உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க., முயற்சியை முறியடிக்க சீமானுக்கு விஜய் தரப்பு துாது

அ.தி.மு.க., முயற்சியை முறியடிக்க சீமானுக்கு விஜய் தரப்பு துாது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாம் தமிழர் கட்சியை கூட்டணிக்கு இழுக்கும் அ.தி.மு.க., முயற்சியை முறியடிக்க, த.வெ.க., தலைவர் விஜய் தரப்பில், சீமானுக்கு துாது அனுப்பிய தகவல் வெளியாகி உள்ளது.வரும் சட்டசபை தேர்தலுக்கு த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., தரப்பில் காய் நகர்த்தப்பட்டது. தனித்து போட்டி அல்லது தன் தலைமையில் தான் கூட்டணி என, நடிகர் விஜய் கூறியதால், கூட்டணி அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iiflxd0r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், வரும் 28ம் தேதி சென்னை திருவான்மியூரில் நடக்கும் த.வெ.க., பொதுக்குழுக் கூட்டத்தில், கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்க, விஜய் திட்டமிட்டுள்ளார். மேலும், 'பூத்' கமிட்டி நிர்வாகிகள் மாநாடு, தஞ்சாவூரில் இருந்து நடைபயணம் துவக்கம் உள்ளிட்ட முடிவுகளும், பொதுக்குழுவில் எடுக்கப்பட உள்ளது.உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் வீட்டுக்கு ஒரு ஓட்டு உறுதி என்ற கணக்கில், 234 தொகுதிகளில் 25 சதவீதம் ஓட்டு கிடைக்கும் என, விஜய் தரப்பில் உறுதியாக நம்புகின்றனர். 'பெரிய வெற்றிக்கு கூடுதலாக, 15 சதவீதம் ஓட்டுகள் பெறுவது அவசியம்; அதற்கு கூட்டணி அவசியம்' என, விஜய்க்கு கட்சியின் ஆலோசகர் சொல்லி இருக்கிறார்.இதையடுத்து, நா.த.க., உள்ளிட்ட சில சிறிய கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைக்கலாம் என கணக்கு போட்டு, சீமானை சந்திக்க, விஜய் தரப்பில் துாது போய் உள்ளனர். தனித்துப் போட்டி என்பதில் உறுதியாக உள்ள சீமான், விஜய் துாதரிடம் பிடிகொடுக்காமல் பேசி அனுப்பி உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Sathyan
மார் 19, 2025 03:13

விஜய் திமுக வின் கையாள். எப்போதும் நடிகர்களின் அரசியல் பிரவேசம் பணம் சம்பாதிப்பது மற்றும் அரசியலவியாதியின் power க்காகத்தான் . இதற்கு ஆசைப்பட்டுதான் நடிகர்கள் அரசியலில் குதிக்கிறார்கள், மக்களுக்கு பணி செய்வதற்காக அல்ல.


மனி
மார் 18, 2025 19:04

பத்தில இடமில்ல இல ஓட்டயம்


venugopal s
மார் 18, 2025 17:08

இங்கு அண்ணாமலை தொடங்கி விஜய் வரை எல்லோருக்குமே பல்லக்கில் பயணிக்க மட்டுமே விருப்பம் என்றால் அப்புறம் பல்லக்கைத் தூக்குவது யார்? இவர்கள் ஒற்றுமையாக கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது!


ASR
மார் 18, 2025 11:26

அதிமுக காணாமல் போகும்னு கனவு மட்டும் காணலாம். கனவு கண்டவர்கள் காணாமல் போன வரலாறு தான் உள்ளது.


முருகன்
மார் 18, 2025 10:43

அதிமுக திமுக இல்லாத கூட்டணி அமைத்தால் தேர்தலில் அதிமுக காணாமல் போகும் எதிர் காலத்தில் விஜய் முதல்வர் ஆக வாய்ப்பு உள்ளது


லிங்கம்
மார் 18, 2025 09:57

விஜய் 2026 இல் நீ ஆளும் கட்சியாகவோ அல்லது ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கவில்லை என்றாலோ திமுக உன்னை மூட்டை பூச்சியாக நசுக்கி விடும்.


பல்லவி
மார் 18, 2025 09:52

ஒரு தலிவர் இடுப்பு கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டுக்கொள்கிறார் பாவம் பாவம்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மார் 18, 2025 12:37

ஒரு தலீவருக்கு இடுப்பை கிள்றத தவிர வேறு எதுவும் தெரியாது.. எதுக்கு அவருக்கு வேண்டாத வேலை.. பாவம் ப்ரோ இட்ஸ் வெரி ராங் ப்ரோ....!!!


Sampath Kumar
மார் 18, 2025 08:45

விளக்கமாற்றுக்கு பட்டு குஞ்சமா ??/


Oviya Vijay
மார் 18, 2025 08:24

பெயர் கெட்டுப் போன சீமானோட கூட்டணியா... வாய்ப்பேயில்லை... அது சரி... இது விஜய்க்கு தெரியுமுங்களா...


Venugopal,S
மார் 18, 2025 08:22

பீ- டீம் ஓட்டு பிரிப்பது. ஆளும் கூட்டணிக்கு ஆதரவு. இதுல இவ்ளோ அலப்பறை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை