உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  நான்கரை ஆண்டுகளில் ஒரு மெகா வாட் கூட புதிதாக மின் உற்பத்தி செய்யாத தமிழகம்

 நான்கரை ஆண்டுகளில் ஒரு மெகா வாட் கூட புதிதாக மின் உற்பத்தி செய்யாத தமிழகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருவள்ளூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், மின் வாரியம் அமைத்து வரும் அனல், நீர் மின் நிலையங்களில், கடந்த நான்கரை ஆண்டுகளில், ஒரு மெகாவாட் கூட உற்பத்தி துவக்கப் படவில்லை.இது தொடர்பாக, மின் வாரிய அதிகாரிகளிடம் நேற்று ஆய்வு நடத்திய முதல்வர் ஸ்டாலின், விரைவாக மின் திட்டங்களை முடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.திருவள்ளூர் மாவட்டத்தில், 800 மெகாவாட் திறனில் வட சென்னை - 3 மற்றும் 1,320 மெகாவாட் திறனில் எண்ணுார் சிறப்பு பொருளாதார மண்டலம்; 660 மெகாவாட் திறனில், எண்ணுார் விரிவாக்கம் ஆகிய பெயர்களில், அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.துாத்துக்குடி மாவட்டம் உடன்குடியில், 1,320 மெகா வாட் திறன்; ராமநாதபுரம் உப்பூரில், 1,600 மெகா வாட்டில் புதிய அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. மேலும் நீலகிரியில், 500 மெகா வாட் திறனில் குந்தா நீரேற்று மின் நிலையம், நாமக்கல் கொல்லிமலையில், 20 மெகா வாட் திறனில் நீர் மின் நிலையமும் அமைக்கப்பட்டு வருகின்றன.இவற்றின் கட்டுமான பணிகள், 2014 - 18 காலகட்டங்களில் துவங்கிய நிலையில், 2020 - 21ல் முடிக்க திட்டமிடப்பட்டது. இதில், வட சென்னை - 3 நிலையத்தில் மட்டும், 2024ல் மார்ச்சில் சோதனை மின் உற்பத்தி துவங்கியது. 72 மணி நேரம் உற்பத்தி செய்த பின், வணிக உற்பத்தி துவங்க வேண்டும். ஆனால், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், வணிக மின் உற்பத்தி துவங்கப்படவில்லை.உடன்குடி மின் நிலையத்தின் முதல் அலகிலும், கடந்த செப்டம்பரில் சோதனை மின் உற்பத்தி துவங்கிய நிலையில், இன்னும் வணிக உற்பத்தி துவக்கப்படாமல் உள்ளது.எண்ணுார் சிறப்பு, உடன்குடி மின் நிலைய இரண்டாவது அலகில் கட்டுமான பணி, 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. உப்பூர், எண்ணுார் விரிவாக்க மின் நிலைய பணிகள், 30 சதவீதத்துடன் ஐந்து ஆண்டுகளாக முடங்கியுள்ளன.கொல்லிமலை நீர் மின் நிலையம், குந்தா நீரேற்று மின் நிலையம் கட்டுமான பணிகள், 80 சதவீதம் முடிவடைந்துள்ளன. கடந்த நான்கரை ஆண்டுகளில் மின் வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையங்களில், ஒரு மெகா வாட் கூட, மின் உற்பத்தி துவக்கப்படவில்லை.இந்த மின் திட்டங்களின் நிலை குறித்து, முதல்வர் ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் மின் வாரிய அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு நடத்தினார். அதில், மின் திட்ட பணிகள் தாமதம் குறித்து கேட்டறிந்தார்.பின், மின் நிலைய கட்டுமான பணிகளை விரைவாக முடித்து, வரும், 2026 மார்ச்சுக்குள் மின் உற்பத்தியை துவக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Vasan
டிச 23, 2025 09:49

ஜெயலலிதா அவர்கள் 2011-16 ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த மின் திட்டங்களால் தமிழகம் பிழைத்தது. பின்னர் 2016-21 எடப்பாடி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் 2021-25 ஸ்டாலின் காலத்தில் முடித்திருக்க வேண்டும். ஆனால் பணிகள் நத்தை வேகத்தில் கூட நடக்கவில்லை. இதே போக்கில் போனால், மாலை மற்றும் இரவு நேரங்களில் மின் பற்றாக்குறை ஏற்படும். விளைவு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தெரியும்.


ராமகிருஷ்ணன்
டிச 23, 2025 09:37

சொந்தமாக உற்பத்தி செய்தால் பலன் இல்லை. வெளியில் வாங்கினால் கமிஷன் கிடைக்குமே. நவீன ஊழல்களில் புகழ்பெற்ற திமுக கமிஷன் வாங்கி சுருட்டி முழுங்கி ஏப்பம் விட்டு விட்டார்கள்


surya krishna
டிச 23, 2025 09:07

எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத திருட்டு திராவிட கொள்ளை அடித்த தமிழகத்தை முன்னேற்றாத பிற்போக்கான மதச்சார்புள்ள சிறுபான்மையினருக்கு மட்டும் ஆட்சி நடத்தும் தமிழக அரசு நாசமாய் போகட்டும் எவன் இந்து ஒருவன் திமுகவுக்கு வாக்குடு வாக்கு செலுத்துறானோ அவன் மானமுள்ள ரோஷமுள்ள உண்மையான இந்து இல்லை நடுநிலையாக மதத்தை காட்டிக் கொடுக்கிறான் என்று புரிந்து கொள்ள வேண்டும்


Sum
டிச 23, 2025 08:47

ஆஹா இதுவல்லவோ திராவிட மாடலின் சாதனை !


மேலும் செய்திகள்