உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஸ்டாலின் கேட்கும் ஏழு கேள்விகளும்; தேர்தல் கமிஷன் தரப்பு பதில்களும்

ஸ்டாலின் கேட்கும் ஏழு கேள்விகளும்; தேர்தல் கமிஷன் தரப்பு பதில்களும்

சென்னை: 'இண்டி' கூட்டணியினர் தேர்தல் கமிஷனை நோக்கி எழுப்பி இருக்கும் கேள்விகளுக்கு விடை அளிப்பதற்கு பதிலாக, தலைமை தேர்தல் கமிஷனர் செய்தியாளர் சந்திப்பு நடத்தி இருக்கிறார். இதனால், பின்வரும் கூடுதல் கேள்விகளை, அவரது பேட்டி எழுப்பி இருக்கிறது என, தலைமை தேர்தல் கமிஷனருக்கு முதல்வர் ஸ்டாலின், ஏழு கேள்விகளை எழுப்பியுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tfpvacnf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 ஆனால், வெளிப்படையான தேர்தல் நடத்தப்பட்டதாலேயே வெற்றி பெற்று, முதல்வர் ஆகி இருந்தும், எப்படி இப்படிப்பட்ட கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார் என தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தரப்பு சந்தேகம் எழுப்புகின்றனர். முதல்வரின் அறிக்கை வாயிலான கேள்விகளும், அதற்கு தேர்தல் கமிஷன் தரப்பு அளித்த பதில்களும்: 1 வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்? வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியது மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான். இதில் ஏதும் தவறு இருந்தால், அரசியல் கட்சிகளின் முகவர்கள், தேர்தல் கமிஷனுக்கு சுட்டிக் காட்ட வாய்ப்பு வழங்குகிறது. அப்போது, எவ்வித குற்றச்சாட்டும் வைக்காமல், திடுமென குற்றம்சாட்டுவது ஏன்? 2 புதிய வாக்காளர் பதிவு, வழக்கத்திற்கு மாறாக குறைவாக உள்ளது. இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா; தகுதிக்குரிய நாளில், 18 வயது நிறைந்த இளம் வாக்காளர்கள் எத்தனை பேர் சேர்க்கப்பட்டனர் என்பதை சொல்லும் தரவுகள் ஏதாவது இருக்கின்றனவா? பதினெட்டு வயது நிரம்பியோர், ஓட்டுரிமைக்காக சிறப்பு முகாம்கள் அல்லது அதற்கென இருக்கும் அலுவலகங்களில் விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்த்து, அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது, வயது வாரியாக வாக்காளர்கள் விபரம், புதிதாக சேர்க்கப்பட்டோர், நீக்கப்பட்டோர் விபரங்களும் வெளியிடப்படுகின்றன. இது தொடர்பான, 'சிடி'களும் அங்கீகாரம் பெற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படுகின்றன. இது முதல்வருக்கும் தெரியும் தானே? 3 வாக்காளர் பதிவு சட்டம் 1960ன் கீழ் கொடுக்கப்பட்ட விசாரணை மற்றும் இரண்டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறையால், வரும் பீஹார் சட்டசபை தேர்தலில், பெருமளவிலான வாக்காளர்களை நீக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த விவகாரத்தை, தேர்தல் கமிஷன் எவ்வாறு தீர்க்க போகிறது? அப்படியெல்லாம் திட்டமிட்டு எதுவும் செய்யப்படவில்லை என, தேர்தல் கமிஷனர் ஏற்கனவே தெரிவித்து விட்டார். கூடவே, இது தொடர்பான புகார்கள் எதுவும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 4 பிற மாநிலங்களில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும்போது, இந்த நடைமுறை சிக்கல்களை தேர்தல் கமிஷன் கணக்கில் கொள்ளுமா? எந்த குறையாக இருந்தாலும், தேர்தல் கமிஷன் கவனத்துக்கு ஆதாரத்துடன் தெரியப்படுத்தினால், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஒவ்வொரு முறை வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது, உரிய அவகாசம் அளிக்கப்பட்டு, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, முறைப்படியே பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. 5 கடந்த மே 1ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி, மறைந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குமாறு, தேர்தல் கமிஷனிடம், ஜூலை 17ம் தேதி நாங்கள் முறையிட்டோம்; இது எப்போது நிறைவேற்றப்படும்? ஏற்கனவே இறந்து போனோர், வெளி மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தோர் பீஹார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுள்ளனர். இப்படி நீக்கியதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, நாங்கள் கூறுவோரை நீக்குங்கள் என்றும் கூறுகிறீர்கள். உங்கள் செயல்பாடே குழப்பமாக உள்ளதே? 6 வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக, 'ஆதார்' அட்டையை ஏற்க தேர்தல் கமிஷனை தடுப்பது எது? ஆதார் அட்டையை, 12 வாக்காளர் அடையாள ஆவணங்களில் ஒன்றாக பயன்படுத்தலாம் என்பதில், தேர்தல் கமிஷன், இதுவரை எவ்வித மாற்றமும் கொண்டு வரவில்லை. இந்த கேள்விக்கான தேவையே எழவில்லை. இருந்தபோதும், உச்ச நீதிமன்றமும் ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள ஆவணங்களில் ஒன்றாக ஏற்குமாறு கூறியுள்ளது. 7 நியாயமான தேர்தல்கள் என்பதே, தேர்தல் கமிஷனின் இலக்கு என்றால், அது மேலும் வெளிப்படை தன்மையுடனும், வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே? அப்படியொரு நடை முறை இருப்பதால் தானே, தவறு என சந்தேகம் இருக்குமானால், ஆதாரத்துடன் தேர்தல் கமிஷனை அணுகலாம் என கூறி உள்ளனர். ஓட்டுப்பதிவையும், 'சிசிடிவி' வாயிலாக பதிவெடுப்பதோடு, நேரலையிலும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்படுகிறது. அனைத்து கட்சி முகவர்களின் ஒப்புதலோடுதான், தேர்தல் தொடர்பான அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இப்படி எல்லா விஷயங்களிலும் வெளிப்படைத்தன்மையுடன் தான் தேர்தல் கமிஷன் செயல்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Gopal
ஆக 28, 2025 07:54

அப்போ ஸ்டாலின்/திமுக வெற்றி பெற்றது வாக்காளர்கள் திருட்டுநால்தானா?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 20, 2025 15:41

அசிங்கப்பட்டான் டா கிம்ச்சை அரசன் .....


Ramesh Sargam
ஆக 19, 2025 22:01

முதல் கேள்விக்கான பதிலிலேயே தேர்தல் கமிஷன் முதல்வரின் மூக்கை சரியாக உடைத்துவிட்டது. இரும்புக்கரம் துருப்பிடித்துப்போய்விட்டது. இப்பொழுது மூக்கும் உடைபட்டுவிட்டது.


K.n. Dhasarathan
ஆக 19, 2025 20:38

தேர்தல் கமிஷன் எந்த ஒரு கேள்விக்கும் நேரடியாக பதில் சொல்லவில்லை, எதோ சுற்றி வளைத்து சொல்கிறது, ஏன் வோட்டர் லிஸ்ட் தப்பும் தவறுமாக இருக்கிறது என்றால், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான் எடுத்தார்கள் என்கிறார்கள், அப்போ நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? செக் செய்யனுமா, வேண்டாமா? பதில் சொல்லுங்கள் என்றால், திருப்பி எங்களிடம் தான் கேள்வி கேட்கிறீர்கள், அல்லது மிரட்டுகிறீர்கள், சரியான பதில்கள் இல்லை.


kamal 00
ஆக 19, 2025 20:32

கொத்தடிமை மங்கிகள் நாமளும் எதாவது கேப்போம் ன்னு கேட்டு அசிங்க பட்ட தருணம்


spr
ஆக 19, 2025 17:46

பொதுவாக தேர்தல் ஆணையத்தின் பணிகள் சிறப்பாகவே இருக்கிறது. தமிழகத்தில், மாநில அரசு ஊழியர்களாக இருந்தும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியாளர்கள் பெரும்பாலும் சிறப்பாகவே பணி புரிகிறார்கள். அந்தந்தப் பகுதியில் உள்ள மக்கள் நலப்பணி மன்றங்களும் வாக்காளர் பட்டியலின் ஒரு பிரதியைப் பெற்று அவரவர் பெயர் இருக்கிறதா என்பதனை உறுதி செய்து கொள்ள உதவுகிறார்கள் இதில் எல்லாம் தவறு நடப்பதில்லை ஆனால் பெயர் நீக்கம் செய்வதில் எவரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை இடமாற்றம் செய்பவர் புதிய விண்ணப்பம் அளிக்கும் போது அது தாற்காலிகமான ஒன்றானாலும், முந்தைய முகவரியையும் வாக்காளர் பெயரையம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கலாமே தேர்தல் ஆணையத்துக்கு என்று பொறுப்பான களப்பணியாளர்கள் இல்லாத நிலையில் இது சாத்தியமில்லை ஆனால் நாட்டில் வேலை வாய்ப்பு தேடும் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரலாமே கணிணி மூலம் பல தவறுகளைக் குறைக்கலாம் எதிரிக்கட்சிகள் குறையினைச் சுட்டிக் காட்டுவது தேர்தல் ஆணையத்துக்குச் செய்யும் உதவி சீர் செய்தால் உலகின் மிகப் பெரிய மக்கள் தொகை உள்ள குடியாட்சி நாடான இந்தியா சிறப்பான தேர்தல் முறைகள் மூலம் அதனைக் காக்கிறது என்ற பெருமை அதிகரிக்குமே இவை அனைத்துக்கும் நிதி பற்றாக் குறை ஒரு காரணம் என்றால் தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகளுக்கு வரி போட்டு அதனை சீர் செய்யலாமே


naranam
ஆக 19, 2025 16:52

விடியாத மாடல் அரசின் முதல்வருக்கு இது ஒரு நெற்றியடி. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அவருக்கு விழப்போவது பெரும் மரண அடி..


Ramalingam Shanmugam
ஆக 19, 2025 15:58

யார் எழுதி கொடுத்தது


sankar
ஆக 19, 2025 12:52

"வெளிப்படையான தேர்தல் நடத்தப்பட்டதாலேயே வெற்றி பெற்று, முதல்வர் ஆகி இருந்தும், எப்படி இப்படிப்பட்ட கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்"- நெத்தியடி


P. SRINIVASAN
ஆக 19, 2025 12:38

அது தேர்தல் கமிஷன் இல்ல.. பிஜேபி கமிஷன் ... எல்லாம் பொய் பித்தலாட்டம்


sankar
ஆக 19, 2025 13:15

சோ - திமுக பித்தலாட்டம் செய்தது என்று சொல்கிறீர்கள் - சரியா


vadivelu
ஆக 19, 2025 14:14

சூஸ்தாம்


vivek
ஆக 19, 2025 15:38

திருட்டு திராவிடம் இதே போல கள்ள ஒட்டு போட்டு செய்தது சீனு


vivek
ஆக 19, 2025 16:46

ஶ்ரீனிவாசன் களி திங்க ஆசையா


புதிய வீடியோ