உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களின் அபார வளர்ச்சியால் நாடே அதிர்ச்சி; சொல்கிறார் முன்னாள் அமைச்சர் உதயகுமார்

ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களின் அபார வளர்ச்சியால் நாடே அதிர்ச்சி; சொல்கிறார் முன்னாள் அமைச்சர் உதயகுமார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : முதல்வர் ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களின் அபார தொழில் வளர்ச்சியால் நாடே அதிர்ச்சியடைந்துள்ளது என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது:அடுத்த 15 ஆண்டுகளும் தி.மு.க., ஆட்சி தொடரும் என்பது ஸ்டாலினின் பேராசையை காட்டுகிறது. ஸ்டாலின் குடும்ப தொழில் வளர்ச்சி இன்னும் விரிவடைவதற்காக ஆட்சி தொடர வேண்டும் என விரும்புகிறாரா.'டான்' 'ரெட் ஜெயன்ட்' போன்ற நிறுவனங்கள் மூலம் படங்களை வெளியிட்டு, சினிமா போன்று ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகும் யோகம் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஒரே ஆண்டில் ரூ. பல்லாயிரம் கோடி முதலீடு உட்பட பல்வேறு நிலைகளிலே ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களின் தொழில் வளர்ச்சி அபாரமாக உள்ளது. இதை நாடே பார்த்து அதிர்ச்சியாகி கொண்டிருக்கிறது. இனி தி.மு.க., ஆட்சி தொடரக் கூடாது என்று மக்கள் நினைக்கின்றனர். இதை உளவுத்துறை மூலம் தெரிந்து அதிர்ச்சியில் உள்ளனர். ஒரு குடும்ப ஆட்சியின் பிடியில் தமிழகம் உள்ளது. இதில் இருந்து மக்களை மீட்க வேண்டும். அதற்கான வாய்ப்பு 2026 தேர்தல். அப்போது ஸ்டாலினின் கனவு நிறைவேறாது. அ.தி.மு.க., ஆட்சியை மக்கள் மலரச் செய்வர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Padmasridharan
மே 20, 2025 12:54

இவங்களதும் வராது, அவங்களதும் வராது. விஜயம் செய்வதுதான் வரும்.


முருகன்
மே 19, 2025 11:18

இனி இவர்களுக்கு வளர்ச்சி இல்லை என்ற ஏக்கம் இப்படி பேச வைக்கிறது


pmsamy
மே 19, 2025 09:53

ஒரு அரசியல்வாதியின் குடும்பத்தை பற்றி பேசுற அளவுக்கு அதிமுக அரசியல் மோசம் அடைந்து விட்டது நாட்டில் வேறு பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கு


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 19, 2025 08:39

வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை வளைத்து போட்டு 300 வருடங்கள் ஆட்சி செய்தார்கள். சமீபத்தில் டிரம்ப் கூட வியாபார உத்தி காட்டி போரை நிறுத்தியதாக கூறி அமைதிக்கான நோபல் பரிசுக்கு விண்ணப்பம் செய்துள்ளார். வியாபாரம் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியை ஆண்டாண்டு காலமாக திமுக அடிமை படுத்தி வைத்துள்ளது. எமெர்ஜென்சி மூலம் சிறை வைத்து சித்திரவதை செய்த காங்கிரஸ் கட்சியையே நேருவின் மகளே வா வா நிலையான ஆட்சி தா தா என பாப்பா பாட்டு பாடி வியாபார வசதி செய்து கொடுத்து தனக்கு அடிமையாக்கி கொண்டுள்ளது திமுக. வியாபாரம் இதற்காக எந்த சமரசம் செய்து கொள்ளும் ஆங்கிலேயர் வழியை பின்பற்றுவதால் தான் தமிழ் ஆங்கிலம் என இரு மொழி கொள்கை. நீங்கள் தான் அதிர்ச்சி அடைந்துள்ளீர்கள். நாங்கள் யாரும் அதிர்ச்சி அடையவில்லை. சென்ற முறை நீங்கள் தோற்ற பின்னர் உங்கள் கட்சியினர் வசம் இருந்த உள்ளுர் அரசு கான்ட்ராக்ட் கள் எல்லாம் திமுக கட்சியிடம் சென்றதா என்று பார்த்தீர்களா. நீங்கள் பார்க்கவில்லை என்பது அடுத்து நடந்த உள்ளூர் தேர்தலில் தான் தெரிந்ததே. வியாபாரம் கான்ட்ராக்ட் எதுவும் மாறாமல் அதிமுக கட்சியினரிடம் அப்படியே இருந்தது ஆனால் திமுக ஆட்கள் அவைகளை ஒருங்கிணைத்து வியாபார உத்தி மூலம் அதிமுக ஓட்டுகளை கலைத்து வெற்றி பெற்றது. போயா போய் இது போன்று அறிக்கை விடாமல் கீழ் மட்டம் வரை சென்று எடப்பாடியை பேசிச் சொல்லி மீண்டும் அதிமுக வோட்டுகள் திமுகவிற்கு செல்லாமல் அதிமுக பக்கம் திருப்புங்கள்.


xyzabc
மே 19, 2025 04:57

குடும்பத்தினர் மட்டும் அல்ல. சுற்றி இருக்கும் திருடர்கள் கூட.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை