உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / "நீங்கள் எங்க ஹீரோ அங்கிள்" - பிரதமருக்கு நன்றி சொன்ன இமாம் பேரன்

"நீங்கள் எங்க ஹீரோ அங்கிள்" - பிரதமருக்கு நன்றி சொன்ன இமாம் பேரன்

புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் பதட்டத்தில் பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைக்கு ஜூம்மா மசூதி இமாம் பேரன் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில் ' நீங்கள் எங்க ஹீரோ அங்கிள்; பிரதமருக்கு நன்றி ' என தெரிவித்துள்ளார். சமீபத்திய பாக்., பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் அதிரடியாக பதிலடி அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பின்னர் இரு நாட்டு தரப்பிலும் பயங்கர ஏவுகணை தாக்குதல் நடந்தது. தொடர்ந்து போர் மூளும் சூழல் உருவானது. ஆனால் அமைதிப்பேச்சின் மூலம் தற்காலிகமாக இந்தியா தாக்குதலை நிறுத்தி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j3d5aik1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக டில்லி ஜூம்மா மஜித் ஷாகீ இமாம் சையீது அரீப் புகாரி பேரன் அஹம்மது புகாரி, மஜித்அருகே அமர்ந்தவாறு ஒரு வீடியோவை சமூகவலை தளங்களில் பதிவிட்டுள்ளார். ' இந்தியா, பாகிஸ்தான் இடையில் பதட்டம் ஏற்பட்டதால் நான் அச்சத்தில் உறைந்து போய் இருந்தேன். இது எனது மனதை பெரும் பாதித்தது. மதிப்பிற்குரிய அங்கிள் பயங்கரவாதத்திற்கு எதிராக தாங்கள் எடுத்த கடும் நடவடிக்கைக்கு மிக்க நன்றி! உங்கள் நடவடிக்கையில் வெளிப்பட்டது. ' நீங்கள் எங்களின் ஹீரோ ' ,.அரசுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் மிக்க நன்றி ! நான் தற்போது எனது படிப்பில் கவனம் செலுத்த செல்கிறேன் நன்றி ஜெய்ஹிந்த் ! ' இவ்வாறு புகாரி கூறியுள்ளார். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Thiyagarajan S
மே 16, 2025 07:05

உலகத்திலேயே அதிகமான முஸ்லிம்கள் வாழ்வது இந்தியாவில் தான். அவர்கள் உலகத்தில் உள்ள மற்ற முஸ்லீம் நாடுகளில் வாழும் மக்களை விட மிகவும் அமைதியாகவும் பாதுகாப்பாவும் வாழுகின்றனர். ஆனால் இந்த அமைதியும் பாதுகாப்பும் பயங்கரவாத இஸ்லாமிய அமைப்பினருக்கு உடன்பாடு இல்லை அதனால் இவர்களை நிம்மதியற்ற வாழ்க்கை முறைக்கு மாற்றி விட முயற்சி செய்கின்றனர்... இந்திய முஸ்லிம்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது..


Tetra
மே 14, 2025 19:26

நம்ப சொல்கிறீர்களா?


manjagrup
மே 14, 2025 08:42

இந்திய ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தானில் அணு பாதுகாப்பு நிலையத்தில் விபத்து ஏற்பட்டு அணுகசிவு இருப்பதாக ஏற்பட்ட சூழலின் காரணமாக தான் இந்தியா போர் நிறுத்தத்திற்கு சம்மதித்தது


Bala
மே 13, 2025 16:27

Our draavida modal supporters, reporters, media, TV channels should learn what is Patriotism from this young boy. Congrats my dear grandson of Imam, Mr Ahmed Bhukhari


Balasubramanian
மே 13, 2025 14:12

வாழ்த்துக்கள் குழந்தை! நல்லா படி, நல்ல இந்திய குடிமகனாக நாட்டுக்கு நல்லது செய்! ஜெய் ஹிந்த்!


NaanPeriyavan
மே 13, 2025 13:47

நன்று குழந்தையே, நல்லறிவு பெற்று இந்த உலகம் உய்ய பல நல்ல செயல்கள் செய்ய வாழ்த்துகிறேன்.


Kumar Kumzi
மே 13, 2025 11:49

உனது எதிர்காலத்துக்கு உதவ கூடிய பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்து


G Mahalingam
மே 13, 2025 11:24

எதிர் கட்சிகள் அத்தனை பேருக்கும் தீடீர் என்று போர் நிறுத்தம் ஆனதால் அவர்களின் கனவு தகர்ந்தது. போர் நடக்க வேண்டும் என்று உள்மனதில் கண்டிப்பாக இருக்கு அதன் மூலம் இந்திய பொருளாதாரம் விழ்த்த வேண்டும் என்று நினைத்தார்கள். வட போச்சே.


NaanPeriyavan
மே 13, 2025 13:50

எதிரி நாடுகளை விட்டுடீங்களே


Tc Raman
மே 13, 2025 11:10

சுயமா சிந்திச்சா தாங்க முடியலையா?


மூர்க்கன்
மே 13, 2025 12:46

சுயமா சிந்திச்சா யாராவது பாஜகவுக்கு வோட்டு போடுவார்களா?


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 13, 2025 14:56

சுயமா சிந்திக்காமே நல்லது கெட்டது நாலு பேருக்கிட்டே கேட்டு தெரிஞ்சுட்டு நல்லது எதுன்னு சிந்திச்சு பாஜகவிற்கு வோட்டு போடுவாங்க. கண்ணார காண்பதும் பொய் காதார கேட்பதும் பொய் தீர விசாரித்து அறிவதே மேல் அப்படின்னு எங்க மூதாதையர் சொல்லி கொடுத்து இருக்காங்க.


S.velushanmugam S.velushanmugam
மே 13, 2025 10:56

super many more thanks to you


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை