உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இறந்தவரின் பர்சில் பணம் லபக்கிய எஸ்.ஐ., சஸ்பெண்ட்

இறந்தவரின் பர்சில் பணம் லபக்கிய எஸ்.ஐ., சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவில் ரயில் விபத்தில் இறந்தவரின் பர்சிலிருந்து, 3,000 ரூபாய் திருடிய எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இதில் கோகோய், 27, என்ற தொழிலாளி கடந்த 19ம் தேதி எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா அருகே ரயிலில் சென்று கொண்டிருந்தபோது தவறி விழுந்து இறந்தார். உடலைக் கைப்பற்றிய ஆலுவா போலீசார், அவரது மொபைல் போன், பர்ஸ் உள்ளிட்ட உடைமைகளை போலீஸ் ஸ்டேஷனில் வைத்துள்ளனர். பர்சில், 8,000 ரூபாய் இருந்ததாக போலீசார் பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில், சில நாட்களுக்கு முன், கோகோயின் உடைமைகளை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தபோது, பர்சில் 5,000 ரூபாய் மட்டுமே இருந்தது. தொடர்ந்து, போலீஸ் ஸ்டேஷனில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், எஸ்.ஐ., சலீம், பர்சில் இருந்து பணத்தை எடுத்த காட்சி பதிவாகி இருந்தது.இதையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஏற்கெனவே அவர் மீது பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

aaruthirumalai
ஏப் 02, 2025 23:27

அட கம்முனாட்டி


தமிழன்
ஏப் 02, 2025 21:09

பிணம் தின்னி கழுகு இவன். இறந்தவரிடமிருந்து திருடிய இந்த ஈன ஜென்மம் தின்பது சாப்பாடு இல்லை.இவனோட அம்மா இப்படி இறந்திருந்தாலும் இப்படித்தான் திருடியிருப்பான்


நிக்கோல்தாம்சன்
ஏப் 02, 2025 20:37

என்ன பொழப்பு சலீம் , இதற்கு நீங்க திமுகவில் சேர்ந்து ராசாவின் தொண்டனாய் இருந்திருக்கலாம்.


Rasheel
ஏப் 02, 2025 16:12

80000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவன், இறந்த தின கூலியிடம் இருந்து திருடியது கேவலம். அதுவும் அமைதி வழியில் ரம்ஜான் மாதத்தில்


அப்பாவி
ஏப் 02, 2025 15:18

கேரளத் திராவிடன்.


ஆரூர் ரங்
ஏப் 02, 2025 14:40

... போன இடத்தில் பெண்ணிடம் காசைக் பிடுங்கிய கதை நினைவுக்கு வருகிறது.


Ramesh Sargam
ஏப் 02, 2025 12:29

இப்படி லபக் பல காலமாக நடக்கிறது. ஆனால் இப்பொழுதுதான் முதல் செய்தி.


KRISHNAN R
ஏப் 02, 2025 12:10

இது என்ன.... ஜுஜுபி... சிலர்..... ஒரு சினிமாவில் தங்கவேலு.. எமலோகம் போய்.... ரகளை செய்த காட்சிகள் வரும்... அது போல அங்கு சென்றாலும் ஆட்டை போடு ம்.. நபர்களும் இருக்கலாம்


Petchi Muthu
ஏப் 02, 2025 12:03

எஸ்.ஐ., மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்


Keshavan.J
ஏப் 02, 2025 11:54

ரம்ஜான் நோன்பு மாதத்தில் இவர் இந்த செயலை செய்துள்ளார். என்ன கொடுமை சலீம் இது.


Bahurudeen Ali Ahamed
ஏப் 02, 2025 17:03

ரம்ஜான் மாதத்தில் மட்டுமல்ல எப்பொழுதுமே இதுபோன்ற கேவலமான செயலை செய்யக்கூடாது அதுவும் இறந்தவரின் பணத்தை திருடும் அவலம் சீ மோசமானவன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை