உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பொதுக்கூட்டத்துக்கு தலா 500 பேரை அழைத்துவர டார்கெட்; காங்., மாவட்ட தலைவர்கள் புலம்பல்

பொதுக்கூட்டத்துக்கு தலா 500 பேரை அழைத்துவர டார்கெட்; காங்., மாவட்ட தலைவர்கள் புலம்பல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : சென்னையில் காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மே 4 ல் நடக்கும் பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் தலா 500 பேரை அழைத்து வரவேண்டும் என்ற உத்தரவால் அதிருப்தியில் உள்ளனர்.தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி ஆட்சி கோஷம் வலுத்து வருகிறது. வி.சி.க.,வை அடுத்து காங்கிரசிலும் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது. ஆனால் தி.மு.க., விசுவாசத்தால் செல்வப்பெருந்தகை மட்டும் அடக்கி வாசிப்பது அக்கட்சியினரை அதிருப்தியடைய வைத்துள்ளது. ஆனால் கூட்டணி ஆட்சி என்ற அஸ்திரத்தை கையில் எடுத்தால்தான், கேட்கும் எண்ணிக்கையில் தொகுதிகளாவது ஒதுக்க தி.மு.க., முன்வரும் என்பதை உணர்த்தும் வகையில் தமிழக காங்., மூத்த தலைவர்கள் சிலர் அகில இந்திய தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் மாநில அளவிலான பொதுக் கூட்டத்தை செல்வப்பெருந்தகை ஏற்பாடு செய்துள்ளார். இதில் அதிக எண்ணிக்கையில் கூட்டத்தை காண்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 72 மாவட்டத் தலைவர்களும் குறைந்தது தலா 500 பேரை அழைத்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 500 பேரை அழைத்து சென்றால் எவ்வளவு செலவு ஏற்படும், அதை எவ்வாறு சமாளிப்பது என மாவட்ட தலைவர்கள் புலம்பி வருகின்றனர்.அவர்கள் கூறியதாவது: மூத்த நிர்வாகிகள் பலர் மாநில தலைவர் மீது அதிருப்தியில் உள்ளனர். இவரது செயல்பாடுகள் குறித்து அகில இந்திய தலைமைக்கு தொடர்ந்து ஆதாரங்களுடன் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் தன் கட்டுப்பாட்டில்தான் தமிழக காங்., உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் மே 4 கூட்டத்துக்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் 'கோஷ்டி' தலைவர்கள் தங்களின் ஆதரவாளர்களுக்கு இதுவரை 'கிரீன் சிக்னல்' அளிக்கவில்லை.மேலும் 500 பேரை அழைத்து சென்றால் எவ்வளவு செலவாகும், அதை எப்படி சமாளிப்பது என்ற கவலையில் உள்ளனர். இந்நிலையில் '500 பேரை அழைத்து வரும் மாவட்ட தலைவர்களுக்கே வரும் தேர்தலில் எம்.எல்.ஏ., சீட்டுக்கு பரிசீலிக்கப்படும்' என, சென்னை நிர்வாகிகள் சிலர் அலைபேசி மூலம் மாவட்ட தலைவர்களிடம் பேசி உசுப்பேத்தி வருகின்றனர். இதனால் குழப்பமாக உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sang
ஏப் 28, 2025 22:59

May 4 NEET Exam , How the Government Given Permission


pv, முத்தூர்
ஏப் 28, 2025 20:03

மாவட்துக்கு 500 ஓட்டு ஆள் கிடையாது, ஆன 50 சீட்டுமட்டும் வேணுமாம்.


Balasubramanian
ஏப் 28, 2025 13:56

பாஜாக விற்கு இணையாக 85 தொகுதிகள் கேட்க போகிறோம்! தொகுதிக்கு 500 தலையாவது நிச்சயம் தேவை! இல்லை என்றால் தலைவர் தலைக்கு உலை என்று பிகாரில் 50 நபர் கூட சேராத கூட்டத்தில் கலந்து காண்டு ஆன அகில இந்திய தலைவர் கார்கே கூறி விடுவார்


jaikannan kannan
ஏப் 28, 2025 12:29

500 பேர் கட்சி உருப்பினர் மட்டும் இது இருக்குமா செலவுக்கு பணம் எங்கே என்றால் 500 பேர் கூட்டி வருபவர்களுக்கு ...


lana
ஏப் 28, 2025 11:07

மொத்த தமிழகத்தில் 500 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. எனினும் மக்களுக்கு இதுவும் ஒரு தொழில். ஒரு நாள் கூலிக்கு வருவார்கள். திரை கடல் ஓடி திரவியம் தேடிய சமூகம் இன்று வாழ்க்கை நடத்த இந்த காசுக்காக அல்லல் படுகிறது.


Yes your honor
ஏப் 28, 2025 11:07

எல்லாம் சரி, மொத்தமாக கட்சியிலேயே 500 பேர் தமிழகத்தில் இல்லையே. அதுதான் அனைவரின் குழப்பமும்.


பிரேம்ஜி
ஏப் 28, 2025 06:59

மாவட்ட தலைவர்கள் மட்டுமாவது தவறாமல் வருவார்களா? 50 பேர் அமரும் மினி ஹால் போதும். போக்குவரத்து வரத்து நெரிசல் மதுரையில் வந்து விடக்கூடாது என்று மீனாட்சி சுந்தரேஸ்வரரை வேண்டுகிறோம்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை