உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தண்டவாளம் இருக்கு... போதிய ரயில்கள் இல்லை...

தண்டவாளம் இருக்கு... போதிய ரயில்கள் இல்லை...

மதுரை: மதுரைக் கோட்டத்திற்குட்பட்ட மதுரை - போடி, மதுரை - கோவை வழித்தடங்களில் பகல் நேர ரயில்களின் குறைவால் பயணிகள் பஸ்களை நம்பியுள்ள நிலை உள்ளது.மதுரை - போடி இடையே 2011ல் துவங்கிய அகல ரயில் பாதைபணிகள் நிறைவடைந்து, 2022 மே 27ல் மதுரை - தேனி இடையே ரயில் இயக்கப்பட்டது. 2023 ஜூன் 15ல் போடி ரயில்வே ஸ்டேஷன் பயன்பாட்டிற்கு வந்தது. மின்மயமாக்கல் பணிகள் முடிந்து இந்தாண்டு பிப்.,4 முதல் மின்சார இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்படுகின்றன.தற்போது மதுரையில் இருந்து தினமும் காலை 8:20 மணிக்கு புறப்படும் 14 பெட்டிகள் கொண்ட பாசஞ்சர் (56701), காலை 10:20 மணிக்கு போடி செல்கிறது. மறுமார்க்கம் மாலை 6:00 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் (56702), இரவு 7:50 மணிக்கு மதுரை வருகிறது.வாரம் 3நாட்கள் இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் - போடி ரயில் (20601), காலை 6:40 மணிக்கு மதுரை வந்து 8:55 மணிக்கு போடி செல்கிறது. மறுமார்க்கம் ரயில் (20602), இரவு 8:50 மணிக்கு புறப்பட்டு 10:40 மணிக்கு மதுரை வந்து சென்னை செல்கிறது.இவ்விரு ரயில்கள் தவிர, காலை 10:20 மணிக்கு பின் மாலை 6:00 மணி வரை, அவ்வழித்தடத்தில் வேறு ரயில்கள் இல்லை. போடி, தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதிகளில் இருந்து கல்வி, வியாபாரம் நிமித்தமாக மதுரைக்கு வரும் பலர், காலையில் வருவதற்கும் மாலையில் ஊர் செல்வதற்கும் ரயில் இல்லாமல் பஸ்களை நம்பியுள்ளனர்.அதுபோல், மதுரை - கோவை இடையே பழநி வழியாக ஒரு பாசஞ்சர் மட்டுமே இயங்கி வருகிறது. காலை 7:05 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் பாசஞ்சர் (16722), மதியம் 12:10 மணிக்கு கோவை செல்கிறது. மறுமார்க்கம் மதியம் 2:30 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் (16721), இரவு 7:35 மணிக்கு மதுரை வருகிறது.80 கி.மீ., துாரம் கொண்ட திருநெல்வேலி - செங்கோட்டை, 61 கி.மீ., துாரம் கொண்ட திருநெல்வேலி - திருச்செந்துார் வழித்தடங்களில் இருமார்க்கங்களிலும் தினமும் தலா 12 பாசஞ்சர்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் 90 கி.மீ., துாரம் கொண்ட மதுரை - போடி, 229 கி.மீ., துாரம் கொண்ட மதுரை - கோவை (பழநி வழி) ஆகிய வழித்தடங்களில் இருமார்க்கங்களிலும் தலா இரு பாசஞ்சர் மட்டுமே இயங்கி வருகின்றன.பயணிகள் கூறுகையில், காலை 7:15 மணிக்கு போடியில் இருந்து புறப்பட்டு 9:15 மணிக்கு மதுரை வரும் வகையிலும், மறுமார்க்கம் மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு இரவு 7:30 மணிக்கு போடி செல்லும் வகையிலும் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். சென்னை சென்ட்ரல் - போடி ரயில்களை தினமும் இயக்க வேண்டும். மதுரை - கோவை வழித்தடத்தில், காலை 7:00 மணிக்குகோவையில் இருந்து புறப்பட்டு பழநி வழியாக மதியம் 12:05 மணிக்கு மதுரை வரும் வகையிலும், மறுமார்க்கம் மதியம் 2:45 மணிக்கு புறப்பட்டு இரவு 7:50 மணிக்கு கோவை செல்லும் வகையிலும் கூடுதல் ரயில்களை இயக்கலாம்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

கண்ணா
ஜூலை 18, 2025 08:30

இது ஒரு மிக பெரிய மாஃபியா. மதுரை மோடி கோவை இரயில் பிரபலப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் பெரிய உறுதிமொழிகளை கொடுக்கும் மத்திய அரசு இந்த விஷயத்தில் மெத்தனம் காட்டுவது ஏனோ?.


Ramesh Sargam
ஜூலை 17, 2025 21:26

தமிழக எம்பிக்கள் பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது அங்குள்ள உணவகத்தில் சாப்பிடும் நேரத்தை குறைத்துக்கொண்டு, நேர்மையாக கோரிக்கை வைத்தால், இந்திய ரயில்வே துறை மத்திய அமைச்சர் இவர்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுக்கமாட்டாரா?, தமிழகத்திற்கு தேவையானவற்றை செய்யமாட்டாரா? தமிழக எம்பிக்கள் பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது கூட்டம் ஆரம்பித்தவுடன் கூச்சல் குழப்பம் செய்து, அங்கிருந்து வெளியேறி உணவகத்திற்கு சென்று விடுவார்கள் சாப்பிட. அப்படி இருந்தால் தமிழகத்திற்கு தேவையானவை ஒன்றுமே கிடைக்காது.


Narasimman Lakshminarasimhan
ஜூலை 17, 2025 19:45

உண்மை. அதிக ரயில்கள் வேண்டும் . 2014 முதல் பிஜேபி. அதற்கு முன் இருந்த காங்கிரஸ் ஏன் ஆமை வேகத்தில் தண்டவாளங்கள் அமைப்பதற்கே பல வருடங்கள் எடுத்து கொண்டது? நமது ஜல்லிக்கட்டு நாயகன் 2001 முதல் முக்கிய பதவி வகிக்கிறார். இது மாநில அரசின் கீழ் இல்லை என்றாலும், ஒரே ஒரு முறை கூட போடி சட்ட மன்ற உறுப்பினர் ரயில் வேண்டும் என்று கோரிக்கை வைத்தாரா என்பது தெரியவில்லை.


அப்பாவி
ஜூலை 17, 2025 18:28

டபுள் இஞ்சின் சர்க்காரா இருந்தா நாலு வந்தே பாரத் வண்டிகள் உட்டுருப்பாங்க.


Subburamu Krishnasamy
ஜூலை 17, 2025 17:49

Number of trains between Madurai and Coimbatore were more in meter gauge rail track. After convertor broad gauge track the Number of trains are very very less. Indifferent attitude of southern railway and Palghat division the trains service is not given much importance. The purpose of gauge conversion has failed to fulfill the needs of trains commuters. No sufficient trains from Coimbatore to Kanyakumari Nagercoil Tirunelveli and other southern towns. All parties MPs are useless leaders. Even BJP MLAs and a lone Minister work is completely unsatisfactory


venugopal s
ஜூலை 17, 2025 12:53

தமிழகத்துக்கு கூடுதல் ரயில் சேவை வேண்டி எந்த ஒரு திட்டத்துக்கும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் மத்திய பாஜக அரசின் கீழ் உள்ள ரயில்வே போர்டு அனுமதி கொடுப்பதில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை! ரயில் பெட்டிகள் பயனின்றி சும்மாவாவது போட்டு வைப்பார்களே தவிர தமிழக மக்களுக்கு பயன் கிடைக்கக்கூடாது என்ற ரயில்வேயின் நல்ல எண்ணம் தான் காரணம்!


bogu
ஜூலை 17, 2025 15:22

அந்த தொகுதி MP பாராளுமன்ற கேன்டீனில் சாப்பிடுவதை தவிர உருப்படியாக ஒன்றும் இல்லை போலிருக்கிறது


N Sasikumar Yadhav
ஜூலை 17, 2025 19:51

தீயமுகவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிக்சர் தின்கிறார்களா . தொகுதி பிரச்சினையை பேச வக்கில்லாதவர்கள் பாராளுமன்ற கேண்டினில் தின்பதையே தொழிலாக வைத்து கொண்டிருக்கிறார்கள்


Murali
ஜூலை 17, 2025 10:39

Yes. please provide more trains via theni to Trichy, Chennai, coimbatore


ஆரூர் ரங்
ஜூலை 17, 2025 10:32

சரக்குப் போக்குவரத்தில்தான் லாபம். அதை வைத்துத்தான் பயணிகள் ரயில்களால் ஏற்படும் கடும் நஷ்டத்தைச் சரிகட்ட முடியும். ஆனால் தொழில் வளமே இல்லாததால் அங்கு அதற்கும் வழியில்லை. தவறு ரயில்வே இலாகாவினதல்ல.


சிவம்
ஜூலை 17, 2025 11:06

அரசு லாப நோக்குடன் செயல்படும் ஒரு இயந்திரம் அல்ல. மனிதர்கள் வணிக நோக்கத்துடன் அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று வருவதற்கு வழி செய்ய வேண்டியது அரசின் கடமை. மேலும் மக்கள் செய்யும் வணிகம் அரசுக்கு வரும் வருமானம் தானே.


ஆரூர் ரங்
ஜூலை 17, 2025 11:30

அன்பரே. ரயிலில் நஷ்டம் ஏற்பட்டால் அதனை அரசு வேறு விதத்தில் வரிகளை போட்டு சரிகட்டிவிடும். எப்படியும் மக்கள்தான் கட்ட வேண்டும். 80 சதவீத மக்கள் அபூர்வமாகதான் ரயிலில் பயணிக்கிறார்கள். அந்த வரிகள் அவர்கள் தலையிலும் விழும். நியாயமா?.


Sivaprakasam Chinnayan
ஜூலை 17, 2025 08:01

இப்ப அவரு வெத்துவேட்டா


நிமலன்
ஜூலை 17, 2025 09:57

வேறு ஒருவர் தலைவராக இருக்கும் போது அவரை மீறி மேலிடத்திற்கு செல்வது நாகரீகம் இல்லை என்பது கூட தெரியாதவரை யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.


ஈசன்
ஜூலை 17, 2025 07:30

அண்ணாமலை கட்சி தலைவராக இருந்த போது இந்த பிரச்சனை குறித்து பேசி இருந்தால், நிச்சயமாக மேலும் ரயில்கள் இந்த வழி தடத்தில் வந்திருக்கும். இப்போது புலம்பி என்ன பயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை