உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வெற்றி இலக்கு 200; வேட்பாளர் களத்தில் 109: தி.மு.க.,வில் மேலும் 37 மா.செ.,க்கள் நியமிக்க முடிவு

வெற்றி இலக்கு 200; வேட்பாளர் களத்தில் 109: தி.மு.க.,வில் மேலும் 37 மா.செ.,க்கள் நியமிக்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வரும் 2026 சட்டசபை தேர்தலில், '200 தொகுதிகளில் வெற்றி' என்ற இலக்கை முன்வைத்து, தி.மு.க., பணிகளை துவக்கி உள்ளது. அதற்காக தற்போதுள்ள, 72 மாவட்டச் செயலர்களுடன், கூடுதலாக 37 பேரை நியமிக்க, கட்சி தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம், சென்னை அறிவாலயத்தில், சமீபத்தில் நடந்தது. அதில், கட்சி மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை, சீரமைப்பு பணிகள் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

பட்டியல் தயாரிப்பு

மாவட்டச் செயலர்களின் அதிகாரத்தை பரவலாக்கும் வகையில், இரண்டு சட்டசபை தொகுதிக்கு, ஒரு மாவட்டச் செயலரை தேர்வு செய்யும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில், தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் அமைக்கும், 'பென்' நிறுவனம், துணை முதல்வர் உதயநிதி, உளவுத்துறை ஆகியவற்றின் சார்பில், தலா ஒரு குழு என, மூன்று குழுக்கள் தனித்தனியே, மாவட்டச் செயலர்கள் பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. பணி முடிந்ததும், மூன்றையும் ஒருங்கிணைத்து தகுதியானவர்களை, ஸ்டாலின் மற்றும் உதயநிதி, தேர்வு செய்ய உள்ளனர்.புதிய மாவட்டச் செயலர்களாக, இளைஞர்கள் அதிகம் நியமிக்கப்பட உள்ளனர். தற்போது தி.மு.க.,வில், 72 மாவட்டச் செயலர்கள் உள்ளனர். கூடுதலாக, 37 மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

புது நியமனம்

இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:கட்சி அமைப்பு ரீதியாக, இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என பிரிக்கப்பட உள்ளதால், புதிதாக 37 மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். திருநெல்வேலி, தென்காசி, தேனி, தர்மபுரி, அரியலுார், பெரம்பலுார், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, நீலகிரி மாவட்டங்களில், ஏற்கனவே இரண்டு தொகுதிகளுக்கு, ஒரு மாவட்டச் செயலர் உள்ளனர்.எனவே, இந்த மாவட்டங்கள் பிரிக்கப்படாது. இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலர் என்ற அடிப்படையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட, 27 மாவட்டங்கள் பிரிக்கப்பட உள்ளன. தற்போதுள்ள மாவட்டச் செயலர்களில், 80 வயதுக்கு மேல் இருவர்; 71 - 80 வயது வரை, 11 பேர்; 61 - 70 வயது வரை, 26 பேர்; 51 -- 60 வயது வரை 22 பேர்; 41 - 50 வயது வரை 10 பேர்; 31 - 40 வயது வரை ஒருவர் என, இடம் பெற்றுள்ளனர்.இவர்களில் வயது முதிர்ந்த மாவட்டச் செயலர்கள் மாற்றப்பட்டு, அவர்களுக்கு பதிலாக இளைஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர். புதிய திட்டத்தின்படி, 109 மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்படும்போது, அவர்கள் அனைவரும் வேட்பாளராக இருப்பர்.மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், தி.மு.க., 200 இடங்களில் வெற்றி பெற வியூகம் அமைத்துள்ளது.

செயல்திட்டம்

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கியது போக, மீதமுள்ள தொகுதிகளில் தி.மு.க., போட்டியிட்டால், மாவட்டச் செயலர்களே வேட்பாளர்களாக களமிறங்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.ஒரு லோக்சபா தொகுதியில், ஆறு சட்டசபை தொகுதிகள் என்றால், அதில் இரண்டு தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்க, செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மற்ற நான்கு தொகுதிகளில், இரண்டு மாவட்ட செயலர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். இதன் வழியாக, வெற்றியை சுலபமாக பெற முடியும் என, கட்சி தலைமை நம்புகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Bhaskaran
நவ 30, 2024 16:51

எதிர்கட்சி ஒற்றுமை கிடையாது கூட்டணி‌கட்சிகளுக்கு ஸ்வீட் பாக்ஸ் மட்டும் போதும் திமுக 234 கூட ஜெயிக்கும்.மகனே தனியா நின்னால் தெரியும் சேதி


வைகுண்டேஸ்வரன்
நவ 24, 2024 18:13

எவ்வளவு நல்லா படிக்கிற பையனா இருந்தாலும், பரீட்சைக்கு திட்டமிட்டுப் படித்தால்தான் வெற்றி. Combine ஸ்டடி யும் எக்ஸ்ட்ரா டியுஷனும் கூட அவசியம். "தனியா நில்லு பாக்கலாம்", "தனியா நில்லு பாக்கலாம்", "தனியா நில்லு பாக்கலாம்", என்கிற பிரிவினை வாத ஒப்பாரி போரடிக்கிறது.


ghee
நவ 24, 2024 20:19

தனியா நின்னா ஊத்திக்கும் . அப்புறம் வைகுண்டம் அவருக்கு திண்டாட்டம்....


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 24, 2024 13:40

பாராளுமன்றத் தேர்தலுக்கு நாப்பதுக்கு நாப்பது என்று இலக்கு நிர்ணயித்தார்கள். ஆனால் சட்டமன்ற தேர்தலுக்கு இருநூற்று முப்பத்து நான்குக்கு இரு நூற்று முப்பத்து நான்கு என்று இலக்கு நிர்ணயம் செய்யமுடியவில்லை அது ஏன்?


பெரிய ராசு
நவ 24, 2024 12:50

இந்த கேடுகெட்ட அரசு மறுபடியும் அமைந்தால் தமிழ்நாட்டில் ஒரு குன்று மலை இயற்கை எதுவும் இராது , ஒவ்வுறு நாளும் ராசஷ லாரி என் வீட்டை கடக்கும் போது என் மனம் அழும் , தமிழக இயற்கை அன்னையின் அங்கங்கள் வெட்டி கொண்டு செல்வதாகவே மனம் வேதனையூரும் ..என் தமிழக மக்களே நாளை உங்கள் சந்ததி நன்றக இருக்கவேண்டும் எனில் இந்த கொலைகார பாவிகள் இருக்கவே கூடாது ..சிந்தியுங்க


வைகுண்டேஸ்வரன்
நவ 24, 2024 18:10

அப்படியா? உங்க வீடு எதில் கட்டினீர்கள்?? சிமண்ட், ஜல்லி, மணல், கம்பி இப்படி எதுவும் பயன்படுத்தவில்லை? வீட்டில் கிணறு இருக்கா? போர்வெல் கிணறா?உங்க வீடு இருக்கும் தெரு எப்படி? செம்மண், ஜல்லி, தார் போடப்பட்டது தானே? இதுக்கெல்லாம் எது மூலப் பொருள்? குன்றுகள் தான். குவாரிகள் தான். நீங்க மட்டும் இயற்கை யின் அங்கங்களை வெட்டி சொந்த வீடு கட்டிக்குவீங்க. மத்தவன்லாம் மண் குடிசை ல வாழணுமா? ராட்சத லாரியில் என்ன போகுது? பாறைகளா? எங்களுக்கெல்லாம் வீடு கட்ட வேணாமா? அதுக்கு ஜல்லி, சிமெண்ட், குவாரி சேண்ட் வேணாமா? எங்க தெருவுக்கு தார் போட வேணாமா? நீங்கள் ஒரு சுயநலம் பிடித்தவர்.


கிஜன்
நவ 24, 2024 11:13

2026லும் ....அவா இல்லாத சட்டமன்றம் தான் அமையப்போகிறது .... திராவிட மாடல் அவ்வளவு வலுவானது ...


சுலைமான்
நவ 24, 2024 19:09

அவா ஆட்சிக்கு வந்தால் கருஞ்சட்டை? தவளைகள் காணாமல் போய் விடும். நாட்டில் லஞ்சம் குறையும். பிரிவினைவாத கோஷங்கள் இருக்காது. ஒரு சமயத்தை இன்னொரு சமயத்தை சேர்ந்தவன் தாக்கி பேச மாட்டான்.....


Balasubramanian
நவ 24, 2024 05:39

வாழ்த்துக்கள் உத்தவ் தாக்கரே மற்றும் அவர் மகன் ஆதித்யா அவர்கள் கட்சி அடைந்த பெருமையை இவர்கள் உதய சூரியன் கட்சி அடைய வேண்டி மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்


சமீபத்திய செய்தி