உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தேசத்திற்கு எதிராக செயல்படுவோர் மீது நடவடிக்கை: மத்திய அமைச்சர் முருகன் எச்சரிக்கை

தேசத்திற்கு எதிராக செயல்படுவோர் மீது நடவடிக்கை: மத்திய அமைச்சர் முருகன் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சமூக வலைதளங்களில், தேசத்திற்கு எதிராக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் எச்சரித்தார். தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் சார்பில், 'ஊடக சுதந்திர மாநாடு - 2025' என்ற தலைப்பில், சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே., சாலையில் உள்ள, நாரத கான சபாவில் கருத்தரங்கு நடந்தது. இதில், மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று, இதழியல் டிப்ளமோ முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசியதாவது:ஊடக சுதந்திரம் என்பது, அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ளது. அதை நாம் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதற்கு ஒரு லட்சுமண ரேகை உள்ளது. நம் தேச பாதுகாப்பு, ராணுவ ரகசியம், நட்பு நாடுகள் குறித்து தவறாக பேசக்கூடாது என, கட்டுப்பாடுகள் உள்ளன. இவை குறித்து தவறாக எழுதுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 'ஆப்பரேஷன் சிந்துார்' நடந்த போது, சமூக வலைதளங்களில், தவறான கருத்துகளை பரப்பி வந்த, 8,-000க்கும் மேற்பட்டோரின், 'எக்ஸ்' வலைதள கணக்குகளை தடை செய்துள்ளோம். பலருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆப்பரேஷன் சிந்துார் என்பது தேசம் சார்ந்த, ஒரு பெரிய நடவடிக்கை. ராணுவம் சார்ந்த டெக்னாலஜி குறித்து பேச நாம் யார்? ராணுவ தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்து, ராணுவ வீரர்களால் மட்டுமே பேச முடியும். தேசம் நமக்கு முதன்மையானது. அதற்கு எதிராக செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்கள் வந்தபின், அனைவரும் ஊடகவியலாளர், அனைவரும், 'கன்டன்ட் கிரியேட்டர்' ஆகிவிட்டோம். ஆனால், ஒரு தகவலை பகிர்வதற்கு முன், அதன் உண்மைத் தன்மை குறித்து, பலரும் ஆராய்வதில்லை. அவற்றை அறிய வேண்டியது அவசியம்.பத்திரிகைகளுக்கு பிரஸ் கவுன்சில் உள்ளிட்ட கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளன. ஆனால், சமூக வலைதளங்களுக்கு இதுபோன்ற அமைப்பும், கட்டுப்பாடும் கிடையாது. ஊடகங்கள் டி.ஆர்.பி.,க்காக செயல்படாமல், பத்திரிகை தர்மத்திற்காக செயல்பட வேண்டியது அவசியம். ஊடகத்திற்கு சுதந்திரம், பொறுப்பு என இரண்டும் அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

'தினமலர்' இணை இயக்குநர் லட்சுமிபதி பேச்சு

கருத்தரங்கில், 'தினமலர்' நாளிதழ் இணை இயக்குநர் லட்சுமிபதி பேசியதாவது: அரசியல் சாசனம் வழங்கும் கருத்து சுதந்திரம், அடிப்படை உரிமைகளில் ஒன்று. தனிமனித சுதந்திரத்தின் ஒரு பகுதியாகவே பத்திரிகையாளர்களுக்கும் உரிமைகள் கிடைக்கின்றன. ஆனால், இந்த உரிமையையும், அரசியல் சாசனத்தின் முதல் திருத்தம் கட்டுப்படுத்துகிறது. இது, கருத்து சொல்வோரை மட்டுமின்றி, வெளியிடும் பத்திரிகை நிறுவனத்தையும் பாதிக்கிறது. பத்திரிகையாளர் மீது வழக்கு போட்டு ஒடுக்குவது, நிறுவனங்களுக்கு அரசு விளம்பரம் தராமல் வஞ்சனை செய்வது என, பல்வேறு ஒடுக்குமுறைகள் நடக்கின்றன. ஆட்சி மாறுகிறது, ஆளும் கட்சிகளும் மாறுகின்றன. ஆனால், இந்த நடைமுறை மட்டும் மாறுவதில்லை. தமிழகத்தை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருக்கும் வரை, பத்திரிகை சுதந்திரத்திற்காக குரல் கொடுப்பர். அவர்களே ஆளுங் கட்சியாகி விட்டால், நிலைமை மாறி விடுகிறது. வாய்ப்பு கிடைக்காத வரை எவரும் தப்பு செய்வதில்லை. ஆனால், தப்பு செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை, எவரும் நழுவ விடுவதில்லை. அதிகாரம் கிடைக்கும்போது வாய்ப்பாகவே அது பார்க்கப்படுகிறது.பத்திரிகை சுதந்திரம் எளிதில் கிடைக்காது. அதை போராடியே பெற வேண்டும். அவ்வாறு பெற்ற பின், அதை தக்கவைக்கவும் போராடிக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில், மூத்த பத்திரிகையாளர் கோலாகல - ஸ்ரீநிவாஸ், தி ஹிந்து முன்னாள் நிர்வாக ஆசிரியர் காலச்சக்கர நரசிம்மன், எழுத்தாளர்கள் பிரபாகரன், மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை, தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கத்தின் பொதுச்செயலர் ஜெயகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

venugopal s
ஜூன் 30, 2025 17:54

இவர்களது அகராதியில் தேசத்துக்கு எதிரானவர்கள் என்றால் பாஜகவை எதிர்ப்பவர்கள் என்று அர்த்தம்!


SP
ஜூன் 30, 2025 12:06

மத்திய மந்திரியாக இருந்து கொண்டு இப்படி அறிக்கை விடுவதில் அர்த்தமே இல்லை செயலில் காட்டுங்கள்


எலர்கிங்
ஜூன் 30, 2025 11:05

முருகா


ஆரூர் ரங்
ஜூன் 30, 2025 10:41

அமைச்சகம் போலி பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குப் போட்டாலும் நீதிமன்ற ATM இல் உடனடியாக ஜாமீன் கிடைத்துவிடுகிறது. பல நேரங்களில் ராணுவம் அல்லது அரசு மீதான அவதூறை கூட ஊடக சுதந்திரம் எனக் கூறி தள்ளுபடி செய்கிறது. சமீபத்தில் திமுக வின் முக்கிய பரிதி ஊடகம் பாசன நீருக்கு மத்திய அரசு வரி விதிக்கப் போகிறது என வதந்தி பரப்பியது. அவர்கள் நீதிக்கு அப்பாற்பட்ட கூட்டம் என்பதால் முருகன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்?


அப்பாவி
ஜூன் 30, 2025 09:07

அடடே... இன்னிக்கிதான் தான் ஒரு ஓசி எம்.பி. மத்திய அமைச்சர்னு ஞாபகம் வந்திருக்கு.


நரேந்திர பாரதி
ஜூன் 30, 2025 06:39

மிஸ்ட்டர் மிக்ஸ்சர் முருகன், இந்த திருட்டு திராவிடிய கூட்டங்களுக்கு சாதாரண எச்சரிக்கை பத்தாது...பாத்து எதாவது உறுப்பிடியா செய்யுங்க


mohana sundaram
ஜூன் 30, 2025 06:31

you are good for nothing fellow.


pmsamy
ஜூன் 30, 2025 06:24

ஒருத்தன் அவன் மேலே குற்றம் சொல்வது பெரிய விஷயம் சூப்பர் முருகா


Palanisamy Sekar
ஜூன் 30, 2025 04:49

அட நம்ம முன்னாள் வக்கீலுத்தானே இவரு. நாம் கூட ரொம்ப எதிர் பார்த்தோம் இவர் நல்லா செயல்படுவார், கட்சியை வளர்க்க உதவுவார்ன்னு. மனுஷன் பதவியை வெச்சிட்டு என்னதான் செய்யுறார்ன்னே தெரியலைங்க அப்படி ஒரு பதவிக்கு என்ன மரியாதை கிடைக்கும்? தமிழ்நாட்டுக்காரர் மொழி பிரச்சினையும் இருக்காது...தேசத்துக்கு எதிரான சிலபல சிறுகட்சிகள் தொடர்ந்து எழுதியும் செய்தியாக வாசித்தும் சமூக வலைத்தளங்களில் சகட்டுமேனிக்கு பிரதமரை கேவலமாக விமர்சித்தும் வருகின்றன. ஆளும் திமுக உறுதுணையில் நடக்கும் இதுபோன்ற நடவடிக்கையை கண்டித்தாலும் அவர்கள் திருந்துவதே இல்லை. பலரும் முருகா காப்பாற்று இந்த தேசத்தை என்று கதறியும் கண்டுக்காமல் இருந்த இவரு இப்போ பேசுவதோடு சரி... அப்புறம் அடுத்த மேடை கிடைக்குக்கும்போது இதே பேச்சை ரிப்பீட் செய்வார். சொந்த கட்சியினரே சோர்ந்துபோகும் அளவுக்கு இவரது பதவிக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதுதான் வருத்தத்திற்கு உரிய செய்தியாக இவருக்கு தெரிவிக்க ஆசைப்படுகின்றேன்


Kasimani Baskaran
ஜூன் 30, 2025 03:42

டிஜிட்டல் க்ரியேட்டர் என்று போட்டுக்கொண்டு பல கேடிகள் போடும் பதிவுகள் பெரும்பாலும் தேசவிரோத கருத்துகளையே சுற்றிச் சுற்றி வருகிறது. கூடுதலாக பலர் மோடி மற்றும் அவரது மந்திரிசபையில் உள்ளோரை கேவலப்படுத்துவது வாடிக்கை. அடையாளம் உறுதி செய்யப்படாத எந்த ஒரு கணக்கும் நீக்கப்பட வேண்டும் என்று ஒரு அரசாணை வெளியிட்டால் போதுமானது. கள்ளக்கணக்குகள் இயங்க முடியாது. ஆனால் அப்படி செய்யமாட்டேன் என்கிறது அரசு.


சமீபத்திய செய்தி