உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பொதுக்குழு அமைதியாக நடக்கணும்: களஆய்வு கலவரத்தால் பழனிசாமி கட்டளை

பொதுக்குழு அமைதியாக நடக்கணும்: களஆய்வு கலவரத்தால் பழனிசாமி கட்டளை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கள ஆய்வு கூட்டங்களில் நடந்த அடிதடி சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்துள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, டிச., 15ல் நடக்கவுள்ள பொதுக்குழுவில், அது எதிரொலிக்காமல் இருக்க வேண்டும் என, மாவட்டச் செயலர்களுக்கு உத்தரவிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.கட்சியினரின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய, முன்னாள் அமைச்சர்கள், 10 பேர் குழுவை பழனிசாமி நியமித்தார். மாவட்டம் வாரியாக கள ஆய்வு கூட்டங்கள் நடத்தி, டிச., 7க்குள் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.திருநெல்வேலி, தஞ்சாவூர், கும்பகோணம் மாவட்டங்களில் நடந்த கள ஆய்வு கூட்டங்கள் கைகலப்பில் முடிந்தன. மதுரையில் நடந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜு, நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில், கோஷ்டி சண்டை அரங்கேறியது. எதிர்ப்பு குரல்கோவை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசும்போது, நிர்வாகிகள் சிலர் எழுந்து, 'கட்சி தொடர் தோல்வி முகத்தை சந்தித்து வருகிறது. இந்த நேரத்தில் கூட, கட்சி ஒற்றுமை குறித்து பேச அனுமதிக்க மாட்டீர்களா?' என, எதிர்ப்பு குரல் எழுப்பினர். இந்த விஷயம், பழனிசாமிக்கு தெரியவந்ததும், அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். உட்கட்சி மோதல்கள் குறித்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள பெங்களூரு புகழேந்தி கூறுகையில், 'இரண்டாம் கட்டத் தலைவர்கள் சொல்லி தான், கள ஆய்வுக் கூட்டத்தில் கலாட்டா நடக்கிறது. 'இது பொதுக்குழுவிலும் எதிரொலிக்கும். ஜனநாயகம் இன்றி கட்சியை நடத்தி வரும் பழனிசாமிக்கு, கட்சி கள நிலவரம் என்னவென்று புரியாமல் இருந்தது.'கள ஆய்வுக்கென்று செல்லும் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே கலவர ஆய்வாக நடப்பதால் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளார். 'இருந்தாலும், இந்த விஷயம் பொதுக் குழுவிலும் வெடித்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். இனி, அவர் மட்டும் தன்னிச்சையாக கட்சியை நடத்திச் செல்ல முடியாது என்ற சூழல் உருவாகி உள்ளது. 'தொண்டர்களும், நிர்வாகிகளும் எழுப்பும் கேள்விகளுக்கு, கட்சித் தலைமை பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்' என எச்சரித்துள்ளார்.அழைக்க வேண்டாம்பொதுக்குழுவில் எந்த சலசலப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் பழனிசாமி கவனமாக இருக்கிறார். இது தொடர்பாக, மாவட்ட செயலர்களுக்கும் உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:கள ஆய்வு கூட்டங்களில் அரங்கேறும் அடிதடி சம்பவங்கள், டிச., 15ல் நடக்கவுள்ள பொதுக்குழு கூட்டத்திலும் தொடரலாம் என பழனிசாமிக்கு தகவல் கிடைத்திருக்கிறது.இதையடுத்து, கள ஆய்வுக் கூட்டங்களில், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும், கட்சி ஒற்றுமைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தவர்கள் யார் யார் என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களை பொதுக்குழுவுக்கு அழைக்க வேண்டாம் என பழனிசாமி கூறியுள்ளார்.எந்த சலசலப்பும் இல்லாமல், பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என, மாவட்டச் செயலர்களுக்கு பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Perumal Pillai
டிச 01, 2024 16:17

செத்த கட்சிக்கு ஏனய்யா ஜாதகம் பார்க்கிறிங்க ?


m.n.balasubramani
நவ 30, 2024 21:42

பிரச்சனை உண்டு . கட்சி முடிய போகுது , கவனம் தேவை .


KR
நவ 30, 2024 18:59

Looks like ADMK is heading towards another split. Who is going to be the Eknath Shinde is the question. A part of ADMK wants alliance with BJP and another part doesn’t want. Unless EPS constructs a strong alliance without BJP, the split is unavoidable


MADHAVAN
நவ 30, 2024 11:21

தரமான அடிமையாக இருக்கிறது எடுப்படி பழனிசாமின் அதிமுக, எப்படியும் கட்சி சில மாதங்களில் காணாமல் போகப்போகுது, அந்த இடத்தை சீமான் விஜய் பிடிக்கப்போவது உறுதி


கிஜன்
நவ 30, 2024 11:03

இப்போது இந்த நிலையை அடைந்திருந்தாலும், இந்த நிலை இப்படியே தொடரும் என்று அக்கட்சியினர் நினைக்க வேண்டிய அவசியமில்லை. ஆளும் கட்சி மீது வெவ்வேறு காரணங்களுக்காக ஆங்காங்கு தோன்றக் கூடிய அதிருப்தி, முக்கியமான எதிர்க் கட்சிக்குப் பலனளிக்கும். அதைப் பயன்படுத்திக் கொள்ள அந்தக் கட்சி தன்னைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கட்சியினர் சோர்வடையாமல் பார்த்துக் கொண்டு, பொறுப்புள்ள எதிர்க் கட்சியாக அதிமுகவை வழி நடத்திச் செல்வது அக்கட்சித் தலைமையின் கையில் இருக்கிறது.


SP
நவ 30, 2024 09:45

துரோகம் செய்து பதவிக்கு வந்தவர்கள்.அதே துரோகத்தால் வீழ்வார்கள்.


S.L.Narasimman
நவ 30, 2024 08:25

எந்த கட்சியிலேதான் கோஷடி சண்டை இல்லை. விடியல் கட்சியிலே மந்திரிகள் கோஷ்டிகள் அடித்து கொள்கிறார்கள். வார்டு கவுன்சிலர்கள் சேர்மன், மேயர்களுடன் அடிதடி நடத்துகிறார்கள். காங்கிரசு, பிசெபி கூட்டங்களில் குட்டி தலைவர்கள் தலைமை ஆபிசுகளிலேயே வேட்டி உருவி சண்டை போடுகிறார்கள். புகழேந்தியை அனாதையா கட்சி விட்டதாலே பாவம் புலம்பி திறியிராரு.


Oviya Vijay
நவ 30, 2024 07:46

இவரது கட்டளையை மதிப்பானுங்கிறீங்க??? வாய்ப்பே இல்லை... இவர் என்ன எம்ஜிஆரா இல்லை ஜெயலலிதாவா??? இவர பார்த்து நடுங்கிறதுக்கு... அவங்க மாதிரி தலைமைப் பண்பு எல்லாம் இவர்கிட்ட கிடையாது. அதிமுக தலைமைல இப்போதைக்கு ஒரு காமெடியன். அம்புட்டு தான்... அடுத்த எலெக்ஷன் வர்றதுக்குள்ளேயே இவரோட வண்டவாளம் தண்டவாளம் ஏறிடும்...


இசக்கிமுத்து,தூத்துக்குடி
நவ 30, 2024 09:06

நிலவரம் கலவரம்தான் வேட்டி உருவல் சட்டை கிழிப்புக்கு உத்திரவாதம் உறுதி என்பதால் பொதுக் குழுவுக்கு வருகைதரும் ரத்தத்தின் ரத்தங்கள் கூடுமானவரை தலைக் கவசம் அணிந்து வருமாறு கேட்டுக் கொள்ள படுகிறார்கள். அதையும் மீறி மண்டை உடைப்பு போன்ற ஏதாவது விரும்பத் தகாத சம்பவங்கள் நடந்தால் அதிமுக சட்ட விதிகளின் படி அதற்கான இழப்பீட்டை கோர முடியாது என்பதை தலைமையின் உத்தரவின் பேரில் பொதுக் குழுவின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.


Perumal Pillai
நவ 30, 2024 07:42

It should be conducted on the virtual mode. The main agenda must be to decide whether to bury or cremate the dead party.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை