சென்னை: அனைத்து கட்சி கூட்டம் என்ற பெயரில் எல்லாரையும் ஏமாற்றி விடலாம் என தி.மு.க., நினைப்பதாக, த.வெ.க., தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். அவரது அறிக்கை: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cu12qxg8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை, இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மொத்தம், 6.36 கோடி வாக்காளர்கள் பெயரையும் வெறும் 30 நாளில் எப்படி சரிபார்க்க முடியும்? பீஹாரை போல, தமிழகத்திலும் சிறுபான்மையினர் உள்ளிட்ட குறிப்பிட்ட ஓட்டுகள் குறிவைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஓட்டு அரசியல் ஏற்கனவே இருக்கும் நடைமுறையை தொடர வேண்டும். இந்த விவகாரத்தில், அரசியல் வேற்றுமைகளை புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதில் த.வெ.க., உறுதியாக உள்ளது. அதே நேரத்தில், இந்த விவகாரத்தை, ஓட்டு அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த நினைக்கும் தி.மு.க.,வின் சூழ்ச்சியையும் அறிந்தே இருக்கிறோம். அண்டை மாநிலமான கேரளா, இதற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிஉள்ளது. ஆனால், சிறப்பு திருத்தப் பணியை கடுமையாக எதிர்ப்பதாக காட்டிக் கொள்ளும் தி.மு.க., தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? தொகுதி மறுவரையறையை எதிர்க்கும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு, அரசு வாயிலாக த.வெ.க.,விற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் பங்கேற்று, நிலைப்பாட்டை தெரிவித்தோம். ஆனால், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு எதிரான, தி.மு.க.,வின் அனைத்து கட்சி கூட்டத்தின் நோக்கத்தை மக்கள் அறியாமல் இல்லை. தேர்தல் நேரத்தில் தி.மு.க.,வின் இத்தகைய முன்னெடுப்பின் நோக்கம், தி.மு. க., அரசு மீது வரிசை கட்டி வரும் ஊழல் புகார்களில் இருந்து, மக்களை திசை திருப்பும் கபட நாடகம். தான் மட்டுமே ஜனநாயக உரிமையின் ஒற்றை பாதுகாவலர் போல , தி.மு.க., கபட நாடக வேடத்தை பூண்டுள்ளது. இது அப்பட்டமான ஏமாற்று வேலை. விழிப்புணர்வு இந்த விவகாரத்தில், கூட்டணி கட்சிகளை ஏமாற்றுவதை போல, எல்லோரையும் ஏமாற்றி விடலாம் என தி.மு.க., நினைக்கிறது. ஜனநாயகம் மற்றும் மக்கள் உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டால், அது மத்திய பா.ஜ., அரசாக இருந்தாலும் சரி; வேறு யாராக இருந்தாலும் சரி; சமரசமின்றி, த.வெ.க., எப்போதும் போல தீர்க்கமாக எதிர்க்கும். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி குறித்து மக்களுக்கு விளக்க, த.வெ .க., சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் முகாம்கள் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.