உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இந்தியாவிலேயே கடனாளி மாநிலம் தமிழகம் தான்: ராஜா

இந்தியாவிலேயே கடனாளி மாநிலம் தமிழகம் தான்: ராஜா

கோவை; கோவையில் தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா அளித்த பேட்டி:கோவை மாநகராட்சி நிர்வாகம், பொறுப்பற்ற நிர்வாகமாக செயல்படுகிறது. 2004-ல் கோவையிலுள்ள என் நண்பருக்கு விதிக்கப்பட்ட வீட்டு வரி 2,400 ரூபாய்; ஆனால் இன்று அவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் நோட்டீஸில் 56,000 ரூபாய் கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இதுபோன்று பெரும்பான்மையான வீடுகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை, தி.மு.க., - எம்.பி.,யே மாநகராட்சி கூட்டத்தில் சொல்லியிருக்கிறார். அப்படி என்றால் இங்குள்ள மாநகராட்சி நிர்வாகத்துக்கும், உள்ளாட்சித் துறை அமைச்சருக்கும் கட்டுப்பாடுகள் இல்லையா?தமிழக முதல்வரே உங்களுக்கு அரசியலமைப்பு பற்றி தெரிய வேண்டாமா? நிதி அமைச்சரே நினைத்தாலும் ஒரு மாநிலத்துக்கு பணத்தை கூட்டி கொடுக்கவோ, குறைத்துக் கொடுக்கவோ முடியாது.ஜி.எஸ்.டி., வரி வசூல் செய்யும் போதே, 50 சதவீதம் மத்திய நிதியாகவும், 50 சதவீதம் மாநில டி.என்.ஜி.எஸ்.டி.,யாகவும் வசூல் செய்யப்படுகிறது.அடிப்படை பொருளாதார அறிவற்றவற்றவர்களுக்காக கூறுகிறேன். ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சி, மக்கள் தொகையைப் பொறுத்து, நிதி அமைச்சகம் நிதி ஒதுக்குகிறது.அப்படி இருக்கையில் எல்லா மாநிலங்களிலும் மக்கள் நலத் திட்டங்கள் இருக்கிறது. ஆனால், இந்தியாவிலேயே மிக அதிகமான கடன் வாங்கி இருக்கிற மாநிலம் தமிழ்நாடு.அதுவும், 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வரும்பொழுது 4 லட்சத்து 33,000 கோடியாக இருந்த கடன், இப்பொழுது 8 லட்சத்து 88,000 கோடியாக மாறி உள்ளது.வரும் மார்ச்சுக்குள்ளாக இது, 9 லட்சத்து 88 ஆயிரம் கோடியாகும். இந்தியாவிலேயே கடனாளி மாநிலம் தமிழகம் தான்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

j
பிப் 10, 2025 17:52

இதுவரை நான் கேள்விப்பட்ட அரசியல்வாதிகளில் அம்மி அளவும் இம்மி அளவும் சுயமரியாதை இல்லாதவர் எச். ராஜா. இத்தனை வருடங்களாக இவரை கட்சியில் வைத்து இருக்கிறார்கள் என்றால் இவரை விட கீழானவர்களே அந்தக் கட்சியில் உள்ளனர் என்பது புலனாகிறது. இந்த லட்சணத்தில் யார் அதிகம் மோசமானவர்கள் என்ற போட்டா போட்டியும் அந்த கட்சியில் உள்ளது.


Senthoora
பிப் 10, 2025 17:49

நாங்க எங்க வீட்டு குறைகளை பார்க்கமாட்டோம், மற்றவர்கள் குறைகளைத்தான் பார்ப்போம்.


T.sthivinayagam
பிப் 10, 2025 16:52

அதிக வரி செலுத்தும் தமிழகத்தை கடனாளி ஆக்கிய பெருமையும் உங்களையே சேரும் என்று மக்கள் கூறுகின்றனர்


pmsamy
பிப் 10, 2025 16:48

எச் ராஜா முகத்தைப் பார்த்தா ஓநாய் நரி மாதிரி இருக்கான்


அன்பே சிவம்
பிப் 10, 2025 15:38

1).Tamil Nadu has the highest outstanding debt in the country. 2).உள்கட்டமைப்பு மேம்பாடு, உண்மையான முதலீடுகளை ஈர்ப்பது, extendedவரிவிதிப்பு , முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தாமல், பழைய கடனை அடைக்க தொடர்ந்து கடன் வாங்கினால், தமிழகம் கடன் வலையில் விழும். 3).தமிழ்நாடு கடன் பொறியை நோக்கி நகர்கிறதா? YES. 4).தமிழ்நாடு தனது முந்தைய கடனைத் திரும்பப் பெறவும், வருவாய் செலவினங்களைச் சமாளிக்கவும் கடன் வாங்குகிறது. வட்டி வருவாயில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகும். கடன் வாங்கும் செலவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது." 5).அனைவருக்கும் இலவசங்கள் மற்றும் மானியங்களை வழங்குவதில் அரசு அலட்சியமாக உள்ளது. 6).பட்ஜெட் ஒதுக்கீடுகளில் பெரும்பாலானவை வருவாய் செலவினங்களுக்காகவே அதாவது மாத நிர்வாக செல்லவுகளுக்கு உள்ளன, மேலும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அதிகம் இல்லை, நீண்ட கால வருவாயின் சாத்தியம் இல்லை. 7).Tamilnadu,பஞ்சாப், ராஜஸ்தான், கேரளா, மேற்கு வங்கம், பீகார், ஆந்திரா, ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் அதிக கடன் சுமை உள்ள மாநிலங்களாக உள்ளன. 8).ஐந்து பெரிய தென்னிந்திய மாநிலங்களில், தெலங்கானா GDP விகிதத்தில் 25.3,அதைத் தொடர்ந்து கர்நாடகா (27.5 சதவிகிதம்), தமிழ்நாடு (27.7 சதவிகிதம்), ஆந்திரப் பிரதேசம் (32.8 சதவிகிதம்) மற்றும் கேரளா (37.2 சதவீதம்) உள்ளன. 9).மாநிலத்தில் தொழில் முதலீடுகள் நடக்கும் போதுதான் வரி வருவாய் அதிகரிக்கும். 10).எதிர்க்கட்சியில் இருக்கும் போது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நடத்திய போராட்டத் தொழில் அல்லது போராட்ட அரசியலால் தொழில் முதலீட்டாளர்கள் தமிழகத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர்.


அப்பாவி
பிப் 10, 2025 14:03

இவர் சொல்றதை நம்பணும்னா, மத்திய அரசு தேவையான நிதி ஒதுக்காமல் வஞ்சிப்பதால் கடன் வாங்கித்தான் நிர்வாகம் பண்ண வேண்டியிருக்கு என்பதையும் நம்பணும்.


venugopal s
பிப் 10, 2025 12:49

பத்து வருடங்களுக்கு முன் பாஜக ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவின் கடன் ஐம்பது லட்சம் கோடி இப்போது நூற்றைம்பது லட்சம் கோடிக்கு மேல். இதைப் பற்றி பேசுவாரா நமது பொருளாதார நிபுணர்?


N Sasikumar Yadhav
பிப் 10, 2025 14:24

ஐயா கோபாலபுர கொத்தடிமையாரே மத்தியரசு வாங்கிய கடன் தேச பாதுகாப்பு உள்கட்டமைப்புகளுக்கு . ஆனால் விடியாத திராவிட மாடல் அரசு வாங்கிய கடனெல்லாம் ஓட்டுப்பிச்சை வாங்க ஓஷி கொடுக்கவும் விஞ்ஞானரீதியாக ஊழல் செய்து ஆட்டய போடவும்தான் பயன்பட்டிருக்கிறது திரு கோபாலபுர கொத்தடிமையாரே


nb
பிப் 10, 2025 12:46

திராவிட மாடலின் வெற்றி


Muralidharan S
பிப் 10, 2025 12:28

இதற்கு ஆண்ட, ஆளும் அரசியல் கட்சிகள் இரண்டாவது காரணம். அப்போ, முதல் காரணம் யார்?? காசு வாங்கிக்கொண்டு, குவாட்டருக்கும், பிரியாணிக்கும், இலவச டீவீ, மிக்ஸீ, கிரைண்டர் என்று இலவசத்திற்கு அலையும் பொறுப்பற்ற மக்கள் தான் காரணம்.. தங்கள் பொறுப்பு உணர்ந்து, தங்கள் வாழ்வாதத்திற்கு ஒரு நல்ல இலவச கல்வி வசதி, ஒரு நல்ல இலவச சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகள், நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கித்தரக்கூடிய சிறந்த தொழில்சார்ந்த இலவச பயிரிச்சி மையங்கள், இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை, ஆண்கள் முதல் பெண்கள் வரை அவர்களாகவே சொந்தமாக உழைத்து சம்பாதித்து முன்னேறி, தங்கள் வாழ்வை செழிப்பாக்கி கொள்ள தொழில்சாலை வசதிகள் செய்து கொடுக்க கேட்பது, வேலை வாய்ப்பு வழங்குதல், சுய வேலைவாய்ப்புகளை தேவையான பயிற்சிகளை மக்களுக்கு இலவசமாக கேட்பது என்று.. மக்கள் இருந்து இருந்தால் தமிழகம் கடனாளி ஆகி இருக்காது. மக்கள் பணிக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் பணம் - 100 க்கு 10 தானே மக்களுக்கு போகிறது. மீதி எங்கே போகிறது.. ஓட்டுக்கு பணம் கொடுப்பவன் வேறு எங்கே இருந்து எடுப்பான்.. இதை மக்கள் என்றாவது சிந்தித்தார்களா ??? ஆகையால், எல்லாவற்றிற்கும் முதல் காரணம், நிர்வாகம் என்றால் என்ன என்றே தெரியாத, அல்லது தெரிந்தும், அதை தங்கள் சுயலாபத்திற்கு மடைமாற்றிக்கொண்ட தகுதி இல்லாதவர்களை எல்லாம் , காசு வாங்கிக்கொண்டு ஆட்சி செய்ய விட்ட மக்கள்தான் காரணம்..


j
பிப் 10, 2025 17:56

அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் ! தமிழக மக்களின் நிலைமை இப்பொழுது எண்ணெய் கொப்பரையிலிருந்து அடுப்பில் குதிப்பது போலத்தான் உள்ளது. ஒன்று சாராயக் கடைக்காரனை நம்ப வேண்டியுள்ளது. மறுபுறம் சாதி மதங்களின் பெயரைச் சொல்லி சமூகத்தை சீரழிக்கும் தீவிரவாதிகளை நம்ப வேண்டியுள்ளது. இதில் முதலாவது பரவாயில்லை என்று நமக்கு நாமே ஆறுதல் கூறிக் கொள்ள வேண்டி இருக்கிறது.


Padmasridharan
பிப் 10, 2025 10:20

தமிழகம் கடனாளி மாநிலம் மட்டுமல்ல. லஞ்சம் வாங்கும் அதிகார பிச்சைக்காரர்கள் அதிகமாக இருப்பதும் இங்கேதான். Fine என்கிற பேரில் கருப்பு பணம் காவல்துறையில் புழங்குவதை கேட்க முடியுமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை