உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  தி.மு.க., கூட்டணியில் 39 தொகுதிகள் கேட்க தமிழக காங்கிரஸ் ஆலோசனை

 தி.மு.க., கூட்டணியில் 39 தொகுதிகள் கேட்க தமிழக காங்கிரஸ் ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தி.மு.க., கூட்டணியில், லோக்சபா தொகுதி அல்லது வருவாய் மாவட்டத்திற்கு, தலா ஒரு சட்டசபை தொகுதி என்ற அடிப்படையில், 39 சட்டசபை தொகுதிகளை கேட்பது குறித்து, தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், ஆலோசித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் நீடிக்க, காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. ஆட்சியில் பங்கு கோஷத்தை, அக்கட்சி கைவிட்டு, கூடுதல் தொகுதிகள் பெற திட்டமிட்டுள்ளது. தி.மு.க., கூட்டணியில், கடந்த சட்டசபை தேர்தலில், 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள, சட்டசபை தேர்தலில், வருவாய் மாவட்டம் அல்லது லோக்சபா தொகுதிகளில், தலா ஒரு சட்டசபை தொகுதி வீதம், 39 தொகுதிகளை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள், ஏற்கனவே போட்டியிட்டு குறைந்த ஓட்டுகளில், தோல்வி அடைந்த தொகுதிகள் என, 125 தொகுதிகளை, அக்கட்சி அடையாளம் கண்டு வைத்துள்ளது. அத்தொகுதிகளின் பட்டியலில் இருந்து, 39 தொகுதிகளை தி.மு.க.,விடம் கேட்டு பெற வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து முடிவு செய்வதற்காக, கூட்டணி குறித்து பேச, காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ள, ஐவர் குழு ஆலோசனைக் கூட்டம், நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. இக்குழுவில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தி.மு.க.,விடம் 39 தொகுதிகளை கேட்டால், அக்கட்சி 30 தொகுதிகளாவது கொடுக்க முன்வரும். ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட்டுக்கு, 34 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் தேவை என்பதால், காங்கிரஸ் கட்சி 35 தொகுதிகளாவது பெற்றாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. கடந்த 2021ல் ஒதுக்கி தந்த, 25 தொகுதிகள் தான் தி.மு.க., தரும் என்றால், ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட்டை கேட்க, காங்கிரஸ் தரப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி, பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் குறித்து கண்காணிக்க, மூத்த தலைவர்கள் தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், கே.விஜயன், அமைப்பு செயலர் ராம்மோகன், வார்ரூம் தலைவர் பி.ஆர்.நாயுடு, சட்டத்துறை பொது செயலர் விக்டர் உட்பட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பட்டியலையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது. - நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை