உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இரு அமைச்சர்களால் விஜய்க்கு சிக்கல்?

இரு அமைச்சர்களால் விஜய்க்கு சிக்கல்?

புதுடில்லி: தமிழக முதல்வர் விஜய்க்கு, இரு அமைச்சர்களால் சிக்கல் வரும் என, டில்லியில் பேசப்படுகிறது. இந்த இரு அமைச்சர்களும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இப்போதே ஆரம்பித்து விட்டது; இன்னொருவரோ மத்திய அரசையும், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமைச்சர் அமித் ஷாவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த இருவரையும் மத்திய உளவுத் துறை கண்காணிப்பதாக சொல்லப்படுகிறது.ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அந்த அமைச்சரை பற்றி டில்லி அரசியல்வாதிகளுக்கு நன்றாக தெரியும். சமீபத்தில், தமிழக முதல்வர் விஜயை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர், 'அந்த அமைச்சரிடம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்; அவர் ஊழல் பேர்வழி' என, எச்சரித்தாராம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=712e6ucl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்னொரு தமிழக அமைச்சர் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே உள்ள சுமுகமான உறவை சீர்குலைக்கும் வகையில் பேசி வருகிறார். அத்துடன், 'இவர் பேசுவது பிரிவினையை ஆதரிப்பதாக உள்ளது. இது, நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு நல்லதல்ல' என, உளவுத்துறை அறிக்கை அனுப்பியுள்ளதாம்.'தமிழக அரசுக்கு நிதி விவகாரத்தில் உதவ மத்திய அரசு தயாராக உள்ளது' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் ஏற்கனவே உறுதி அளித்துள்ள நிலையில், இந்த தமிழக அமைச்சர் ஏன் இப்படி பேசுகிறார்' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் வருத்தப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rathna
ஆக 18, 2026 11:43

விஜய் நல்லது செய்ய நினைத்தாலும், இந்த ஊழல் பெருச்சாளிகள் சும்மா இருக்க மாட்டார்கள். அதிலே சில தேச பிரிவினை மற்றும் சாதி கட்சிகள் வேற..


Ramesh Sargam
ஆக 16, 2026 20:37

வேறு கட்சியிலிருந்து த வெ காவுக்கு தாவிய அனைவரும் நம்பத்தக்கவர்கள் அல்ல. விஜய் அதிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும் அவர்களிடத்தில்.


PATTALI
ஆக 16, 2026 18:33

புதியவர்களை குறைகூறி ஒரு பிரயோஜனமும் இல்லை, பெருந்தலைவர் காமராஜர் விட்டுசென்ற இடத்திலிருந்து 60வருடங்கள் பின்னோக்கி கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றனர் இந்த திரவிடக்கட்சிகள். இப்போதுல்ல நிர்வாக கோளாறுகள், கடன், ஊழல், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, மதுக்கலாச்சாரம், போதைகலாச்சாரம், சட்டம் ஒழுங்கு இவற்றையெல்லாம் சரிசெய்து பெருந்தலைவர் காமராஜர் விட்டுசென்ற பழைய இடத்திற்கு கொண்டுசெல்வதற்கே இன்னும் பல ஆண்டுகளுக்கும் மேல் பிடிக்கும், அதுவும் இதற்குமேல் மீண்டும் திராவிடக்கட்சிகள் ஆட்சிக்கு வராமலிருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதனையும் நினைவில்கொள்ளவேண்டும். இதுதான் இப்போதிருக்கும் நிதர்சனமான உண்மைநிலை.


ஆரூர் ரங்
ஆக 16, 2026 11:21

லாட்டரி, கல்வித் தந்தை இருவரும் விரைவில் உள்ளே. இரண்டு விஜயபாஸ்கர்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு ஊழலை ஒழிக்கப் போகிறேன் என்பது சூப்பர் டூப்பர்.


Raj
ஆக 16, 2026 10:55

அப்படி பார்த்தால் முதல் தகுதி இல்லாத ஆள் தலைமை தற்குறிதான்


c.mohanraj raj
ஆக 16, 2026 10:15

இருவருக்கு மட்டுமல்ல 40 பேருக்கு தகுதி இருக்கிறது மத்திய அரசு சொல்லும் இவர்களுக்கு ஏன் நிதி கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை


Rajasekar Jayaraman
ஆக 16, 2026 07:42

வாழ்க்கை சிக்கல் தலைமையில் சிக்கல் தான் அதிகமா இருக்கும் முன் உதாரணம் மிக அருமை.


Govi
ஆக 16, 2026 03:51

இருவர் மட்டுமல்ல எவருக்கும் தகுதி இல்ல எல்லாம்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை