உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருச்சி கிழக்கு தொகுதியில் விசிக நிர்வாகி போட்டி? திருமா சொல்வது இதுதான்

திருச்சி கிழக்கு தொகுதியில் விசிக நிர்வாகி போட்டி? திருமா சொல்வது இதுதான்

திருச்சி: “ஒரே மாதத்தில், த.வெ.க., அரசு குறித்து, எந்த மதிப்பீட்டையும் சொல்ல இயலாது,” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். திருச்சியில் அவர் அளித்த பேட்டி: தமிழக அரசின் வெள்ளை அறிக்கையில், 13 லட்சம் கோடி கடன் இருப்பதாக கூறியிருப்பதற்கு, ஏற்கனவே, ஆட்சியில் இருந்த தி.மு.க., தான் பதில் சொல்ல வேண்டும். புதிதாக பதவியேற்ற த.வெ.க., அரசுக்கு, கற்றுக் கொள்ளும் காலம், என்று தான் சொல்ல முடியும். எனவே, ஒரு மாத கால ஆட்சியை பற்றி மதிப்பீடு சொல்ல இயலாது. அ.தி.மு.க.,வில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு என்ன நெருக்கடி என்பது அவர்களுக்கு தான் தெரியும். திராவிட இயக்கம் என்ற முறையில், அ.தி.மு.க., வலுவாகவும், சிதறாமலும் இருப்பது தான் தமிழக அரசியலுக்கு நல்லது. வி.சி.க., முதன்மை செயலர் ஷா நவாஸ், புதிய கட்சி தொடங்கி, திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பது தவறான தகவல். வெளிநாடு சென்று திரும்பி இருக்கும் அவர், கட்சி தலைமையோடு தொடர்பில் தான் இருக்கிறார். விரைவில் என்னை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. அவருடன் கலந்து பேசி முடிவு எடுக்கவில்லை என்பதை தவிர, அவருக்கு வேறு எந்த வருத்தமும் இல்லை. திட்டமிட்டு, வி.சி.க.,வை குறி வைத்து அவதுாறுகளை பரப்புகின்றனர். எளிய மக்களுக்கான இந்த இயக்கத்தை உடைத்து, என்ன சாதிக்கப் போகின்றனர் என்று விளங்கவில்லை. எங்கள் கட்சிக்குள் குழப்பமும் இல்லை; எந்த பிரச்னையும் இல்லை. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Santhakumar Srinivasalu
ஜூன் 18, 2026 21:31

2 எம் எல் ஏக்கு 1 மந்திரி பதவியே அதிகம்!


theruvasagan
ஜூன் 18, 2026 17:06

எளிய மக்களுக்கான இயக்கமா. பொய் சொல்லலாம். ஆனால் ஏக்கர் கணக்குல சொல்லக்கூடாது. நடத்துவது தரகு கமிஷன் யாவாரம். இதுக்கு கொள்கை ஒரு கேடா.


krish
ஜூன் 18, 2026 14:16

நம்பிக்கை இல்லா மனிதர் அவர் மீதும் அவரைச் சார்ந்தவர்கள் மீதும் நம்பிக்கை இல்லா மனிதர்


PVSR
ஜூன் 18, 2026 08:16

போக்குவரத்து துறை அல்லது உயர் கல்வித் துறையை நீங்கள் கேட்டு விஜய்க்கு நெருக்கடி கொடுப்பதாக வந்த செய்தியால் மக்கள் உங்களுக்கு எதிரான மனப்பான்மையில் உள்ளனர் எனவே நீங்கள் திருச்சி கிழக்கில் போட்டியிட்டால் அல்லது உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் போட்டியிட்டால் நிச்சயம் ஜெயிப்பது சந்தேகம்தான்.


சைவ குருமா
ஜூன் 18, 2026 06:01

காட்டுமன்னார் கோவிலில் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்ய போன பொது திடீரென பின்வாங்கியதற்கு என்ன அழுத்தம் அப்டின்னு திமிறி எழுந்து விளக்க முடியுமா?


வீழ்ச்சி dumilar, VCK புரம், சிதம்பரம்
ஜூன் 18, 2026 05:58

ஆனா இதே வாய் விஜய் மற்றும் சீமான் அவர்கள் ஆர் எஸ் எஸ் சின் பிள்ளைகள் என அடித்து விட்டு பதவி சுகம் புஷ்பா sofa என்றவுடன் தானும் ஆர் எஸ் எஸ் சில் ஞான ஸ்தானம் எடுத்து விட்டாயிற்று. சாப்பிடுவது சோறு அல்லது...


A viswanathan
ஜூன் 18, 2026 10:49

சாதி‌ மதத்தை ஒழிப்போம் என்று சொல்லி தன்னுடைய சுய லாபத்திற்காக அதை வளர்த்து கொண்டு இருக்கிறார்கள் அனைத்து சாதிய கட்சிகளும் அரசியல் கட்சிகளும்


சமீபத்திய செய்தி