உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / போலீசாருக்கு எதிராக பரவும் வீடியோக்கள்: தேடிப்பிடித்து அப்டேட் செய்வது அதிகரிப்பு

போலீசாருக்கு எதிராக பரவும் வீடியோக்கள்: தேடிப்பிடித்து அப்டேட் செய்வது அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தமிழகத்தில் போலீசாருக்கு எதிராக சமூக வலைதளத்தில் வீடியோக்கள் பரவி வருகின்றன. பழைய வீடியோக்களை தேடிப் பிடித்து பலரும், 'அப்டேட்' செய்வதால் அதற்கு விளக்கம் சொல்லியே அதிகாரிகள் சோர்ந்து போகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டார்.இதையடுத்து போலீசார் தொடர்பான வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஜனவரி, 14ல் ஆட்டோ டிரைவரை போலீசார் தாக்கிய வீடியோ நேற்று முன்தினம் வெளியானது.இதுகுறித்து விளக்கமளித்த தேனி எஸ்.பி., சிவபிரசாத், 'ஆட்டோ டிரைவருக்கு காயமில்லை. ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.'போலீசார் பலப்பிரயோகம் செய்தது தெரியவந்தது. ஏ.டி.எஸ்.பி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் உட்பட ஐந்து பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்' என, விளக்கம் அளித்தார்.இந்த வீடியோ சர்ச்சை ஓய்ந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்தவர்களுக்கு, கூடுதல் நிவாரணம் கேட்டு மறியலில் ஈடுபட்டவர்களிடம், 'இதுக்கு மேல ஒழுங்கா இருக்கணும். கோஷம் போட்டா வேற மாதிரி ஆகிடும்' என்று எஸ்.பி., கண்ணன் மிரட்டல் விடுத்த வீடியோ வேகமாக பரவியது.இந்நிலையில், சமூகவலைதளத்தில் போலீசாருக்கு எதிராக வீடியோக்கள் அதிகம், 'அப்டேட்' செய்யப்பட்டு வருகின்றன. அவை பழையதா, புதியதா என ஆய்வு செய்யாமல், பலரும் அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.கரூரில் புது மணப்பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி, இன்ஸ்பெக்டர் திட்டி விரட்டும் வீடியோ; காஞ்சிபுரத்தில் ஏட்டு ஒருவர், அ.தி.மு.க., நிர்வாகியை தாக்க முற்படுவது; திருவள்ளூரில் கர்ப்பிணியை ஏட்டு அடிக்க பாய்ந்தது என, வீடியோக்கள் தொடர்ந்து வேகமாக பரவி வருகின்றன.ஆரம்பத்தில் சில வீடியோக்களுக்கு உடனடியாக மறுப்பும், விளக்கமும் அளித்த போலீஸ் உயர் அதிகாரிகள், 'இப்படி விளக்கம் சொல்லியே சோர்ந்து போய்விடுவோம்' எனக்கருதி தற்போது மவுனம் காத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Manaimaran
ஜூலை 04, 2025 18:15

வரவேற்கதக்க செயல்


RAVINDRAN.G
ஜூலை 04, 2025 17:11

காவல்துறை பற்றி பெரும்பாலும் நல்ல அபிப்ராயம் யாருக்கும் இருப்பதில்லை. பணம் ஒருவரிடம் இழந்தாலும் ஏமாற்றப்பட்டாலும் அவர்களின் தலைவிதி என்று மனம் நொந்து அமைதி ஆகி விடுகிறார்கள். அப்படியே புகார் கொடுத்தாலும் பல வருடம் இழுத்தடித்து ஒரு முடிவே இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். உண்மையான புகாருக்கு நீதி மற்றும் நிதி கிடைப்பது மிகப்பெரிய விஷயம். காவல்துறையால் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்கிறேன். ஆளாளுக்கு ஒரு நீதி என்பதே போலீஸ் இலாகாவில் எழுதப்படாத விதி. ஒன்னும் செய்யமுடியாது.


Ramesh Sargam
ஜூலை 04, 2025 12:38

நல்ல செய்தி. இது தினமும் தொடரவேண்டும், திமுக அரசு ஒழியும்வரை.


Samy Chinnathambi
ஜூலை 04, 2025 06:28

காவல் நிலையங்களுக்கு சென்றவர்கள் அனைவருக்கும் தெரியும் , அவர்கள் லஞ்சம் வாங்காமல் ஒரு துரும்பும் அசைக்க மாட்டார்கள்... எனவே தான் அந்த வெறுப்பில் செய்கிறார்கள்.


Padmasridharan
ஜூலை 04, 2025 05:55

பழசோ புதுசோ மக்களை அதட்டுவதும், அடிப்பதும் குற்றங்கள்தானே. இவங்களுக்கு வந்தா சோர்வு.. விசாரணை செய்யும்போது மற்றவர்களுக்கு வராதா என்ன சாமி. காவல் வண்டியில கடற்கரை போன்ற பொது இடங்களிலிருந்து இளைஞர்களைா ATM சென்டெரஸ்க்கும் பணத்துக்காக அறைக்கும் காமத்தொல்லைகள் அழைத்து செல்லும் காட்சிகள் CCTV யை பார்த்தாலே தெரிய வரும் இவங்க அட்டூழியங்கள். காக்கிச்சட்டையையும், வண்டியையும் தவறாக பயன்படுத்தும் இவர்களுக்கே தெரியும் என்ன செயகிறார்களென்று.


Kasimani Baskaran
ஜூலை 04, 2025 03:37

தீம்க்காவின் எடுபிடிகளாக இருப்பது வெட்கக்கேடு.


சமீபத்திய செய்தி