உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பா.ம.க.,வுடன் விஜய் திடீர் நெருக்கம்!

பா.ம.க.,வுடன் விஜய் திடீர் நெருக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பா.ம.க.,வுடன் முதல்வர் விஜய் திடீர் நெருக்கம் காட்டுவதற்கு, த.வெ.க., அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தரும் குடைச்சல்களே காரணம் என்று கூறப்படுகிறது. தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள், த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்துள்ளன. இதில், காங்கிரசும், முஸ்லிம் லீக்கும், த.வெ.க.,வுடன் மிகவும் இணக்கமாக இருந்து வருகின்றன. தலையீடு ஆனால், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், வி.சி.க.,வும் பல்வேறு பிரச்னைகளில், த.வெ.க., அரசை நேரடியாகவே விமர்சித்து வருகின்றன. அரசு நிர்வாகம், அதிகாரிகள் மாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில், வி.சி.க.,வின் தலையீடு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x9fguvao&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுபோன்ற நெருக்கடியையும், குடைச்சல்களையும் தவிர்க்கவே, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு வலை விரிக்கப்பட்டது. அதில், இதுவரை ஐந்து பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்; நான்கு பேர் த.வெ.க.,வில் சேர்ந்து விட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், 'குதிரை பேரம்' என்றும் எதிர்க்கட்சிகளை போன்றே விமர்சித்து உள்ளன. இது, முதல்வர் விஜய்க்கும், த.வெ.க.,வுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 'அமைச்சரவையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேறுவோம்' என, வி.சி.க., தலைவர் திருமாவளவன் கூறியதும், த.வெ.க.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னையில் நேற்று பேட்டியளித்த மார்க்சிஸ்ட் மாநில செயலர் சண்முகம், ''மக்கள் மீது சுமைகளை ஏற்றாமல், அரசுக்கான வருவாயை திரட்டுவது எப்படி என்பது பற்றி த.வெ.க., அரசு சிந்திக்க வேண்டும். ''அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் விரும்பியே ராஜினாமா செய்திருந்தாலும், மக்கள் தீர்ப்பை மதிக்காத அவர்களை, த.வெ.க.,வில் சேர்த்திருக்கக் கூடாது. இதுபோன்ற ஆரோக்கியமற்ற அரசியலை ஊக்குவிக்கக்கூடாது,'' என்றார். விமர்சனம் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் மகேந்திரனை த.வெ.க.,வில் சேர்த்ததால் கோபம்அடைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களும், பாலியல் வன்கொடுமை போன்ற பிரச்னைகளில் இந்த அரசை விமர்சித்து வருகின்றனர். இதனால், நான்கு எம்.எல்.ஏ.,க்களை கொண்டுள்ள பா.ம.க.,வுடன், த.வெ.க., திடீர் நெருக்கம் காட்டி வருகிறது. முதல்வரான பின், எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்த விஜய், பா.ம.க., தலைவர் அன்பு மணியை அவரது வீட்டில் சந்தித்தார். அதன்பின், ஜாதிவாரி சர்வே நடத்தக்கோரி, பா.ம.க., நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில், த.வெ.க.,வும் பங்கேற்றது. அனைத்து கட்சி கூட்ட தீர்மானத்தை அளிப்பதற்காக, முதல்வர் விஜயை, அன்புமணி நேரில் சந்தித்தார். அவரது கோரிக்கையை ஏற்று, 'தமிழக அரசின் சார்பில் சமூக நீதி சர்வே நடத்தப்படும்' என, கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவிப்பதற்காக, நேற்று முன்தினம், முதல்வர் விஜயை, பா.ம.க., - எம்.எல்.ஏ.,வும், அன்புமணி மனைவியுமான சவுமியா சந்தித்தார். அப்போது, 'காவிரி மேகதாது அணை விவகாரம் பற்றி, சட்டசபையில் சிறப்பாக பேசினீர்கள்' என சவுமியாவை, விஜய் பாராட்டினார். இது, அன்புமணிக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இது தொடர்பாக, த.வெ.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கடந்த 2016ல், அன்புமணிக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த ஜான் ஆரோக்கியசாமி தான், த.வெ.க.,வுக்கும் பணியாற்றினார். இவர் வாயிலாக ஏற்கனவே, அன்புமணிக்கும், விஜய்க்கும் நல்ல நட்பு இருந்து வருகிறது. முக்கியத்துவம் இப்போது வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசுக்கு குடைச்சல் கொடுத்து வரும் நிலையில், பா.ம.க.,வின் நான்கு எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு எப்போது வேண்டுமானாலும் கை கொடுக்கும் என முதல்வர் விஜய் நம்புகிறார். அதனால் தான், பா.ம.க.,வுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். 2014 முதல் பா.ஜ., கூட்டணியில் இருந்தாலும், மத்திய அமைச்சர் பதவி கொடுக்காததால் அதிருப்தியில் உள்ள அன்புமணி தரப்பும் த.வெ.க., நெருக்கத்தை விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தமிழ் நிலன்
ஜூன் 21, 2026 10:51

காரியம் ஆகவேண்டும் என்றால் கழுதை ஆனாலும் காலை பிடி என்ற உயர்ந்த நோக்கத்தில்...


manian
ஜூன் 21, 2026 10:03

But pmk has a big demand of making madam as deputy CM.Will it happen


Barakat Ali
ஜூன் 21, 2026 09:40

பொதுவாகச் சொல்வார்கள் .... பாகிஸ்தானுக்குப் பொருந்துவது பாமகவுக்கும் பொருந்தும் .....


Nesan
ஜூன் 21, 2026 08:12

ஆதவுக்கு தி.திருமா, அன்புமனிக்கு இனொருத்தர்... எந்நாளும் முடியும் தம்பி...


sankaranarayanan
ஜூன் 21, 2026 08:05

இரண்டு திராவிட கட்சிகளோடு கூட்டணி வைத்திருத்த எல்லா கூட்டணி கட்சிகளும் ஒவ்வொன்றாக அந்தந்த திராவிட கட்சிகளை விட்டு விலகுகின்றன இதுவே தமிழகத்திற்கு ஒரு நல்ல காலம் இதனால் இரண்டு திராவிட கட்சிகளும் இனி ஒன்றாக கூட்டு சேர்ந்தாலும் சேரலாம் அப்படியா அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தாலும் முதல்வர் விஜய்யின் அரசை அசைக்க முடியாது ஆணிவேர் நன்கு அழுத்தமாகவே உள்ளது இரண்டு திராவிட கட்சிகளும் பட்டுப்போய்விட்டன இனி என்னேரமும் அந்த மரங்கள் ஒரேடியாக பூமியில் சாயும் காலம் வந்தாகி விட்டது அவைகளை நம்பி யாரும் இனி செல்லாதீர்கள்


முருகன்
ஜூன் 21, 2026 07:52

இரு கட்சிகளையும் நடுத்தெருவில் தனித்து விட வேண்டும்


KR india
ஜூன் 21, 2026 07:02

கம்யூனிஸ்ட்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகளை ஒப்பிடும் போது, டாக்டர் அன்புமணி தலைமையிலான பா.ம.க., த.வெ.க உடன் கூட்டணி வைத்து, ஆட்சியில் பங்கேற்றால், கம்யூனிஸ்ட்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் போல், குடைச்சல் கொடுக்காமல் , நாகரிகமாக நடந்து கொள்வார்கள், அரசு நிர்வாகம், அரசு அதிகாரிகள் இடமாற்றம் போன்ற உள்விவகாரங்களில் தலையிட மாட்டார்கள் என்று கருதலாம். ஆனால், அவர் சாதியினருக்கு கூடுதல், இடஒதுக்கீடு சலுகைகளை வழங்கவேண்டுமென்றும், சாதி வாரி கணக்கெடுப்பை உடனே ஆரம்பியுங்கள், என்றும் அழுத்தம் கொடுக்க வாய்ப்புண்டு. அரசியலில், காற்றுள்ள போதே தூற்றி கொள் என்பதை தான், வெவ்வேறு கட்சிகளில் இருந்து, வெளியேற விரும்பும் கூட்டணி கட்சிகள் கடைபிடிக்கின்றன. அதில், பா.ம.க வும் விதிவிலக்கல்ல.


Govi
ஜூன் 21, 2026 04:59

எல்லாமே ..... தின்னும்.... கள் தான் :


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை