உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கூட்டு பலாத்காரங்கள் அதிகரிப்பு: தடுக்க முடியாமல் போலீஸ் திணறல்

கூட்டு பலாத்காரங்கள் அதிகரிப்பு: தடுக்க முடியாமல் போலீஸ் திணறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும், பெண்களுக்கு எதிரான கூட்டு பாலியல் பலாத்கார சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.* திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை, அதே மாவட்டத்தில் உள்ள சிறுமருதுார் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் காதலிப்பது போல நடித்து, தன் நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்* தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில், 23 வயது பெண்ணை, கஞ்சா போதையில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்* தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் பகுதியில், இரவு நேரத்தில் பஸ்சுக்கு காத்திருந்த, 45 வயது பெண்ணுக்கு, இருசக்கர வாகனத்தில் 'லிப்ட்' கொடுப்பது போல கடத்திச் செல்லப்பட்டு, கட்டையால் தாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்* சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த, 30 வயது பெண், அதே கிராமத்தைச் சேர்ந்த, 24 வயது ஆணுடன் பேசிக்கொண்டு இருந்தபோது, காட்டுப்பகுதிக்கு துாக்கிச் செல்லப்பட்டு, ஏழு பேரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்* ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியில், திருமணமான, 27 வயது பெண், வீடு ஒன்றில் அடைத்து வைத்து, ஐந்து பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், அதை வீடியோ எடுத்தும் மிரட்டப்பட்டுள்ளார்.கடந்த 20 நாட்களில், பெண்கள் அடுத்தடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர்.குற்றச்செயலில் ஈடுபட்டோர் கைதாகி இருந்தாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது, போலீசாரின் அலட்சியத்தையும், குற்றங்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதையும் அம்பலப்படுத்தி உள்ளது.இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்த புகார் மீது, தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாலியல் குற்றங்கள் குறித்து குடும்ப கவுரவம் கருதி, பலர் புகார் அளிப்பதும் இல்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
செப் 20, 2024 17:01

கூட்டுபலாத்கார லீடர் சிலம்பரசன் போன்றவர்களைப் போட்டுத்தள்ளினா அடுத்தவன் தப்பு செய்ய யோசிப்பான். இங்கு அவனுக்கு ஜெயிலில் சொகுசு வாழ்க்கை ஏற்பாடு செஞ்சு குடுத்து சீக்கிரம் ஜாமீன்ல உட்டுருவாங்க. நாடு நாசமாப் போக இதுமாதிரி உருப்படாத சட்டங்கள்தான் முதல் காரணம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை