உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மா.செ.,க்களுக்கு அரசியல் பயிற்சி வகுப்பு நடத்த விஜய் திட்டம்

மா.செ.,க்களுக்கு அரசியல் பயிற்சி வகுப்பு நடத்த விஜய் திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விஜய் பேசும்போது, த.வெ.க., மாவட்டச் செயலர்கள், சினிமா பார்க்கும் மனநிலையில் ஆர்ப்பரிப்பதும், விசிலடித்து ஆட்டம் போடுவதும், சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=al3takn2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட, கட்சியை விஜய் தயார்படுத்தி வருகிறார். அத்துடன் தேர்தல் செலவுக்காக, ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். தன் ரசிகர் மன்றத்தில் தீவிரமாக பணியாற்றியவர்கள், தன் நம்பிக்கையானவர்களின் உறவினர்களுக்கு, மாவட்டச் செயலர் பதவிகளை விஜய் வழங்கியுள்ளார். இதுவரை விஜயை திரைப்படங்களிலும், திரைப்பட பாடல் வெளியீட்டு நிகழ்வுகளிலும் மட்டுமே பார்த்து ரசித்த அவரது கட்சியின் மாவட்டச் செயலர்கள், தற்போது அருகே பார்த்து வருகின்றனர்; அதனால், உற்சாகம் அடைந்து விடுகின்றனர். கட்சி நிகழ்ச்சிகளில் விஜய் பேசும்போது, மாவட்டச் செயலர்கள் அவரது இருக்கையின் பின்புறம் அல்லது கீழே முதல் இரண்டு வரிசைகளில் அமர வைக்கப்படுகின்றனர். விஜய் பேசும்போது, எழுந்து நின்று விசில் அடிப்பதுடன், தோளில் போட்டுள்ள துண்டை தலைக்கு மேல் துாக்கி சுழற்றி ஆரவாரம் செய்கின்றனர்.இவர்களை பார்த்து, பின்புறம் அமர்ந்திருக்கும் மற்ற நிர்வாகிகளும் இதே நடவடிக்கையை தொடர்கின்றனர். விஜய் நடிக்கும் படங்கள் வெளியாகும்போது, தியேட்டரில் செய்யும் வேலைகளை, கட்சி நிகழ்ச்சிகளில் மாவட்டச் செயலர்கள் செய்வது, சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது. தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப அணியினர், இந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். கட்சியின் மாவட்டச் செயலர்களின் நடவடிக்கைகளை பார்த்து, புதிதாக கட்சியில் சேர்ந்துள்ள ஆதவ் அர்ஜுனா, நிர்மல் உள்ளிட்டோர் அதிர்ச்சியாகி உள்ளனர். மாவட்டச் செயலர்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்தும்படி, பொதுச்செயலர் ஆனந்திடம் அவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.ஆனால், எவ்வளவு சொன்னாலும், மாவட்டச் செயலர்கள் சினிமா பார்க்கும் மனநிலையில் இருந்து இன்னும் மாறவில்லை. எனவே, கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு ஒரு வாரம் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Balasubramanian
ஏப் 01, 2025 18:39

எல்லோரும் ஒரு பிகில் போடுங்க! உய்ய்ய்ய் !


அப்பாவி
ஏப் 01, 2025 15:21

முதலில் இந்த ஜோசப்புக்கு எடுக்கணும்


ராமகிருஷ்ணன்
ஏப் 01, 2025 14:42

சும்மாவா சொன்னார்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் என்று. அவர்களிடம் வேற என்ன உயர் பண்புகளை எதிர் பார்க்க முடியும். ஓவர் பில்டப் ஒன்னுத்துக்கும் உதவாது.


Ramesh Sargam
ஏப் 01, 2025 12:24

முதலில் அந்த பயிற்சி விஜய்க்கு மிக முக்கியம்.


கொங்கு தமிழன் பிரசாந்த்
ஏப் 01, 2025 09:52

இவரின் பேச்சு மிக சினிமாதனமாக உள்ளது. இன்னும் அரசியல் ஞானத்தை வளர்த்து கொள்ளவேண்டும். கிட்ட்தட்ட ஷங்கர் பட ஹீரோ வசனம் போல உள்ளது இவரின் மேடை பேச்சு. ஒரு தேர்தலுக்கு தாங்காது.


Padmasridharan
ஏப் 01, 2025 06:16

From Reels Fame_Money to Reality Position takes Time to Adapt , If not Disciplined would be asked to Stand up on the Bench Or made to Get Out


கண்ணன்,மேலூர்
ஏப் 01, 2025 07:33

இந்த ஜோசப் விஜய் முதலில் தனக்கு அரசியல் பாடப் பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். இவர் அரசியலில் நடித்தால் அது எடுபடாது என்பதை யாராவது சொல்லி அவருக்கு புரிய வைக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை