உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காலில் விழுகிறோம்; ஒன்றிணையுங்கள் பழனிசாமிக்கு பன்னீர் தரப்பு வேண்டுகோள்

காலில் விழுகிறோம்; ஒன்றிணையுங்கள் பழனிசாமிக்கு பன்னீர் தரப்பு வேண்டுகோள்

காஞ்சிபுரம் : முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நடத்தும் அ.தி.மு.க., உரிமை மீட்புக் குழுவின், மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.

அதில் கலந்து கொண்டு, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேசியதாவது:

அ.தி.மு.க., ஒன்று சேர வேண்டும் என்ற ஆதங்கம் எல்லோருக்கும் உள்ளது. ஒன்றுபட்டால் தான் எல்லோருக்கும் உண்டு வாழ்வு. அதில்லையேல், மொத்தமாக அழிவுதான். கட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., ஏற்படுத்திய சட்ட விதிகள் அனைவரும் அறிந்ததுதான். கடைக்கோடி தொண்டனுக்கும் பொதுச்செயலர் ஆகும் தகுதி உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே இணைந்து பொதுச்செயலரை தேர்வு செய்யக்கூடாது; கட்சியின் அனைத்து தொண்டர்களும் ஓட்டுப்போட்டு பொதுச்செயலரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை எம்.ஜி.ஆர்., ஏற்படுத்தினார். பத்து மாவட்டச் செயலர்கள் முன் மொழிந்தால், பொதுக்குழு வாயிலாக பொதுச்செயலரை தேர்வு செய்து கொள்ளலாம் என, பழனிசாமி தனக்கு ஏற்ப, விதியை மாற்றிக் கொண்டு விட்டார். கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர்., ஏற்படுத்திய விதியை மாற்ற யாருக்கும் அதிகாரம் கிடையாது. சட்ட விதிகளை பழனிசாமி மதித்து நடக்க வேண்டும் என்று தான் கேட்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.அ.தி.மு.க., உரிமை மீட்பு குழுவின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் ரஞ்சித் குமார் பேசுகையில், ''நாங்கள் எவ்வளவோ போராடி விட்டோம். எல்லாவற்றையும் பார்த்து விட்டோம். இனி, உங்கள் காலில் தான் விழ வேண்டும் என்றால், அதையும் செய்கிறோம். எங்களையும் சேர்த்துகொண்டு, கட்சியை ஒன்றிணைக்க வேண்டும். இதை பழனிசாமி செய்யவில்லை என்றால், வரும் 2026லும் மூன்று எழுத்து கட்சி தான் ஆட்சி அமைக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

M Ramachandran
ஜூலை 22, 2025 01:26

இவ்வளவு இறங்கி போகணுமா?


Easwar Kamal
ஜூலை 21, 2025 23:56

எடபடிக்கு ஆட்சி மைப்பதை விட கட்சிதான் முக்கியம். அடி பட்டால்தான் புத்தி வரும்.


அப்பாவி
ஜூலை 21, 2025 19:51

அதிமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால், பன்னீர், சின்னம்மா, தினகரன் கூட்டு வேண்டும். பா.ஜ வை நம்பி இறங்கினா, இவிங்க மூணு பேரும் சங்கு ஊதிருவாங்க.


Thiyagarajan S
ஜூலை 21, 2025 18:50

நல்ல சிந்தனை தான் ஆனால் பன்னீர்செல்வத்துக்கு என்று ஓட்டுகள் இல்லை ஆனால் அவர் அதிகாரத்தை சமமாக பங்கு போட ஆசைப்படுகிறார் தகுதி இல்லாதவருக்கு பழனிசாமி எப்படி சம பங்கு தருவார்....


somasundaram ramaswamy
ஜூலை 21, 2025 18:34

காலில் விழுந்து வணங்கி ஏற்றுக் கொண்டவுடன் பழனிச்சாமி யின் பதவியை தானே கேட்கிறீர்கள். கட்சியில் சேர உங்கள் நிபந்தனைகளை எழுத்துப் பூர்வமாக இபிஎஸ் க்கு சமர்ப்பியுங்கள் . கோர்ட்டில் சின்னத்தை முடக்க கோரும் மனுக்களையும் தேர்தல் கமிஷனுக்கு கொடுக்கும் குடைச்சல் களை வாபஸ் செய்ய முடியுமா. EPS தான் முதலமைச்சர் என்று பகிரங்கமாக கூற முடியுமானால் ..... உங்கள் குறைந்த பட்ச கோரிக்கை நிறைவேற்றலாம்?


SUBRAMANIAN P
ஜூலை 21, 2025 14:26

வெட்கமா மானம் இல்ல.. போயி வேற பொழைப்பை பாருங்க. சோம்பேறிக்கூட்டம்


அப்பாவி
ஜூலை 21, 2025 13:33

ஏற்கனவே காலில் விழுந்த அனுபவம் நிறைய இருக்கு


V RAMASWAMY
ஜூலை 21, 2025 09:29

பேசாமல் பா ஜ கவிடம் சேர்ந்துவிடுங்கள், பிரச்சினையே இல்லை.


Haja Kuthubdeen
ஜூலை 21, 2025 09:03

இது ஒரு பிழைப்பா...கட்சிக்கு துரோகம் செய்த செய்கின்ற ஓபிஎஸ்..புகழேந்தி..மனோஜ்பாண்டியன்..வைத்தி ப்ரோ போன்ற ஒருசிலருக்கே கட்சியில் இடம் இல்லை...மற்ற புரட்சிதலைவர் தொண்டர்கள் அனைவரும் கட்சியில் இனைய எடப்பாடி தடை விதிக்க வில்லையே...


Haja Kuthubdeen
ஜூலை 21, 2025 08:59

வைத்தி ப்ரோ...அஇஅதிமுகவில் கோடியை தாண்டி உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.அத்தனை பேருமே புரட்சிதலைவர் விசுவாசிகள்.புரட்சிதலைவரோ அம்மாவோ போட்டியிட்டால் எந்த ஒருத்தனும் எதிர்த்து வேட்பு மனு செய்யவே மாட்டான்.எடப்பாடி என்பதால் வேணும்னே உங்களை மாதிரி ஆட்கள் பணம் கொடுத்து ஆயிரம்பேரை வேட்பு மனு போட வைப்பீர்கள்.அதற்காகத்தான் இந்த விதியை உண்டாக்கியதே!!!நானும் அஇஅதிமுக உறுப்பினர்தான்.நான் பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனு செஞ்சா தமாசா போயிடும்.மூடிட்டு இருங்க...


சமீபத்திய செய்தி