உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உலக அய்யப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

உலக அய்யப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சபரிமலையில் உலக அய்யப்ப பக்தர்கள் மாநாடு நடத்துவதற்கு தடை விதிக்க உச்ச நீதி மன்றம் மறுத்துள்ளது. கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பம்பை நதிக்கரையில் உலக அய்யப்ப பக்தர்கள் மாநாடு வரும், 20ம் தேதி நடைபெற உள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை, கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருவிதாங்கூர் தேவஸ்தானம் இந்த பக்தர்கள் மாநாட்டை நடத்தலாம் என்றும் அதற்காக கோவில் புனிதம் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டது. மேலும் கூட்டத்திற்காக ஏற்படுத்தப்படும் தற்காலிக கட்டுமானங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்; சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட 10க்கும் அதிகமான கட்டுப்பாடுகளையும் உயர் நீதிமன்றம் விதித்திருந்தது. கேரள உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ். நரசிம்மா தலைமையிலான அமர்வில் நடந்தது. அப்போது கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் தாங்கள் தலையிட விரும்பவில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், உயர் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற வேண்டும், என அறிவுறுத்தல் வழங்கினர் - டில்லி சிறப்பு நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

என்றும் இந்தியன்
செப் 18, 2025 16:22

அப்போ கிறித்துவ கூட்டம் முஸ்லீம் கூட்டம் எல்லாவற்றிற்கும் தடை செய்யவேண்டும் இந்தியாவில் என்று உடனே சட்டம் வரவேண்டும்


nisar ahmad
செப் 18, 2025 14:47

முதலில் மத விசேசங்களில் அரசியல்வாதிகளின் குறிக்கீடுகளை தடை செய்யவேண்டும். அது எந்த மதமானாலும்.


KRISHNAN R
செப் 18, 2025 08:47

விசாலமான இடமும் நல்லதே


pmsamy
செப் 18, 2025 08:21

அறிவில்லாத மூடநம்பிக்கை உள்ளவர்களின் வளர்ச்சிக்கு தடை செய்யாமல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது நல்லது.


ManiK
செப் 18, 2025 06:49

இத்தனை வருடங்கள் இல்லாத அக்கறை இந்த கம்யூனிச, தீமுக கும்பலுக்கு. என்ன மாநாடு வேண்டிகெடக்கு?. கடவுள் பக்தி, சரணாகதி அடைந்திட்டு அவன் கட்சிகாரர்களுக்கு இந்த மாநாடு நடத்தட்டும்


kamal 00
செப் 18, 2025 08:10

தேர்தல் வந்தா திமுக மாதிரி படுத்துருவீங்க போல


முக்கிய வீடியோ