உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தக்காளி, வெங்காயம் விலை உயர்வு: கூட்டுறவு கடைகளில் விற்கப்படுமா?

தக்காளி, வெங்காயம் விலை உயர்வு: கூட்டுறவு கடைகளில் விற்கப்படுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வெளிச்சந்தையில் கிலோ தக்காளி, பெரிய வெங்காயம் விலை தலா, 70 ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதால், ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, கூட்டுறவு காய்கறி கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி, வெங்காயம் விற்குமாறு, அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு பண்டகசாலைகளும், கூட்டுறவு சங்கங்களும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளை நடத்தி வருகின்றன. அவற்றில் சில முக்கிய காய்கறிகள், வெளிச்சந்தையை விட சற்று குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.தமிழகத்தில் பெரிய வெங்காயம் தேவை அதிகம் உள்ள நிலையில், விளைச்சல் மிகவும் குறைவு. மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு தினமும் வெங்காயம் வருகிறது. மேற்கண்ட மாநிலங்களில் பெய்த கன மழையால் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. இதனால், தமிழக சந்தைகளில், கிலோ பெரிய வெங்காயம், 70 - 80 ரூபாய்க்கு தற்போது விற்கப்படுகிறது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தக்காளி சாகுபடி நடக்கிறது. இதுதவிர, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வருகிறது. விளைச்சல் பாதிப்பால் தக்காளி வரத்தும் குறைந்துள்ளது. இதனால், சில தினங்களுக்கு முன், கிலோ 40 ரூபாய்க்கு கீழ் விற்ற தக்காளி, நேற்று 80 ரூபாயாக உயர்ந்துள்ளது.மத்திய அரசு, தேசிய கூட்டுறவு அமைப்பு வாயிலாகவும், நடமாடும் வேன்கள் வாயிலாகவும் மக்கள் கூடும் இடங்களில், கிலோ பெரிய வெங்காயம், 35 ரூபாய்க்கு விற்கிறது. அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில், கூட்டுறவு காய்கறி கடைகளில் குறைந்த விலைக்கு வெங்காயம், தக்காளி விற்குமாறு அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

N DHANDAPANI
அக் 05, 2024 09:36

அரசு அதிகாரிகளுக்கும் ஊடக அன்பர்களுக்கும் பொது மக்களுக்கும் இந்த தகவலை மீண்டும் ஒருமுறை விவசாயிகள் சார்பாக தெரிவித்துக்கொள்ள தமிழக விவசாயிகள் சங்கம் மேற்கு மண்டலம் கடமைப்பட்டுள்ளது ஒவ்வொரு ஆண்டும் விலை அதிகமாகின்ற பொழுது பொதுமக்கள் கண்ணீரும் அரசாங்கத்தின் சிரமமும், விலை குறையும் பொழுது விவசாயிகள் கண்ணீரும் மாறி மாறி வருகின்ற நிலையை மாற்ற ஜூலை 2023 நாங்கள் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்த மனு பற்றிய தகவலை தினமலர் 23.7.2023 பிரசுரித்ததையும் இன்றைய தக்காளி வெங்காய விலை பற்றிய தகவலையும் நினைவு கூறவும். இந் நிலைமையை மாற்ற நமது அரசாங்கம் முத்தரப்பு கூட்டத்தையும் விவசாய உற்பத்தி நிறுவனங்களுடன் உடன்படிக்கை செய்து தக்காளி ரூ 35 சின்ன வெங்காயம் 40 என குறைந்தபட்ச விலை நிர்ணையம் செய்யும் திட்டத்தையும் நிறைவேற்றுமாறு மீண்டும் வேண்டுகிறோம்


S. Gopalakrishnan
அக் 05, 2024 07:59

இயற்கை பேரிடர்களுக்கு மாநில அரசு பணம் ஒதுக்குவதே கிடையாதா ? கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி அனைத்தும் தில்லியில் இருந்து கொண்டே மோதி ஜி செய்து வருகிறார். வந்தே பாரத் ரயில், மாநிலங்களுக்கிடையே விரைவுச் சாலைகள், மருத்துவ காப்பீடு, விவசாயிகள் உதவித்தொகை, நூறு நாள் வேலைத் திட்டம் மற்றும் என்னவெல்லாம் மோதி ஜி செய்வார் ? மாநில அரசுகள் என்னதான் செய்கின்றன ? இப்போது வெங்காயம் தக்காளி வியாபாரமும் மோதி தான் செய்ய வேண்டுமா ? திராவிட மாடல் அரசு ஸ்டிக்கர் ஒட்டவும் நாற்பத்தி ஐந்து சதவீதம் லஞ்சம் வாங்க மட்டுமேவா ?


Govinda raju
அக் 05, 2024 06:54

வருசம் பூரா நட்டம் ஒரு நாள் உயர்ந்த குய்யோ) முறையோ இதில போயி எங்க


raja
அக் 05, 2024 06:46

இதுதாண்டா திராவிட மாடல் ஒருத்தன் குறை சொல்ல முடியாத ஆட்சி . முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பெருமிதம்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை