உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சீட் குறைந்தாலும் தி.மு.க., கூட்டணியே கட்சியினரிடம் திருமாவளவன் தகவல்

சீட் குறைந்தாலும் தி.மு.க., கூட்டணியே கட்சியினரிடம் திருமாவளவன் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'கூட்டணியில் நமக்கு குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்காவிட்டாலும், தி.மு.க., கூட்டணியில் தான் தொடருவோம்' என, வி.சி., நிர்வாகிகளிடம் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.தி.மு.க., கூட்டணியில் முக்கிய கட்சியாக வி.சி., உள்ளது. அக்கட்சியை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வர, பா.ஜ., - அ.தி.மு.க., - த.வெ.க., உள்ளிட்ட கட்சிகள் முயன்று வருகின்றன. ஆனால், பா.ஜ., - பா.ம.க., இடம் பெறும் கூட்டணியில் வி.சி., இடம் பெறாது என திருமாவளவன் தெரிவித்து வருகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x4lzpyh1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேநேரம், தி.மு.க., கூட்டணியில், கடந்த சட்டசபை தேர்தலில் ஆறு இடங்களில் போட்டியிட்ட வி.சி., வரும் 2026 சட்டசபை தேர்தலில், தென் மாவட்டங்கள், கொங்கு மண்டலங்கள் என, 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. குறிப்பாக, ஐந்துக்கும் அதிகமான பொது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், சட்டசபை தேர்தலில் கூட்டணியில் அதிக 'சீட்' கிடைக்காவிட்டாலும், தி.மு.க., கூட்டணியில் தொடரப் போவதாக, கட்சி நிர்வாகிகளிடம் திருமாவளவன் தெரிவித்த தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து, வி.சி., நிர்வாகிகள் கூறியதாவது:அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வலுப்பெற்றுள்ளது. இக்கூட்டணியில், சீமானின் நா.த.க., விஜயின் த.வெ.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளை சேர்க்க பேச்சு நடந்து வருகிறது. அவ்வாறு அமைந்தால், 2026 சட்டசபை தேர்தலுக்கான போட்டி, இரு தரப்புக்கும் வலுவாக இருக்கும். தற்போதைய சூழலில் எங்கள் கூட்டணியில், வி.சி.,க்கு இரட்டை இலக்க இடங்களை கேட்டு வருகிறோம்.எங்கள் கட்சியும் பரவலாக வளர்ச்சி அடைந்திருப்பதால், கேட்கும் இடங்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம். அதே நேரம், விரும்பிய எண்ணிக்கையில் இடங்கள் கிடைக்காவிட்டாலும், மதவாத சக்திகளை எதிர்க்கும் எங்கள் முடிவில் மாற்றம் இருக்காது. இதே நிலைப்பாட்டில் தான் திருமாவளவனும் உள்ளார். 'இது தான் என் முடிவு' என்றும் கட்சி நிர்வாகிகளிடம் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதனால், என்ன நடந்தாலும், தி.மு.க., கூட்டணியில் தான் வி.சி., நீடிக்கும். இதில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Krishnan
ஜூலை 04, 2025 23:03

வேறு வழி, மீசையை முறுக்கி தொகுதி கேட்பேன் என்று அண்ணன் சொன்னதாக ஞாபகம்


theruvasagan
ஜூலை 04, 2025 22:14

ஆட்சியில பங்குன்னு பிட்டை போட்டா அசைஞ்சு கொடுப்பாங்கன்னு நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சுது இப்ப உள்ளதுக்கும் சங்கு ஊதிடுவாங்களோன்னு . அதனால சீட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. சுவீட் பாக்ஸ் கிடைச்சா அதுவே போதும் என்று காலில் விழுந்து கதறுவதற்கும் தயாராயிட்டேன்


Ramesh Sargam
ஜூலை 04, 2025 21:10

உங்களுக்கு சூடுசொரணையே இல்லையே.


அசோகன்
ஜூலை 04, 2025 17:13

கோபாலபுர கொத்தடிமை.......


pv, முத்தூர்
ஜூலை 04, 2025 16:23

இதுக்எதற்க்கு மீசை முறுக்கு? திமுகாவிடம் கட்சியை கொடுத்துவிடலாமே.


RAAJ68
ஜூலை 04, 2025 16:13

கோடிகள் கிடைக்கும் போது சீட்டு என்ன சீட்டு நான் பெட்டியை வாங்கிக்கிறேன் உழைக்கும் தொண்டர்களுக்கு பட்ட நமாம் போடுகிறேன்.. பிளாஸ்டிக் சேரில் உட்க்கார்த்தி வைத்தாலும் சரி தரையில் உட்கார்ந்து வைத்தாலும் சரி எங்களுக்கு சூடு சொரணை தன்மானம் எதுவும் கிடையாது


எவர்கிங்
ஜூலை 04, 2025 15:05

வேங்கைவயல் தண்ணி குடிச்சியாக்கும்!


பிரேம்ஜி
ஜூலை 04, 2025 13:39

சீட்டு குறைந்தாலும் சீட்டே கொடுக்காவிட்டாலும் சரணம்! பெட்டியே போதும்!


சிந்தனை
ஜூலை 04, 2025 13:39

ஆமாம் கூட்டுச்சோறு தான் ரொம்ப நல்லது


கண்ணன்
ஜூலை 04, 2025 11:11

சொம்பு தூக்கி எந்தப் பலனுமில்லையா!