த்ததா? 4. 'தி.மு.க., ஆட்சி திட்டங்களை தொடர்வதால், 'ஊரான் வீட்டு நெய்யில் தன் வீட்டிற்கு இனிப்பு செய்கிறார் முதல்வர்' என்கிறாரே உதயநிதி, அண்ணாதுரை துவக்கியதுதானே தி.மு.க.,' எனக் கேட்பவர்களுக்கு 'நறுக்'கென என்ன சொல்ல?5. உங்களது முன்னாள் கூட்டணி கட்சியினர் உங்களின் 'தண்ணீர்' பேச்சை கண்டித்ததற்காய்திருச்சியில் எழுந்த உங்களது வருத்தம், 'இவர்கைதுக்கு ஏன் நமக்கு 'கண்ணீர்' வரவில்லை' என்று எங்களை சிந்திக்கத் துாண்டியதை நீங்கள் உணர்ந்தீர்களா? 6. 'உதயநிதி போல் நீங்களும் என் பிள்ளைகளே'என தொண்டர்களை ஈர்க்கும் உங்கள் தலைவர், 'உதயநிதி தவறாக பேச மாட்டார்' என்கிறார்; தன் பிள்ளைகளாய் அவர் நினைக்கும் உங்கள் உடன்பிறப்புகள் உங்களைப் போல்தானா? 7. 'செய்த தவறைவிட அந்த தவறை நியாயப்படுத்த முயற்சிப்பது குற்றம்' என,ஆளுங்கட்சியை நீங்கள் எதற்காவது விமர்சித்தால் கட்டாயம் நாங்கள் சிந்திப்போம்; இதையே நாங்கள் சொன்னால் சற்றேனும் நீங்கள் சிந்திப்பீர்களா? 7½'கடவுள் இல்லை' சரி; 'மனிதன்' இருக்கிறானா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

athiban
ஆக 09, 2026 19:57

யாரையும் குறிப்பிட்டு சொல்லாமல் தண்ணீரை பற்றி பேசியத்திற்கே 7 1/2 கேள்விகளை கேட்கும் நீங்கள்.. 1. நீட் தேர்வு வினாத்தாள் கசிந்து, அடுத்த தேர்வு குறித்த பயத்தில் இறந்த மாணவர்களின் சார்பில் மோடியிடம் இதை கேள்விகளை கேட்டிருக்கலாமே.. 2. வாயில் நல்லா வருகிறது நான் என்ன என கூறிய தற்போதைய முதல்வரிடம் இதை கேள்வியை கேட்டிருக்கலாமே.... நீங்கள் கேட்க மாட்டீர்கள் ஏன் என்பது எல்லோருக்கும் தெரியும்


M Ramachandran
ஆக 09, 2026 19:53

7 1/2 இடம் சினிமாவில் கட்டிப்பிடி பத்தி கேட்டால் மிக மகிழ்ச்சிகியாக பதில் கூறும். மூளைக்கு எட்டாத கேள்விகள் கேட்டால் எப்படி பதில் வரும்?


M Ramachandran
ஆக 09, 2026 19:46

ஏழரை இடம் போய் ஏழரை கேள்விகளலா?


என்றும் இந்தியன்
ஆக 09, 2026 18:24

மறை நிதியிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும் ?? சுடலை மாயாண்டி ஜோசெப் கானிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?? கொடு மொழியிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்??? திருடர்கள் முரடர்கள் கயவர்கள் கட்சியில் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்????


krishna
ஆக 09, 2026 16:54

NEENGA VERA ZERO KNOWLEDGE ULLA SENGAL THIRUDAN KITTAYO THUNDU SEATTU KITTAYO KELVI KETPPADHU MUTTALTHANAM.


Vijay Anand
ஆக 09, 2026 16:20

உதயநிதி


HoneyBee
ஆக 09, 2026 14:38

அப்ப கட்டுமரம் எத்தனை ஊர்ல தண்ணீர் விட்டு வந்ததுன்னு ஒரு கேள்வியை கேளுங்கள்.. பணம் கொடுக்காம ஓடி வந்துச்சுன்னு சொல்ல சொல்லுங்க


சூர்யா
ஆக 09, 2026 14:32

ஏழரை கேள்விகள் என்ன? ஏழாயிரம் கேள்விகள் கேட்டாலும் இவரைப் போன்றவர்கள் ஆபாசப் பேச்சு பேசுவதை நிறுத்தவே மாட்டார்கள்.


HoneyBee
ஆக 09, 2026 14:17

அந்த காலகட்டத்தில் உங்க கட்டுமரம் எத்தனை இடங்களில் தண்ணீர் விட்டு நன்றாக க


SUBBU,MADURAI
ஆக 09, 2026 13:39

அப்படியே மெரினாவில் துயில் கொண்டிருக்கும் தாத்தா கருணாநியிடம் அறிஞர் அண்ணா என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்டவரிடம் காஞ்சிபுரம் நடராசன் யார் என கேட்க சொல்லுங்கள்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை