உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / த.வெ.க.,வுக்கு 20 சீட் மட்டுமே தருவேன்; பழனிசாமி பேரத்தால் விஜய் டென்ஷன்

த.வெ.க.,வுக்கு 20 சீட் மட்டுமே தருவேன்; பழனிசாமி பேரத்தால் விஜய் டென்ஷன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கூட்டணிக்கு தமிழக வெற்றி கழகம் வரும் பட்சத்தில், அக்கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்படும் என அ.தி.மு.க., தரப்பில் கூறப்பட்டிருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

தி.மு.க.,வை வரும் சட்டசபை தேர்தலில் தோற்கடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில், அ.தி.மு.க., - பா.ஜ.,- த.வெ.க., மற்றும் நாம் தமிழர் கட்சிகள் உள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mtcb4zoh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைத்துக் கொண்ட நிலையில், த.வெ.க., தனித்துப் போட்டியிடப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தாலும், ஓட்டுகள் பிரிந்து தி.மு.க.,வே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிடக் கூடும் என்ற அச்சம் அக்கட்சிக்கு உள்ளது.

ரகசிய பேச்சு

இதனால், அ.தி.மு.க., கூட்டணியில் த.வெ.க.,வை இணைத்து, வலுவான கூட்டணியாக்கி தேர்தலை எதிர்கொண்டால், அக்கூட்டணிக்கு வெற்றி நிச்சயம் எனக் கருதும் த.வெ.க.,வைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் சிலர், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியுடன் ரகசிய பேச்சு நடத்தி உள்ளனர். அப்போது, பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., விலகி, வெளியே வர வேண்டும் என்ற கோரிக்கையை புறக்கணித்த பழனிசாமி, அதற்கு வாய்ப்பே கிடையாது என மறுத்து விட்டார். கொள்கை ரீதியில், பா.ஜ.,வோடு கைகோர்க்க முடியாது என, பேச்சில் முரண்டு பிடித்த த.வெ.க.,வினரிடம், பா.ஜ.,வை பண்டாரம் பரதேசி என விமர்சித்த தி.மு.க.,வின் கருணாநிதியே, கொள்கை கோட்பாடுகளையெல்லாம் விட்டுவிட்டு, பா.ஜ.,வோடு கைகோர்த்து தேர்தலை சந்தித்து வெற்றியும் பெற்றார். வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும், தி.மு.க., இடம் பெற்றது. தி.மு.க.,வே அப்படி இருக்கும்போது, த.வெ.க., கொள்கை கோட்பாடு பற்றி பேச வேண்டியதில்லை என வகுப்பெடுத்திருக்கிறார் பழனிசாமி. பின், அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற வேண்டுமானால், த.வெ.க.,வுக்கு குறைந்தபட்சம் 80 தொகுதிகளாவது வேண்டும் என, அக்கட்சி தரப்பில் வலியுறுத்தி உள்ளனர்.

வேட்பாளர்கள் யார்

அதற்கு வாய்ப்பே இல்லை என தெரிவித்த பழனிசாமி, 'இதுவரை த.வெ.க., எந்த தேர்தலையும் சந்திக்கவில்லை. தனது ஓட்டு வங்கி எவ்வளவு எனவும் நிரூபிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், நாங்கள் எடுத்து வைத்திருக்கும் பல்வேறு 'சர்வே'க்கள் கூறும் தகவல்கள் அடிப்படையில், த.வெ.க.,வுக்கு 20 சீட்களை, வேண்டுமானால் தர முடியும். அதுவும், 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் யார் என்பதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். கட்சியின் மா.செ.,க்களாக முகம் தெரியாதவர்களை நியமித்திருக்கும் த.வெ.க.,வில், போட்டியிடுவோருக்கு எவ்வளவு தொகை தேர்தலுக்கு செலவு செய்ய முடியும் என்பதையும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை பேச்சின்போது பழனிசாமி நிர்தாட்சண்யமாக சொல்லியிருக்கிறார். கூடவே, தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றால், அ.தி.மு.க., தனித்துத்தான் ஆட்சி அமைக்கும்; கூட்டணி ஆட்சி, முதல்வர், துணை முதல்வர் என்ற வலியுறுத்தல் எதுவும் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார். பழனிசாமியுடன் பேச்சு நடத்தியவர்கள், இதை நடிகர் விஜயிடம் சொன்னபோது, அவர் அதிர்ச்சி அடைந்து விட்டதாக, அக்கட்சியினர் தகவல் தெரிவிக்கின்றனர். அவசரப்பட்டு யாருடனும் அடுத்தடுத்து பேச்சு நடத்த வேண்டாம். தனித்துப் போட்டியிடும் எண்ணத்துடனேயே களத்தை தயார் செய்வோம். தேர்தலை நோக்கி கட்சியினரை முதற்கட்டமாக முடுக்கிவிடுவோம்.

சுற்றுப்பயணம்

அதற்காக, விரைவில் தமிழகம் முழுதும் நான் சுற்றுப்பயணம் செய்து, கட்சியினரையும் மக்களையும் சந்திக்கிறேன். அப்போது, காணப்படும் மக்கள் எழுச்சியைக் கண்டு, ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சிகளும் மிரளுவார்கள். நம்முடைய செல்வாக்கு கண்டு, மிரளும் சூழலில் யாருடனும் பேச்சு நடத்தினால், அவர்களும் நம் கோரிக்கை மற்றும் நிபந்தனைகளை மதிப்பர். அதுவரை, நம்மை குறைவாக மதிப்பிட்டுக் கொண்டிருக்கும் அவர்கள், கூட்டணிக்காக ஒத்துவர மாட்டார்கள் என கட்சியினரிடம் நடிகர் விஜய் கூறியுள்ளார். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

RaNaMurty
ஜூன் 30, 2025 17:34

தவெக நோடாவை முந்தாது. 2031ல் தவெகவே இருக்காது


Saravana Kumar
ஜூன் 29, 2025 19:54

விஜய் 2031–ஐ குறி வைக்க வேண்டும். எப்படியும் 2026 தேர்தலுக்குப் பின் அதிமுக காணாமல் போய்விடும். அதை பாஜக விழுங்கி விடும். அப்பொழுது தவெக இரண்டாவது மிகப்பெரிய கட்சியாக இருக்க வாய்ப்புண்டு. இப்பொழுது 10 மற்றும் 11–ம் வகுப்புகள் படித்துக் கொண்டிருக்கும் சுள்ளான்கள், அப்பொழுது ஓட்டு போட தயாராகி விடுவார்கள். அவர்கள் விஜய்க்கு தான் ஓட்டு போடுவார்கள்.


RaNaMurty
ஜூன் 30, 2025 17:33

தவெக நோடாவை முந்தாது. 2031 ல் கட்சியே இருக்காது.


naranam
ஜூன் 29, 2025 16:51

தவெக -25, பாஜபா-30, பாமக-5, தேமுதிக -5, அதிமுக-155 தினகரன்-2, பன்னீர் (அ) மற்ற சில சிறிய கட்சிகள்-10


ஈசன்
ஜூன் 29, 2025 15:54

என்ன சாமி நெசமாத்தான் சொல்றீங்களா. இப்பதான் அரசியலுக்கு வந்திருக்காரு. அதுக்குள்ள இருபதா? அப்போ பங்காளிக்கு, அதன் பாஜகவுக்கு எவ்வளவு? சொல்லுங்கண்ணே. இல்லாட்டி மண்டை வெடிச்சிடும்.


Srprd
ஜூன் 29, 2025 12:28

DMK looks undefeatable this time. They have done some good work in the past 2 years such as introduction of low floor buses throughout the State, Electric buses, Kilambakkam bus terminus, Chennai metro etc.


Krishnaswame Krishnaswame
ஜூன் 29, 2025 12:08

20 முதல் 23 தொகுதிகள் வரை வழங்கலாம். அதில் 18 முதல் 20 MLA க்களை பெறலாம். விஜயின் எதிர்கால அரசியலுக்கும் நல்லதாக அமையும். அதிமுக வோடு கூட்டணி அமைக்கா விட்டால் திமுக விற்கு களம் ஒரளவு சாதகமாகும்.அப்போது திமுக முதலில் விஜய் கட்சியை விஜய் யோடு சேர்த்து வேட்டையாடும். அரசியல் வாழ்விலும்/குடும்ப வாழ்விலும் நிம்மதி என்பதே இல்லாமல் போகும். கூட இருந்து குழி பறிப்பவர்களை கை கழுவி அதிமுக வுடன் கூட்டணி என்பதே அவருக்கும்/அவர் கட்சிக்கும்/தமிழகத்திற்கும் நல்லது


முருகன்
ஜூன் 29, 2025 10:48

அதிமுக கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்ற உடன் 20 சீட் என்று செய்தி வருகிறது


Oviya Vijay
ஜூன் 29, 2025 10:17

தமிழகத்தைப் பொறுத்தவரையில் வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகள் எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்தாலும் ஆளுங்கட்சியே மீண்டும் ஜெயிக்கப் போகிறது என்பதே நிதர்சனம்... அதில் சிறு மாற்றமும் இருக்கப் போவதில்லை... ஆகையால் என்னதான் முயற்சித்தாலும் இந்த தேர்தலில் தவெக ஆட்சி அமைக்கும் அளவிற்கெல்லாம் வெற்றி பெற முடியாது... ஆனால் அவர்கள் இந்த தேர்தல் களத்தில் கடும் உழைப்பைக் காட்டினால் கண்டிப்பாக பெரும்பான்மையான இடங்களில் அதிமுக பாஜக கூட்டணியைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடம் பெறக் கூடும்... தங்கள் பலத்தை மக்கள் முன்னே காட்டக் கிடைக்கும் இந்த அருமையான வாய்ப்பை தவெக தவற விட்டுவிடக் கூடாது... ஏனெனில் அது அடுத்து வரும் தேர்தல்களை எதிர்கொள்ள மிகப்பெரிய பலத்தை கட்சித் தலைமைக்கும் ரசிகர்களாகிய தொண்டர்களுக்கும் கொடுக்கும்... அதற்கு முதலில் செய்ய வேண்டியது தனித்துப் போட்டியிட வேண்டும்... அதிமுக ஒருவேளை பாஜகவுடன் அமைத்திருக்கும் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறினாலும் அதனோடு மட்டும் தவெக கூட்டணி வைத்து விடவே கூடாது... ஏனெனில் இந்த தேர்தல் முடிந்த கையோடு சிதறிப் போகக்கூடிய கட்சி அதிமுக... அதற்கென்று எதிர்காலம் என்ற ஒன்று இனியில்லை... இருக்கப் போவதுமில்லை... ஆகையால் அதனை நம்பி உங்கள் புதிய கட்சியை சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று விடாதீர்கள்... மேலும் சிறு சிறு துக்கடா ரப்பர் ஸ்டாம்ப் கட்சிகளையும் கூட்டணி என்ற பெயரில் இணைத்துக் கொண்டு போட்டியிடுவதைக் காட்டிலும் தனித்துப் போட்டியிடும் போது அதிக வாக்குகளை பெற முடியும். ஏனெனில் பெரும்பாலான வாக்காளர்களின் மன ஓட்டமும் அது தான்... 2026 தேர்தலை தவிர்த்துப் பார்த்தோமானால் தவெகவிற்கு மிகச்சிறந்த எதிர்காலம் உண்டு... ஏனென்றால் உதய சூரியனும் ஒருநாள் அஸ்தமிக்கும்... மறந்துவிடக்கூடாது... ஆனால் அதற்கான காலம் கனியும் வரை பொறுத்திருக்க வேண்டும்...


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 29, 2025 15:59

ஆவ்வ்......அளந்து விட ஒரு அளவு இருக்கு ஆர்டிஸ்ட்....!!!


Ragupathi
ஜூன் 29, 2025 16:34

தவறான கனிப்பு. கிராமம் வரை பலமான அமைப்பு இல்லாத போது அனுபவம் வாய்ந்த கட்சியுடன் கூட்டணி வைத்து களம் கான்பதே சிறந்தது. 15 தொகுதியிலாவது ஜெயித்து சட்டமன்றத்துக்குள் நுழைந்தால் எதிர்காலத்துக்கும் கட்சி நலனுக்கும் நன்மை பயக்கும் அப்படியே ஒரு ராஜ்யசபா மேப் சீட்டும் வாங்கிவிட்டால் கட்சி வளரும்.


sd tailor
ஜூன் 29, 2025 10:08

முதலில் தனித்து நின்று உங்கள் பலத்தை காட்டுங்கள் பிறகு கூட்டணியை பற்றி யோசிங்கள் மக்களிடம் உங்களுடைய செல்வாக்கு எவ்வளவு உள்ளது என்பதை தெரியவரும் வரும் சட்டசபை தேர்தலில் தவெக தனித்து நிற்க வேண்டும்


Oviya Vijay
ஜூன் 29, 2025 08:56

ஒரே தேர்தலில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விட வேண்டுமென எண்ணாமல் தவெக வரும் தேர்தல் மூலமாக நல்லதொரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்...


புதிய வீடியோ