உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சாலை இல்லாததால் பெண் கொடுக்க மறுப்பு: 12 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம்

சாலை இல்லாததால் பெண் கொடுக்க மறுப்பு: 12 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம்

உத்தர கன்னடா: கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால், கடந்த 12 ஆண்டுகளாக திருமணமே நடக்கவில்லை. இங்குள்ள ஆண்கள், பிரம்மச்சாரிகளாகவே காலம் கழிக்கின்றனர்.கர்நாடக மாநிலம், உத்தர கன்னடா மாவட்டம், கார்வார் அருகே மச்சள்ளி கிராமம் உள்ளது. இங்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தத்தளிக்கின்றனர். பள்ளியோ, ஆரம்ப சுகாதார மையமோ இல்லை. முக்கியமாக சாலையே இல்லை.

பிரம்மச்சாரிகள்

கரடு முரடான மண் சாலையில் தான் கிராமத்தினர், பக்கத்து கிராமங்களுக்கும், நகரப்பகுதிக்கும் சென்று வர வேண்டும். சாலை சரியில்லை என்ற ஒரே காரணத்தால் மச்சள்ளி கிராமத்தின் ஆண்களுக்கு பெண் கொடுக்க, யாரும் முன்வரவில்லை.பெண் பார்க்க செல்லும் இடங்களில், மச்சள்ளி கிராமத்தின் பெயரை கூறினாலே பெண் கொடுக்க மறுக்கின்றனர். இதனால், கடந்த 12 ஆண்டுகளாக இங்கு திருமணங்களே நடக்கவில்லை. திருமணம் செய்யாமல், ஆண்கள் பலரும் பிரம்மச்சாரிகளாக காலம் கடத்துகின்றனர். இக்கிராமத்தில் முதியவர்கள் மட்டுமே, அதிகம் வசிக்கின்றனர். குழந்தைகளே இல்லை.கிராமத்தை விட்டு செல்ல விரும்பினாலும், முடியவில்லை. இங்கு சொந்த நிலம், வீடுகள் வைத்துள்ளனர். இவற்றை வாங்கவும் ஆள் இல்லை. இதனால் கிராமத்தை விட்டுச் செல்ல முடியாமல், இங்கேயே வசிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.கிராwமத்தினர் கூறியதாவது:எங்கள் கிராமம் கார்வாரில் இருந்து 20 கி.மீ., துாரத்தில் தான் உள்ளது. இங்கு, எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. அடர்ந்த வனம் சூழ்ந்த கிராமமாகும்.கிராமத்துக்கு செல்ல 4 கி.மீ., அடர்ந்த வனப்பகுதியை கடந்து வர வேண்டும். பாதை நெடுகிலும், பெரிய பாறைகள், மண் மேடு நிறைந்துள்ளது. சாலை பக்கத்திலேயே ஆழமான பள்ளம் உள்ளது. சிறிது கவனம் சிதறினாலும், அசம்பாவிதத்தை தவிர்க்க முடியாது.மண் சாலை மத்தியிலேயே, ஓடை பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை பெய்தால், செல்லவே முடியாது.

பயனில்லை

இந்த பாதையில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும். சாலை வசதி செய்யும்படி, பல ஆண்டுகளாக அரசிடம் மன்றாடியும் பயன் இல்லை. ஒரு மருத்துவமனை இல்லை. உடல்நிலை பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்கள், நோயாளிகளை கம்பளியில் துாளி கட்டி, அதில் சுமந்து செல்ல வேண்டும். அதேபோல் பள்ளியும் இல்லை. இதனால், பலரும் கல்வி அறிவில்லாமல் வசிக்கின்றனர். ஆண்களுக்கு யாரும் பெண் கொடுக்காததால், திருமணமே செய்யாமல் தவிக்கின்றனர். வேறு இடத்துக்கு சென்று வசிக்கவும், இவர்களுக்கு வசதியில்லை. படிப்பறிவும் இல்லாமல், கிடைத்த வேலையை செய்து வாழ்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ramesh Sargam
ஜூலை 04, 2025 22:13

சாலை ஒழுங்காக இருந்தாலும் ஒரு சில ஆண்களுக்கு பெண் கிடைப்பதில்லை. அந்த வயித்தெரிச்சல என்னன்னு சொல்றது?


Jagan (Proud Sangi )
ஜூலை 05, 2025 02:32

ஏதாவது சொல்லு நீ தான் எல்லாத்துக்கும் கருத்து போடுற ரிட்டையர் ஆனா ஆளாச்சே ?? கோடை காலத்தில் அமெரிக்கா மற்ற நாள்களில் சும்மா தானே போகிறது...


Santhakumar Srinivasalu
ஜூலை 04, 2025 20:48

அந்த மாவட்ட கலெக்டர்/தாசில்தார்/எம்ல்ஏ இவர்களுக்கு எதுக்கு சம்பளம்?


lana
ஜூலை 04, 2025 15:53

ஏம்பா பாவி சாலை மற்றும் தண்ணீர் கொடுத்த தாக கணக்கு காட்டி மாநில அரசு பணத்தை பெற்றுக் கொண்டா என்ன செய்வது. கிராம சாலைகள் மற்றும் குடிநீர் பணம் மட்டுமே மத்திய அரசு. பணி செய்வது மாநில அரசு. அப்படி தான் சென்னை மழை நீர் வடிகால் பணிகள் உம். 99% முடிந்தது ன்னு ஒரு குன்றிய அரசு சொல்லும் போது ஒன்றிய அரசு எல்லாவற்றையும் check பண்ண முடியாது. திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது


A1Suresh
ஜூலை 04, 2025 14:19

மாநில சட்டசபை, முதல்வர், அமைச்சர், எம் எல் ஏ எதற்கு ? மேலும் உள்ளாட்சி அமைப்புகள் கவுன்சிலர்கள் எதற்கு இருக்கின்றனர் ? யாருடைய கடமையை யார் மேல் சுமத்துவது ? ஒஹோ இப்படிப்பேசுவது தான் இதுதான் ஈவெரா கற்றுக் கொடுத்த பகுத்தறிவா ?


எஸ் எஸ்
ஜூலை 04, 2025 14:06

இந்நேரம் நம்ம ஊராக இருந்தால் அந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள பாறை, மண், மரங்கள் அனைத்தையும் கபளீகாரம் செய்து இருப்பார்கள். தானாகவே பாதை உண்டாகி இருக்கும்


ஆரூர் ரங்
ஜூலை 04, 2025 13:57

காட்டை அழித்துதான் சாலை போட முடியும். அதற்கு பதிலாக வேறு இடத்தில் குடியமர்த்தலாம்.


djivagane
ஜூலை 04, 2025 11:52

இதுதான் டிஜிட்டல் இந்தியாவா ???


GMM
ஜூலை 04, 2025 08:14

அரசு ஆவணத்தில் கிராமம் என்று இருந்தால் கட்டாயம் நடை, சைக்கிள், வாகனம் செல்ல பாதை அமைந்து தர வேண்டியது உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில நிர்வாக கடமை.


premprakash
ஜூலை 04, 2025 08:00

படிப்பறிவிலில்லாத ஏழைகள்.... யாரிடமும் பேசாமல் பழகாமல் சற்று புத்தி கூரிமை இருக்காது.. திறமை உடையவர்கள் அருகில் உள்ள நகரத்துக்கு சென்று குடும்பம் அமைத்து கொண்டனர். திறமை அற்றவர்கள் அங்கேயே தங்கி விட்டனர். வாழ்க்கையில் தோற்றும் விட்டனர்.


அப்பாவி
ஜூலை 04, 2025 06:25

அடடே... எல்லா கிராமத்துக்கும் சாலை போட்டு, தண்ணீர், மின்சாரம் எல்லாம் குடுத்தாச்சுன்னு மெடல் குத்தியாச்சே.


N Sasikumar Yadhav
ஜூலை 04, 2025 13:13

நேரடியாக உனக்கு பிரதமர்தான் வந்து செய்யனுமா. அந்த கிராமத்துக்கு ஓட்டு கேட்டு ஜெயித்த களவானி உறுப்பினர்களுக்கு தெரியாதா. பிரதமர் நேரடியாக செய்ய உறுப்பினர்கள் எதற்கென சொல்லுங்க


அப்பாவி
ஜூலை 04, 2025 15:25

அப்போ மெடல்.குத்திக்க மட்டும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை