உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டென்ஷன் குறைய, வெற்றி கைகூட பரிகாரம் சிவப்பு சந்தன மாலை அணிந்தார் விஜய்

டென்ஷன் குறைய, வெற்றி கைகூட பரிகாரம் சிவப்பு சந்தன மாலை அணிந்தார் விஜய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டென்ஷனை குறைக்கவும்; காரியத்தில் வெற்றி பெறவும், சிவப்பு சந்தன மாலை அணிந்து வலம் வருகிறார், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தலைவர் விஜய்.நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். அதோடு, தன் கடைசி திரைப்படமான ஜனநாயகன் பட இறுதிக்கட்ட பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i6hli16y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திரைப்பட வேலைகளை முடித்து, படம் ரிலீசானதும், முழு நேரமாக அரசியல் பணியை தொடர, அவர் திட்டமிட்டுள்ளார். தற்போது, நேரம் கிடைக்கும்போது மட்டுமே, கட்சி பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இழுபறி

அவரது கட்சிக்கு, 120 மாவட்டச்செயலர்களை நியமிக்கும் பணி, சில தடைகளால் நிறைவடையவில்லை. மாநிலம் முழுதும் உள்ள, 68,000 'பூத்' கமிட்டிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அனைத்து பூத்களிலும் நிர்வாகிகளை நியமித்து விட்டதாக, மாவட்டச்செயலர்கள் கூறி வருகின்றனர். ஆனால், பல பூத்களுக்கு இன்னும் நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை.பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு, மண்டல அளவில் கூட்டம் நடத்த திட்டமிப்பட்டுள்ளது. கோவை மண்டல கூட்டம் முடிந்த நிலையில், மற்ற மண்டலங்களில் கூட்டம் நடத்துவது இழுபறியாக உள்ளது. இதுகுறித்து, கட்சியின் மாநில நிர்வாகிகளிடம் கேட்கும்போதெல்லாம், அவர்கள் மாற்றி மாற்றி தகவல் சொல்கின்றனர். இதனால், தான் நினைத்தது நடக்காமல் போய் விடுமோ என்ற பதற்றம் அவ்வப்போது விஜய்க்கு ஏற்பட்டு விடுகிறது. இதையடுத்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் நடிகர் விஜய் கோபப்படுவது வாடிக்கையாகி இருப்பதாக கட்சியினர் பலரும் தெரிவிக்கின்றனர். வரும் சட்டசபை தேர்தலுக்கு, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க, தமிழகத்தில் இருக்கும் பல கட்சிகள் முன்வரும் என எதிர்பார்த்துக் காத்திருந்தார் நடிகர் விஜய். கூடவே, தமிழகத்தில் என் தலைமையில் அமையும் ஆட்சி, கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும் என்றும், கூட்டணியில் இணையும் அனைத்துக் கட்சியினருக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிக்கப்படும் என்றும், தன்னுடைய கட்சியின் முதல் மாநில மாநாட்டில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்குப் பின், தமிழகத்தில் இருக்கும் பல கட்சிகளும் தன்னைத் தேடி, கூட்டணிக்காக வரும் என்றும் நம்பிக் கொண்டிருந்தார். ஆனால், இதுவரை ஒரு கட்சிகூட, அவருடன் கூட்டணி சேர முன்வரவில்லை. தேர்தலுக்கு எட்டு மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில் கூட்டணியும் அமையாமல் இருப்பது, அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி பல நெருக்கடி களுக்கு ஆளாகி இருக்கும் விஜய், எப்படியாவது டென்ஷனை குறைத்து, கூலாக இருக்க வேண்டும் என விரும்பினார்.

பஞ்சபூத ஆதரவு

இதற்காக, புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஜோதிடர் ஒருவர் ஆலோசனையில், சிவப்பு சந்தன மாலையை அணிந்து, விஜய் வலம்வரத் துவங்கியுள்ளார். மேலும், பூஜை செய்த சந்தனம், குங்குமம் கலந்த திலகத்தையும், விஜய் நெற்றியில் வைத்து வருகிறார். சிவப்பு சந்தன மாலையை, வெள்ளியுடன் கோர்த்து, அந்த ஜோதிடர் தயாரித்துக் கொடுத்துள்ளார். 'இதைத் தொடர்ந்து அணிவதால், பஞ்சபூதங்களின் ஆதரவு கிடைக்கும்; 'டென்ஷன்' குறையும்; மன உறுதி, விவேகம் அதிகரிக்கும். தொடங்கிய எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகள் தொல்லை, கண் திருஷ்டி குறையும், எதிர்பார்க்கும் வளமான வாழ்க்கை தேடி வரும்' என, அந்த ஜோதிடர் கூறியுள்ளார். -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Anand
ஜூன் 18, 2025 17:51

அடுத்தது மொட்டை அடிச்சி , தலையில் துண்டு


surya krishna
ஜூன் 18, 2025 14:58

arambha kala arasiyalai paarthaal theriyum


சேகர்
ஜூன் 18, 2025 13:19

அடுத்து பால்குடம், தீ சட்டி, காவடி எல்லாம் எதிர்பார்க்கலாம்


ராமகிருஷ்ணன்
ஜூன் 18, 2025 12:02

புதிய வேஷத்தை பார்த்து ஆதரவு தெரிவிக்க வந்த பாதிரியார்கள் ஓடிவிட போகிறார்கள். மேலும் என்ன தான் வேஷம் போட்டு பிலிம் காட்டினாலும் தேர்தலுக்கு பிறகு மையம் தற்போது உள்ள நிலமை தான் உனக்கும். விசிலடிச்சான் குஞ்சுகளின் ஓட்டு ஜெயிக்க உதவாது.


theruvasagan
ஜூன் 18, 2025 08:43

அடடே. பகுத்தறிவுப் பரஞ்சோதியை தன்னோட குருவாக நினைக்கும் குட்டி சிஷ்யன் சிவப்பழமாக மாறினது எப்படி. இதுக்கும் மேல ஒரு படி போய் தலையில குல்லா. நெத்தியில பட்டை. கழுத்துல கிராஸ். இந்த காம்பினேஷன் காஸ்டியூமோட பிரசாரம் செஞ்சா நாலா பக்த்திலிருந்தும் ஓட்டுகளை அமோகமாக அள்ளிடாலாம் என்ற யோசனையை எந்த ஜோசியனும் சொல்லலையோ.


Ramaraj P
ஜூன் 18, 2025 08:25

சோசப்பு பேர் ஹிந்து பெயரா! இல்லை??


புரொடஸ்டர்
ஜூன் 18, 2025 08:18

கிருத்துவன் ஜோசப் விஜய் ஹிந்து மத பரிகாரம் செய்வதை கிருத்துவ பாதிரியார்கள் ஆதரிக்கின்றனரா?!


Karthik
ஜூன் 18, 2025 10:38

அதுதாங்க அரசியல்வியாதியின் யுக்தி/ தந்திரம். ஜெயிப்பதற்காக தன் ஜாதி மதம் தோற்றம் நடை உடை பாவனை அனைத்தையும் மாற்றிக்கொண்டு அந்தந்த இடத்திற்கு ஏற்றார் போல் நான் உங்களில் ஒருவன் என்றே சொல்வார். ஜெயித்த பின்பு நீ யாருடா என்பர். அப்படிப்பட்ட நம்ப வைக்கும் நடிப்பை கற்றுக் கொடுக்கத்தானே சினிமாத்துறை இருக்கு. நடிகனுக்கு தெரியாத நடிப்பா..?? ஏமாளி என்னவோ மக்களே.. அதற்கு உதாரணம் உதயா நதி.


Subburamu Krishnasamy
ஜூன் 18, 2025 08:11

Very good acting in public life. But bad karma will always yield bad results only.


பாரத புதல்வன்
ஜூன் 18, 2025 07:59

டென்சன குறைக்க அப்பா நடத்தும் சாராயகடைக்கு போ....20 மணி நேரமும் கிடைக்கிறது. பாட்டிலுக்கு10 ரூ கூடுதலா குடுத்தா போதும்.


bg
ஜூன் 18, 2025 07:43

pondicherry josier


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை