உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பா.ஜ., கூட்டணிக்கு விஜய், சீமான் அவசியம் டில்லிக்கு தகவல் அனுப்பும் தமிழக நிர்வாகிகள்

பா.ஜ., கூட்டணிக்கு விஜய், சீமான் அவசியம் டில்லிக்கு தகவல் அனுப்பும் தமிழக நிர்வாகிகள்

சென்னை: 'தி.மு.க.,வுக்கு எதிராக, பா.ம.க., - தே.மு.தி.க.,வை உள்ளடக்கி, பலமான கூட்டணியை அ.தி.மு.க., அமைத்தாலும், த.வெ.க., அல்லது நாம் தமிழர் கட்சி இருந்தால் தான் ஓட்டுகள் சிதறுவதை தடுக்க முடியும்' என, பா.ஜ., மேலிட தலைவர்களுக்கு, தமிழக நிர்வாகிகள் தகவல் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - த.வெ.க., - நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இடையே ஐந்துமுனை போட்டி ஏற்படும் சூழல் இருந்தது. இதனால் ஓட்டுகள் பிரிந்து, தி.மு.க.,வுக்கு சாதகமாக அமையும் என்பதால், தி.மு.க., கூட்டணிக்கு எதிராக பலமான அணி அமைக்கும் வேலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளார். கடந்த ஏப்ரலில் தமிழகம் வந்து, அ.தி.மு.க., கூட்டணியை அறிவித்தார். தொடர்ந்து, பா.ம.க., - தே.மு.தி.க., - த.வெ.க., - நாம் தமிழர் ஆகிய கட்சிகளையும் சேர்க்கும் முயற்சிகள் நடக்கின்றன. பெரிய கட்சியான அ.தி.மு.க.,வே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த பின், பா.ம.க.,வும், தே.மு.தி.க.,வும் கூட்டணிக்கு வர தாமதம் செய்கின்றன. இந்த சூழலில், மதுரைக்கு சமீபத்தில் வந்திருந்த அமித் ஷா, 'த.வெ.க., தரப்புடன் பேச்சு நடத்தப்பட்டதில், நம் கூட்டணிக்கு வர வாய்ப்பு குறைவு. விஜய் வந்தாலும், பா.ஜ.,வுக்கு பெரிய அளவில் பலன் கொடுக்காது. த.வெ.க.,வுக்கு சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் தான் அதிகம் கிடைக்கும். அந்த ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு கிடைக்காது' என, கூறியுள்ளார்.ஆனால், விஜய், சீமான் பா.ஜ., கூட்டணியில் அவசியம் இருக்க வேண்டும். ஏனெனில் விஜய், சீமான் கட்சிகள் வாங்க உள்ள ஓட்டுகளில், தி.மு.க.,வின் எதிர்ப்பு ஓட்டுகள் மட்டும் இருக்க போவதில்லை; பா.ஜ., கூட்டணிக்கு வர வேண்டிய ஓட்டுகளும் உள்ளன. உதாரணமாக, ஒரு ஓட்டுச்சாவடியில் விஜய் கட்சி, 50 ஓட்டுகள் வாங்கினால், அதில், 10 ஓட்டுகள் தி.மு.க.,வின் ஓட்டுக்களாக இருக்கும். அதேபோல், 10 ஓட்டுகள் பா.ஜ., அணிக்கு வர வேண்டியதாக இருக்கலாம். பா.ஜ.,வின் திராவிட எதிர்ப்பு, ஆன்மிக ஆதரவு கருத்துகளை, தற்போது சீமான் பேசி வருகிறார். எனவே, வரும் சட்டசபை தேர்தலில், ஒரு ஓட்டுச்சாவடியில் சீமான் 10 ஓட்டுகள் வாங்கினால், நிச்சயம் ஐந்து ஓட்டுகள் பா.ஜ., அணிக்கு வரக்கூடியதாக இருக்கும். இதேபோல் தமிழகம் முழுதும் இரு கட்சிகளும் பா.ஜ.,வுக்கு வரக்கூடிய ஓட்டுகளை பிரித்தால் வெற்றியை நெருங்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே, இருவரில் ஒருவராவது இருந்தால் தான், அ.தி.மு.க., தலைமையில் பா.ம.க., - தே.மு.தி.க., என, பலமான கூட்டணியை அமைத்தாலும், பா.ஜ., அணிக்கு வரக்கூடிய ஓட்டுக்கள் சிதறுவதை தடுக்க முடியும். எனவே, இரு கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் வரவில்லை என்றால், சீமானையாவது சேர்க்க வேண்டும். இதுதொடர்பான விரிவான விபரங்களை, அமித் ஷா உள்ளிட்ட மேலிட தலைவர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் அனுப்பியுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Mahendran Puru
ஜூன் 16, 2025 12:57

தமிழக பாஜகவின் எதை தின்றால் பித்தம் தெளியும் நிலைமை நன்றாக இருக்கிறது. பாஜவுடன் யார் சேர்ந்தாலும் மண்ணை கவ்வுவது நிச்சயம். இது தமிழ் நாடு. இது புரியாத சொற்பங்கள் தலைவர்களும். தமழகத்திற்கு வஞ்சனை மட்டும் செய்யும் பாஜக மத்திய அரசு, அந்த தலைமை தமிழனை வடக்கன் போல இளிச்சவாயனாக நினைக்கிறது.


Kulandai kannan
ஜூன் 15, 2025 20:12

கட்டு சோத்துக்குள் பெருச்சாளி வைக்கிற வேலைதான் சீமானுடன் சேர்வது. விஜய் தனியாக நின்றால்தான் திமுக ஓட்டுகளைப் பிரிப்பார். தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு அரசியல் ஞானம் பஞ்சம் போல.


saravanan
ஜூன் 15, 2025 18:51

அஅரசியலில் கூட்டணி நிச்சயம் தேவை, ஆனால் அதை ஒன்றை மட்டுமே நம்பிக் கொண்டு ரொம்ப நாட்களுக்கு பயணிக்க முடியாது .கட்சியின் மாநில நிர்வாகிகளுக்கும் கடை கோடி தொண்டனுக்கும் எப்போதும் இடைவிடா தொடர்பு இருந்து கொண்டேயிருக்க வேண்டும். இதையெல்லாம் விடுத்து தங்கள் பலம் என்னவென்றே தெரியாத கட்சிகளிடமெல்லாம் கெஞ்சிக் கொண்டிருப்பதில் எந்தவித பயனும் விளைய போவதில்லை


RRR
ஜூன் 15, 2025 18:16

இப்படி கொள்கை விரோத கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை எதிர்கொள்வதைவிட... பருத்திமூட்டை பாஜக குடோனிலேயே இருக்கலாம்...


venugopal s
ஜூன் 15, 2025 11:25

போகிற போக்கைப் பார்த்தால் கடைசியில் பாஜக, அதிமுக திமுக இரண்டு கட்சிகளையும் தங்கள் கூட்டணியில் சேர்த்தால் தான் தமிழகத்தில் வெற்றி பெற முடியும் போல் தெரிகிறது!


Rajasekar Jayaraman
ஜூன் 15, 2025 09:20

தமிழக பாரதிய ஜனதா தலைமை சரியில்லை.


Oviya Vijay
ஜூன் 15, 2025 08:51

ஒருவேளை சீமானை வேண்டுமானால் சரிகட்டி கூட்டணிக்குள் இழுக்கப் பார்க்கலாம்... அதுவும் டவுட்டு தான்... ஆனால் கண்டிப்பாக விஜயை பிஜேபி இருக்கும் கூட்டணிக்குள் இழுப்பதற்கு கடுகளவும் சான்ஸ் இல்லை... மதவாத பிஜேபியை ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பதில் விஜய் காட்டும் தீவிரம் இனியும் தொடருமேயன்றி எந்நாளும் அவரை சரிகட்ட உங்கள் யாராலும் முடியாது... எந்த பேரத்திற்கும் அவர் பணிபவர் அல்ல... அவரது அரசியல் ஆட்டத்தை இனிதான் மக்கள் காணப்போகின்றனர்.


சேகர்
ஜூன் 15, 2025 10:01

விஜய் 5 சதவிகிதத்தை தாண்டி ஒட்டு வாங்க போவதில்லை. ஆனால் இந்த வாக்கு விகிதம் வெற்றிக்கு சில தொகுதிகளில் உதவும் என்பதாலேயே கூட்டணிக்கு முயற்சிக்கிறார்கள். ஆந்திராவில் பவன் கல்யாண் நிலைமையும் அப்படியே. அவர் உட்பட ஜனசேனா எல்லா தேர்தலிலும் தோற்றது. ஆகவே வேறு வழி இல்லாமல் 2024லில் சந்திரபாபு கூட கூட்டணி வைத்தார். அரசியல் வேறு சினிமா வேறு. ஓடாத படத்துக்கெல்லாம் 600 கோடி 800 கோடி வசூல் என கதை அளக்க முடியாது. அரசியலில் ஓட்டுக்கள் எண்ணப்படும். அரை டிரௌசர் ரசிகர்களுக்கு இதெல்லாம் தெரியுமா?


vijai hindu
ஜூன் 15, 2025 12:51

ரெண்டு பேரும் ஒரே மதத்துக்காரர்களா அதான் விஜய் தூக்கி வச்சு பேசுறீங்க என்ன மதவாதம் கிறிஸ்தவர்கள் அவர் மதத்தை போடுகிறார்கள் முஸ்லிம்கள் அவர் மதத்தை போற்றுகிறார்கள் இந்துக்கள் அவர்கள் மதத்தை போற்ற வேண்டும் தான்


நிவேதா
ஜூன் 15, 2025 13:17

என்ன சம்பந்தம்?


Bala
ஜூன் 15, 2025 16:26

மதவாத விஜயை தூக்கி நிறுத்துவது இந்த மதவாத லயோலா குரூப்தான். கூடிய சீக்கிரம் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்துவிடும். பிறகு ஜோசப் விஜயின் ரசிகர் மன்றம் 2026 தேர்தல் தோல்விக்கு பிறகு கலைக்கப்பட்டு ஜோசப்பு விசை திமுகவின் கிறித்துவ அணியின் தலைவராக நியமிக்கப்படுவார்


புரொடஸ்டர்
ஜூன் 15, 2025 07:57

தமிழ்நாட்டில் கும்பலாக காணாமல் போவதற்கா?


முருகன்
ஜூன் 15, 2025 06:44

காங்கிரஸை கூட கூட்டணிக்கு கூப்பிடுவாங்க


மோகனசுந்தரம்
ஜூன் 15, 2025 06:35

என்னடா இந்த தமிழக பிஜேபிக்கு வந்த சோதனை. இவர்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உங்களை எட்டி எட்டி உதைக்கிறார்கள் நீங்கள் தொட்டு தொட்டு கும்பிடுகிறீர்களே இது நன்றாக இருக்கிறதா இது உங்களுக்கு படு கேவலமாக தெரியவில்லையா. தன்மானத்தை இழந்து எப்படியாவது பதவியில் அமர வேண்டும் அதுதானே உங்களுடைய குறிக்கோள் வெட்கக்கேடு.


சேகர்
ஜூன் 15, 2025 09:51

அண்ணாமலை, ராஜா தவிர ஏறத்தாழ எல்லா தமிழக பிஜேபி தலைவர்களும் எப்படியாவது யார் முதுகிலாவது ஏறி MLA ஆகிவிட வேண்டும் என்ற நினைப்பிலேயே உள்ளனர். கட்சி வளர வேண்டும் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் அவர்களுக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை