உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வந்தார் ஸ்ரீ காந்திமதி; அதிர்ந்தார் அன்புமணி: பா.ம.க.,வில் சம்பந்திகளின் மல்லுக்கட்டு

வந்தார் ஸ்ரீ காந்திமதி; அதிர்ந்தார் அன்புமணி: பா.ம.க.,வில் சம்பந்திகளின் மல்லுக்கட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமதாஸ் கூட்டிய பா.ம.க., செயற்குழு கூட்டத்தில், தன் மூத்த மகள் ஸ்ரீ காந்திமதியை மேடை ஏற்றினார். இது, மகன் அன்புமணிக்கு, ராமதாஸ் வைத்த 'செக்' என பா.ம.க.,வினர் கூறுகின்றனர். குடும்ப பிரச்னையை சமாளிக்க, தன் மகளை அரசியலுக்கு கொண்டு வந்ததுடன், மருமகள் சவுமியாவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மகளை வரும் சட்டசபை தேர்தலில் களமிறக்கவும், ராமதாஸ் முடிவு எடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

அதிருப்தி

பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம், 2024 டிச., 28ல் நடந்தது. அப்போது, பா.ம.க., நிறுவனர் ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீ காந்திமதியின் மகன் முகுந்தனை, இளைஞர் அணி தலைவராக ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அந்த மேடையிலேயே, ராமதாசின் மகன் அன்புமணி அதிருப்தி தெரிவித்தார். அதன் பின்னர் தான் தந்தை, மகன் மோதல் அடுத்தடுத்து தீவிரமடைந்தது. இருவரும் மாறி மாறி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை திண்டிவனத்திலும், சென்னை பனையூரிலுமாக நடத்திக் கொண்டு உள்ளனர். பா.ம.க.,வை, 1989 ஜூலை 16ல் துவங்கிய ராமதாஸ், 'என் குடும்பத்தில் இருந்து யாரும் கட்சிக்குள் வரமாட்டார்கள். ஒரு வேளை அப்படி நடந்தால், என்னை சவுக்கால் அடியுங்கள்' என்றார். பின் மகன் அன்புமணியை கட்சிக்குள் கொண்டு வந்து, மத்திய அமைச்சர் பதவி - முதல்வர் வேட்பாளர் என அறிவித்தார். இது கட்சியிலும், வெளியேயும் விமர்சனத்தை உண்டு பண்ணியது. கட்சி தலைவரானதும் அன்புமணி, அவரது மனைவி சவுமியாவை கட்சிக்குள் கொண்டு வந்ததோடு, 2024 லோக்சபா தேர்தலில் வேட்பாளராகவும் களமிறக்கினார். இதனால், கட்சிக்குள் இயற்கையாகவே சவுமியாவின் ஆதிக்கம் வளரத் துவங்கியது. இது, ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ராமதாஸ் துவக்கத்தில் வெளிப்படுத்திய கருத்துக்கு எதிராக இருப்பதாக பலரும் முணுமுணுத்தனர். இதற்கிடையில் சமீபத்திய நிகழ்வுகளால், அன்புமணி - சவுமியா ஆகியோர் மீது உச்சகட்ட கோபத்தில் இருக்கும் ராமதாஸ், தன் பழைய காலத்து கருத்துக்கு எதிராகத் தானே, தன் மூத்த மகள் ஸ்ரீ காந்திமதியை கட்சிக்குள் கொண்டு வந்து, தீவிர அரசியலில் களமிறக்க முடிவெடுத்துள்ளார்.

சினிமா பாடல்

அதற்கான துவக்கம் தான், ராமதாஸ் கூட்டிய செயற்குழு கூட்டத்தில், ஸ்ரீ காந்திமதியை மேடை ஏற்றியது. அடுத்த கட்டமாக, கட்சியில் பொறுப்பு வழங்கி முன்னிலைப்படுத்தவும் ராமதாஸ் முடிவு செய்துஉள்ளார்.தேர்தலுக்கு 'ஏ' மற்றும் 'பி' படிவங்கள் வழங்குவது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் தனக்கே உள்ளது என ராமதாஸ் அறிவித்துள்ள நிலையில், வரும் சட்டசபை தேர்தலில், மகள் ஸ்ரீ காந்திமதிக்கு 'சீட்' வழங்கி, வேட்பாளராக களமிறக்கவும் ராமதாஸ் முடிவெடுத்து உள்ளார்.கட்சியில் தனக்கு எதிராக மல்லுகட்டும் மகன் அன்புமணியை, அவருடைய சகோதரியை வைத்தே செக் வைக்கும் திட்டம் தான் இது என, ராமதாசின் செயல்திட்டம் அறிந்த கட்சியினர் கூறுகின்றனர். இது குறித்து, கும்பகோணத்துக்கு கட்சி நிகழ்ச்சிக்காக சென்றிருந்த ராமதாசை பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ''போகப் போகத் தெரியும்; இந்த ராமதாசின் ஆவல் புரியும்,'' என, சினிமா பாடலைப் பாடி பதில் அளித்தார். ஆக, கட்சிக்குள் ஸ்ரீ காந்திமதியை கொண்டு வந்து, அன்புமணிக்கு எதிராக அவரை தீவிர அரசியலில் களம் இறக்கி இருப்பதை, ராமதாஸ் பாடல் வரிகள் மூலமாக சொல்லி இருப்பதாகவும் கட்சியினர் கூறுகின்றனர்.

அதிரடி

ராமதாசின் இந்த அதிரடியைத் தொடர்ந்து, தன் சகோதரி ஸ்ரீ காந்தி மதியின் அரசியலை எதிர்கொள்வது குறித்து, கட்சியினருடன் அன்புமணி ஆலோசித்து வருவதாக கட்சி வட்டாரங்கள் கூறின. ஸ்ரீ காந்திமதி, பா.ம.க., தலைவர் அன்புமணியின் சகோதரி மட்டுமல்ல; அவருடைய இரண்டாவது மகன் ப்ரீத்திவனைத்தான் அன்புமணியின் மகள் சம்யுக்தாவுக்கு திருமணம் செய்துள்ளனர்.அந்த வகையில் ஸ்ரீ காந்திமதி, அன்புமணியின் சம்பந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

மருமகளுக்கு வேறொரு நீதியா?

அன்புமணி ஆதரவாளர்கள் கூறியதாவது:செயற்குழு கூட்ட மேடையில், மகள் ஸ்ரீ காந்திமதியை அமர வைத்துள்ளார் ராமதாஸ். 'குடும்ப பெண்கள் அரசியலுக்கு வருவதை விரும்பாததால், சவுமியா அரசியலுக்கு வர வேண்டாம் என சொன்னேன்; தர்மபுரியில் சவுமியா போட்டியிட்டதையும் விரும்பவில்லை' என ராமதாஸ் கூறியிருந்தார், இந்நிலையில், அவரே அதை மீறி, ஸ்ரீ காந்திமதியை அரசியல் மேடையில் ஏற்றிஇருப்பது, ராமதாசின் அரசியல் தடுமாற்றம் தான். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

RAVISHANKAR V
ஜூலை 17, 2025 17:37

Yes


RAVISHANKAR V
ஜூலை 17, 2025 17:34

Dr Ramadoss is unreliable


RAVISHANKAR V
ஜூலை 17, 2025 17:32

I think Dr Ramadoss will wipe out PMK from TN politics. Whatever happened at home , HE SHOULD NOT BETRAY/CRITICISE about HIS OWN DAUGHTER-IN-LAW equivalent to daughter in third rated comments. She is also educated . HE IS A CHAMELEON like Premalatha. Money is MORE IMPORTANT to them. Kafivetti Guru was harassed by him. Now, he says anbumani harassed him. GURU family already complained abt Ramadoss only


நிக்கோல்தாம்சன்
ஜூலை 12, 2025 22:10

வன்னிய கிருஸ்துவச்சியான நானே தேசியத்தை ஆதரித்த அதனை தூக்கி பிடிக்கும் கட்சியை ஆதரிக்கிறேன் , அய்யா ராமதாசுக்கு ஏன் இப்படி ஒரு இழி நிலையில் யோசனை ?


Ragupathy
ஜூலை 12, 2025 14:19

பாமகவை விடபச்சோந்தி எவாவளவோ பரவாயில்லை...


மணியன்
ஜூலை 12, 2025 09:30

பாட்டாளி வன்னிய மக்களே பாஜக அஸ்வத்தாமன் வழியில் தேசியத்தை ஆதரியுங்கள் கண்டிப்பாக அனைத்து மக்களும் வாழ்வில் ஏற்றம் பெறலாம்.தற்போதையை தாங்க முடியாத லஞ்ச ஊழலை ஒழிக்க இரு த்ராவிட கட்சிகளும் இல்லாமல் போக வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 13, 2025 11:41

நீங்க சுலபமா சொல்லிடீங்க , ஒரே நாள் நான் தமிழக டிவி பார்த்தேன் , எனது யோசிக்கும் சிந்தனையே மாறிவிட்டது , கொலைகாரர் , கொள்ளையாளர் , கற்பழிப்பாளர் எல்லாம் நல்லவர்களாக இருட்டடிப்பு செய்யப்பட்டு என் கண்ணுக்கு காட்சிப்படுத்தப்படுகிறார்கள்


Subburamu Krishnasamy
ஜூலை 12, 2025 08:28

Ramadass is an Intercontinental . There is no principles in his political activities. He is exploiting the caste card for his personal gains. Not a social reformer. Basically PMK is a 100 percent family party now. Second line leader Mani tried to gain power in PMK by creating division between the son and father. Now father daughter power combination spoiled Mani's design. For all the political party heads family is superior than others. Karuna Stalin Udhaya Inba Gopalu Durai Ramadass Anbumani Kandhimathi EPS Mithun Paneer Ravindranath Vijayakanth Premalatha VijayaPrabakaran Ponmudi TRBalu, Veerachamy, Nehru, Durai Murugan PHPandyan Periyasamy sons and several others. Tamizhagam voters are politically illiterates, slaves sentimental idiots too


sankaranarayanan
ஜூலை 12, 2025 08:21

பா.ம.க.,வை, 1989 ஜூலை 16ல் துவங்கிய ராமதாஸ், என் குடும்பத்தில் இருந்து யாரும் கட்சிக்குள் வரமாட்டார்கள். ஒரு வேளை அப்படி நடந்தால், என்னை சவுக்கால் அடியுங்கள் என்றார். இப்போது யாரை சவுக்கால் அடிப்பது அரசியல்வாதிகளின் பேச்சு பொழுது விடுஞ்சால் போச்சு என்ற பழமொழிக்கு இணங்கவே உள்ளது இவர்களுக்கு கட்சியில் இருப்பதோ இவர்களது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அதுவும் இரு பிள்வுப்பட்ட நபர்கள் ஏனிந்த வீரா வேஷம் உப்பு சப்பில்லாத ஒரு காட்சியாகிவிட்டதே


Arjun
ஜூலை 12, 2025 07:48

கட்சியில் சேர்ந்து 4மாதங்களில் முகந்தனுக்கு கட்சி முக்கிய பொறுப்பு எப்படி கொடுக்க முடியும் கட்சிக்காக பலவருடங்களாக உழைத்த பல இருக்கும் பொழுது இதைதான் அன்புமணி கேட்டார். நியாயமான கேள்விதானே? இது கழகம் இல்லையே .


kr
ஜூலை 12, 2025 06:16

Looks like the old man is playing a carefully scripted drama to ensure that his family completely controls this party. Son, daughter in law, daughter, grandson all will have the important posts in the party once this drama ends.


crap
ஜூலை 12, 2025 08:17

மாறுபட்ட கோணத்தில் பார்க்கிறீர்கள். உண்மைதான். கட்சியை இரண்டாக்கி குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பதவி கொடுத்து, மீண்டும் கண்கள் பனித்து இதயம் இனித்து ஒரே கட்சியாய் சேர்ந்துவிடுவார்கள்.


சமீபத்திய செய்தி