உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அதிக கடன் வாங்கிய மாநிலங்கள்; தமிழகம் தொடர்ந்து முதலிடம்

அதிக கடன் வாங்கிய மாநிலங்கள்; தமிழகம் தொடர்ந்து முதலிடம்

புதுடில்லி: அதிகம் கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலில், கடந்த நிதியாண்டிலும் தமிழகம் முதல் இடத்தில் தொடர்வதாக ரிசர்வ் வங்கி தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தகவல்கள்

* கடந்த 2020 - 21ம் நிதியாண்டு முதல், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக, கடந்த நிதியாண்டிலும் தமிழகம் தான் அதிக மதிப்பிலான கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது* கடந்த பிப்ரவரி மாதம் வரையிலான 2024 - 25ம் நிதியாண்டின் முதல் 11 மாதங்களில், 1.01 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது* பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க, வழக்கமாக மார்ச் மாதத்தில் தான் மாநிலங்கள் அதிக கடன் பெறும் என்பதால், நிதியாண்டின் முடிவில் கடன் தொகை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது* நடப்பு நிதியாண்டில் சந்தை வாயிலாக 1,36,500 கோடி ரூபாய் கடன் பெற தமிழகம் திட்டம்* முதல் காலாண்டில் மட்டும் 20,000 கோடி ரூபாய் திரட்ட திட்டம்* 15வது நிதி கமிஷனின் நிபந்தனைகளின்படி, அதிகபட்சமாக ஒரு மாநிலத்தின் கடனுக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையேயான விகிதம் 28.70 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும்* தமிழகத்தை பொறுத்தவரை கடந்த நிதியாண்டில் இது 26.43 சதவீதமாகவும்; நடப்பு நிதியாண்டில் 26.07 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

metturaan
மே 14, 2025 14:56

பத்து வருடங்கள் பதவியில் இல்லை.. கிடைச்ச வாய்ப்பை தவறவிடுவார்களா.. கரெப்ஷன்....எங்கள் கடமை. கலெக்ஷன்.. எங்கள் கண்ணியம். கமிஷன்வாங்கியே தீருவோம் என்பது கட்டுப்பாடு......வாழ்க திராவிடம்


Gopal Kadni
மே 13, 2025 11:04

அட சந்தோஷமாக இருங்க. தமிழ்நாடு இதுதான் எப்பவுமே நம்பர் ஒண்ணு. கடும் போட்டி கடும் போட்டி...


Velan Iyengaar, Sydney
மே 13, 2025 10:35

என்ன ஒரு ஊ ஃபீஸ் கூட காணோம்...?


செல்வேந்திரன்,அரியலூர்
மே 13, 2025 14:34

பத்தாதா?


பாரத புதல்வன் தமிழக குன்றியம்
மே 13, 2025 10:08

கடன்வாங்குவதில் முதலிடம் கள்ளச்சாராய சாவில் முதலிடம் பாலியல் குற்றங்களில் முதலிடம் கனிமாவள கடத்தலில் முதலிடம் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க உதவும் நீட் தேர்வை எதிர்பதில் முதலிடம் விவசாயத்தை அழித்து ரியல் எஸ்டேட் தொழிலில் முதலிடம் பொய் உருட்டுகளை உருட்டுவதில் முதலிடம் கட்சி மற்றும் ஆட்சியில் குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கம் முதலிடம் மின் வெட்டில் முதலிடம் லஞ்ச ஊழல் குற்றங்களில் முதலிடம் கல்வி வியாபாரத்தில் முதலிடம் இந்து மத எதிர்ப்பில் முதலிடம் தற்புகழ்ச்சியில் முதலிடம் 2026ல் நடக்கும் தேர்தலில் மக்கள் வழங்குவார்கள் கடைசி இடம்


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 13, 2025 13:41

டாஸ்மாக் மது விற்பனை முதலிடம் கள்ளச்சாராயம் முதலிடம் இந்து சமய எதிர்ப்பில் முதலிடம் கொலைகள் முதலிடம் தற்புகழ்ச்சி முதலிடம் இவைகளை விட்டு விட்டீர்கள்.


Savitha
மே 13, 2025 08:56

கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதன்மை, எல்லாத்துலயும் விடியல் ஆட்சி முதன்மை, இதில் மட்டும் பின் தங்குவார்களா?


ராமகிருஷ்ணன்
மே 13, 2025 04:36

சுருட்டி சுருட்டி சிவந்த கரங்கள் விடியலின் கரங்கள். மத்தியில் கூட்டுகளவாணி காங்கிரஸ் இல்லை, இந்திய அளவில் சுருட்ட முடியாதே அதனால கடன் வாங்கி கடன் வாங்கி சுருட்டுவது திமுகவின் வேலையாகி விட்டது. திமுகவின் ஓட்டு வங்கியை காப்பாற்ற பற்பல இலவசங்களை அள்ளி அள்ளி வீசி மக்களை மடையர்களாக்கி ஆட்சிக்கு வருவதற்கு கடன் வாங்காமல் வேறென்ன செய்வது.


anonymous
மே 13, 2025 03:33

திருட்டு திராவிட மாடல் குடும்பமே திருடர்கள் திருடர்களே கழக கண்மணிகள். கடமை: திருடுவதில் கண்ணியம்: தலைமைக்கு பங்கு கொடுத்தல் கட்டுப்பாடு: இது இவர்களுக்கு தட்டுப்பாடு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை