உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கவர்னர் இனி வேந்தராக இருக்க முடியாது

கவர்னர் இனி வேந்தராக இருக்க முடியாது

சென்னை:“கவர்னர் இனி வேந்தராக இருக்க முடியாது; தமிழக அரசு நியமிப்பவரே வேந்தராக இருப்பார்,” என, தி.மு.க., வழக்கறிஞரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான வில்சன் கூறினார்.

அவர் அளித்த பேட்டி:

உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கி உள்ளது. இனி, சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். மாநில அரசின் அமைச்சரவை எடுக்கும் முடிவின்படி நடந்துகொள்ள வேண்டும். சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு, கவர்னர் ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என, தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில், 10 மசோதாக்கள் மீது, கவர்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், முதல்வர் அறிவுரையின்படி வழக்கு தாக்கல் செய்தோம். அந்த, 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அவை நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க, கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சட்ட மசோதா வந்தால், 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்ப முடிவெடுத்தால் மூன்று மாதங்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த வழக்கின் வழியாக, அனைத்து மாநிலங்களின் சுயாட்சியை, முதல்வர் ஸ்டாலின் நிலைநாட்டியுள்ளார்.தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கவர்னர் இடையூறாக இருந்தால், நீதிமன்றத்தை அணுகலாம் என்ற தீர்ப்பை பெற்றுள்ளார். அனைத்து மாநிலங்களுக்கும், இந்த தீர்ப்பு பொருந்தும். இனி வரும் காலங்களில், கவர்னர் காலம் தாழ்த்த முடியாது. அரசுக்கு நண்பராக, வழிகாட்டியாக, ஆலோசகராக கவர்னர் இருக்க வேண்டும். முட்டுக்கட்டை போடக்கூடாது என, நிறைய அறிவுரைகளை, நீதிபதிகள் வழங்கி உள்ளனர்.இது, அனைத்து மாநில கவர்னர்களுக்கும் பொருந்தும். இந்த மசோதாக்கள், கவர்னரை வேந்தர் பதவியில் இருந்து நீக்குவதற்கு இயற்றப்பட்டன. கவர்னர் தற்போது, வேந்தர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். தமிழக அரசு நியமிப்பவர்களே வேந்தராக இருப்பர். இவ்வாறு அவர் கூறினார்.

10 மசோதாக்கள் விபரம்

மீன்வள பல்கலை திருத்த சட்ட மசோதாகால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை திருத்த சட்ட மசோதாபல்கலைகள் திருத்த சட்ட மசோதாடாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலை திருத்த சட்ட மசோதாடாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை திருத்த சட்ட மசோதாவேளாண்மை பல்கலை திருத்த சட்ட மசோதாதமிழ்நாடு பல்கலை சட்டங்கள் இரண்டாம் திருத்த சட்ட மசோதாதமிழ் பல்கலை இரண்டாம் திருத்த சட்ட மசோதாமீன்வள பல்கலை இரண்டாம் திருத்த சட்ட மசோதாதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை திருத்த சட்ட மசோதா.பல்கலைகளுக்கான இந்த திருத்த சட்ட மசோதாவின்படி, துணை வேந்தர் நியமனம், நீக்கம் தொடர்பான அதிகாரம், வேந்தரிடம் இருந்து தமிழக அரசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு மீன்வள பல்கலை, தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலை என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தமிழ்வேள்
ஏப் 09, 2025 20:18

உச்ச நீதிமன்றம் ஜனாதிபதியின் சார்பில் அவரது ஒப்புதல் இன்றி எந்த ஒரு மசோதாவையும் சட்டம் ஆக அறிவிக்க இயலாது.. திராவிட கும்பல் வேந்தராக உள்ள தமிழக பல்கலைக்கழக பட்டங்கள் ஏற்க முடியாது என மறுக்கப்பட்டால் திராவிட வேந்தர் எந்த ஆணியை பிடுங்குவார்? யூஜிசி ஐ ஒரு தரப்பாக சேர்க்காமல் விசாரிக்காமல் கருத்து கேட்காமல் கொடுக்கப்பட்ட இத்தீர்ப்பு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாக ரத்து செய்ய வாய்ப்பு அதிகம்.நாளை தமிழக ரயில் பாதைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு சொந்தம் என்றோ, தனித்தமிழ் நாடு பிரேரணை சட்டம் என்று ஒரு மசோதாவை கொண்டு வந்து கவர்னர் ஒப்புதல் கேட்டால் அதையும் நீதிமன்றம் கொடுக்க வேண்டும் என்று சொல்லுமா? இது வினையை விலை கொடுத்து வாங்கும் போக்கு.. மத்திய அரசோடு மோதல் உள்ளதால் கோர்ட் யோசிக்காமல் கவுன்டர் கொடுக்கிறோம் பேர்வழி என்று அவலமான காமெடி செய்கிறது


நிமலன்
ஏப் 09, 2025 18:54

அதெப்படி. உச்ச நீதிமன்றம் ஆளுநர் வேலையை எப்படி பார்க்க முடியும். ஆளுநர் இத்தனை நாட்களுக்குள் மசோதாவை திருப்பி அனுப்பவோ அல்லது ஜனாதிபதிக்கு அனுப்பவோ வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க இயலும். அவ்வளவுதான்.


venugopal s
ஏப் 09, 2025 18:17

சட்டம் தெரியாத இவரைப் போன்ற ஆளுநர்கள் பல்கலைக்கழக வேந்தர்களாக இருப்பதே வேஸ்ட் தான்! அதனால் தமிழக பல்கலைக்கழகங்களின் தரம் முன்னேற்றம் அடையும்!


பாரத புதல்வன் தமிழக ஒன்றியம்
ஏப் 09, 2025 16:57

இவர் தான் சரியான ஆளுநர்.


naranam
ஏப் 09, 2025 16:57

இப்படி ஒரு பதவி தேவையா?


சத்யநாராயணன்
ஏப் 09, 2025 16:51

இது கல்வித் துறைக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனை


krishna
ஏப் 09, 2025 13:28

ASHA SUPER THURU PIDITHU IRUMBU KARAM IN8 VC POSTING KODIGALIL EELAM VITTU KALLA KATTALAAM.SENGAL THIRUDAN INI UNIVERSITY SYLLABUS GINALISE SEIVAAR.NALLA NEEDHI.NALLA NEEDHI MANDRANGAL.VAAZGA JANANAAYAGAM.


ஆரூர் ரங்
ஏப் 09, 2025 11:42

UGC விதிமுறைகளை மீறி துணைவேந்தர் தேடல் குழுக்களை அமைத்தால் UGC நிதியளிப்பதை நிறுத்தி விடும். அப்போது மீண்டும் மத்திய அரசின் மீது குற்றம் சாட்டி அரசியல் ஆதாயம் தேட திமுக முயலும். ஒரே தீர்வு. தி.மு.க வை பிரிவினை பயங்கரவாத இயக்கம் எனக்கூறி தடை செய்வதுதான்.


அப்பாவி
ஏப் 09, 2025 10:35

மன்னராட்சி கை மாறிடிச்சி.


N Sasikumar Yadhav
ஏப் 09, 2025 08:41

ஆக இனிமேல் வேந்தர் பதவியை வைத்து கோடிகணக்கில் கல்லா கட்டலாம் . ஆனாலும் ஆட்டய போடவே சட்டம் போட்ட கும்பல்தான் திராவிட மாடல் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை