சென்னை: 'தென் மாவட்டங்களில் நடக்கும், 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கனிமவள கொள்ளையில், தி.மு.க.,வினருக்கு தொடர்பு இருப்பதால், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ntn2xusl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில், உரிமம் பெற்ற மற்றும் சட்டவிரோத குவாரிகள், அதிக அளவில் செயல்படுகின்றன. கேரளாவில் மணல், ஜல்லி, எம்சாண்ட் குவாரிகளுக்கு தடை விதித்து, இயற்கை வளத்தை பாதுகாக்கின்றனர். ஆனால், தமிழகத்திலிருந்து அவை சட்டவிரோதமாக, அங்கு கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையில் ஈடுபடுவோர், தி.மு.க., மற்றும் அதன் அனுதாபிகள் என்பதால், தி.மு.க., அரசு வேடிக்கை பார்க்கிறது. தென் மாவட்ட கனிமவளக் கொள்ளைக்கு, 'காட்பாதராக' ஆளும்கட்சி பெரும்புள்ளி ஒருவரும், அவரது குடும்பத்தினரும் உள்ளதாக கூறப்படுகிறது. அவரை பகைத்து கொள்ளும் சுரங்க அதிகாரிகள், கலெக்டர்கள் யாரும், தென் மாவட்டங்களில் தொடர்ந்து பணி செய்ய முடியாது என, வெளிப்படையாகவே குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. ஆனாலும், தி.மு.க., அரசு மவுனம் காக்கிறது. தென் மாவட்டங்களில் நடக்கும் கனிமவள கொள்ளையின் மதிப்பு, 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகம். இந்த உண்மைகள் அனைத்தும் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியும்; ஏதோ காரணத்திற்காக நடவடிக்கை எடுக்காமல், அந்த 'காட் பாதரை' பாதுகாக்கிறார். அவரும் பதிலுக்கு விசுவாசம் காட்டுகிறார். இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய தி.மு.க., அரசு, கனிமவள கொள்ளையர்க ளுக்கு துணை போவதை, சகித்துக் கொண்டிருக்க முடியாது. இது குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையெனில் பா.ம.க., சார்பில் போராட்டம் நட த்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.