உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது: விஜய்க்கு இலங்கை அமைச்சர் பதில்

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது: விஜய்க்கு இலங்கை அமைச்சர் பதில்

கொழும்பு: 'கச்சத்தீவு, இலங்கைக்கு சொந்தமானது. தமிழகத்தில் தேர்தல் நேரங்களில், கச்சத்தீவு பற்றி பேசுவதை, அரசியல் தலைவர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்,' என, இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் தெரிவித்து உள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவக்கியுள்ள நடிகர் விஜய், வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தயாராகி வருகிறார். இதற்காக, கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை கடந்த 21ல், மதுரையில் நடத்தினார். அதில் பேசிய விஜய், 'தமிழக மீனவர்கள் 800 பேர், இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாக்க, பிரதமர் மோடியும், மத்திய அரசும் தவறி விட்டன. தமிழக மீனவர்களின் நிரந்தர பாதுகாப்புக்கு, இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பது மட்டுமே ஒரே தீர்வு' என கூறினார். இந்நிலையில், த.வெ.க., தலைவர் விஜயின் இந்த பேச்சுக்கு, பதிலளிக்கும் விதமாக, இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் கூறியதாவது: கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது. இந்த நிலை, ஒருபோதும் மாறாது; எதிர்காலத்திலும், இலங்கைக்கு சொந்தமானதாகவே கச்சத்தீவு இருக்கும். தமிழகத்தில் புதிதாக கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய், கச்சத்தீவை திரும்பப் பெறுவது பற்றி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், தேர்தல் நடைபெறும் நேரங்களில் எல்லாம், ஓட்டுகளை பெறுவதற்காக, அங்குள்ள அரசியல் கட்சியினர், இதுபோன்று பேசுவதும், அறிக்கை விடுவதும் வழக்கம். இது முதல் முறை அல்ல; கடந்த காலங்களில் கூட, தேர்தல் பிரசார மேடைகளில் இதுபோன்று பலர் பேசி உள்ளனர். எனவே, விஜயின் பேச்சை பொருட்படுத்த தேவையில்லை. இந்த விஷயத்தில், துாதரக ரீதியிலான கருத்துகள் மட்டுமே முக்கியம். இந்திய அரசிடம் இருந்தோ, துாதர்களிடம் இருந்தோ, கச்சத்தீவை திரும்பப் பெறுவது பற்றிய எந்த கருத்தும் வரவில்லை. மேலும், இந்திய தரப்பில் இருந்து, துாதரக ரீதியாக, எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Tamilan
ஆக 30, 2025 00:30

மோடிக்கு சவால் விடுகிறார் . மத்திய அரசு வேடிக்கைபார்ப்பது ஏன்


SIVA
ஆக 29, 2025 20:17

இவரு எவ்வளுவு கத்தினாலும் ஆதவ் அர்ஜுன் ரெட்டி என்ற பெயரில் ஒரு ஆப்பு அர்ஜுனாவை திமுக அவர் அருகில் வைத்துஉள்ளது , இது கூட தெரியாமல் அவர் அரசியல் செய்கின்றார் ....


Rathna
ஆக 29, 2025 18:22

நம்ம சினிமா ஸ்டைலா உதார் விட்டா, சிங்களவன் சிரிப்பான்.. கொடுத்தவன் உங்க ஆளுங்கதானே என்று சினிமா வசனம் பேசினாலும் ஆச்சரியப்பட தேவையில்லை.


ராம் சென்னை
ஆக 29, 2025 17:49

விஜய்க்கு எழுதி கொடுத்ததை சினிமா வசனம் போல் பேசி உள்ளார் இதை பெரிது படுத்த வேண்டாம்


Vasan
ஆக 29, 2025 16:32

Trump should intervene and solve this decades old problem.


theruvasagan
ஆக 29, 2025 15:46

ஹீரோவா வேஷம் போட்டு வெறும் கையால் நூற்றுக்கணக்கான எதிரிகளை பந்தாடுகிற கூத்தாடியை தெய்வமா கும்புடுற விசிலடிச்சான் குஞ்சுகள் கச்சத்தீவை மீட்டுவர ஹீரோவிடம் கோரிக்கை வைத்தால் அவர் தனது ஹீரோதனத்தை கட்டி வென்றுவர மாட்டாரா.


தமிழன்
ஆக 29, 2025 14:24

ஆமா ராஜா அன்னிக்கு உங்களுக்கு சும்மா எழுதி கொடுத்தாங்க இப்ப அதை கேக்கறாங்க இல்லைனா ஒரு ஒப்பந்தம் போடு மீன் பிடிக்க மட்டும் அனுமதி


theruvasagan
ஆக 29, 2025 15:41

அன்னிக்கி சும்மா எழுதிக் கொடுததவனுக யாரோ அவங்ககிட்டதானே மீட்டுத்தர கேட்கணும். வாங்கினவன் கிட்ட கேட்க நியாயமேயில்லை.


Barakat Ali
ஆக 29, 2025 13:41

பல வருடங்களுக்கு முன்பு கருணாநிதி கச்சத்தீவை மீட்கவேண்டும், தமிழ் ஈழம் வேண்டும் என்று பேசினார் .... ஒரு இலங்கை அமைச்சர் அதற்குச் சொன்ன பதில் [தனித் தமிழ்நாடு கோரிக்கை வைத்த கருணாநிதி முதலில் அதை அடைந்த பிறகு கருணாநிதி கச்சத் தீவைப்பற்றியோ, தனி ஈழம் பற்றியோ பேசலாம்] என்று கூறினார் .... அதற்குத் தானைத் தலைவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை .....


நாஞ்சில் நாடோடி
ஆக 29, 2025 11:49

சினிமாவில் ஹீரோ, அரசியலில் காமெடியன்...


முருகன்
ஆக 29, 2025 09:54

இது இங்கே கச்ச தீவை வைத்து அரசியல் செய்யும் அனைத்து கட்சிகளுக்கும் பெருந்தும் அப்படித்தானே


vivek
ஆக 29, 2025 10:47

அது திமுக என்று நேராக சொல்லேன்...


முருகன்
ஆக 29, 2025 16:15

நீ இருக்கும் போது நான் எதற்கு சொல்ல வேண்டும்


vivek
ஆக 29, 2025 16:41

நீ நேரா சொன்னா இருநூறு வராதா முருகா


T.sthivinayagam
ஆக 29, 2025 20:35

அதிமுகாவின் இன்னாள் முன்னாள் அல்லக்கைகளுக்கு தெளிவாக சொல்லுங்கள் அறைத்த மாவையே அறைக்கிறார்கள் இதில் ஆரியபவன் மீத வடைகள் வேறு சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்


முருகன்
ஆக 29, 2025 22:09

அதையும் நீயே வாங்கி கொள் ஆயிரம் வாங்க மறவாதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை