உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கருணாநிதி கேட்டு கொண்டதால் ஸ்டாலினுடன் இருக்கிறோம்: வைகோ

கருணாநிதி கேட்டு கொண்டதால் ஸ்டாலினுடன் இருக்கிறோம்: வைகோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: திருப்பூரில் நடந்த ஆறு மாவட்டத்தை உள்ளடக்கிய கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் செப்., 15ல், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை, சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அந்த அடிப்படையில், இந்த ஆண்டு, திருச்சியில் மாநாடு நடத்தப்பட உள்ளது. கூட்டணியில் உள்ள கம்யூ., - வி.சி., உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. அவற்றை போன்று நாங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் கூட்டணி தர்மத்தை பின்பற்றுகிறோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி படுக்கையில் இருந்தபோது, அவரை சந்தித்தேன். அவர், ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருக்குமாறு என்னை கேட்டுக் கொண்டார்.அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில்தான், தி.மு.க., கூட்டணியில் இன்றுவரை இயங்கி வருகிறோம். அதனாலேயே, தமிழக அரசை எதிர்த்து சிறு ஆர்ப்பாட்டம் கூட நடத்தியதில்லை; கண்டன அறிக்கைகூட விட்டதில்லை. தேர்தலில் இத்தனை 'சீட்' கட்டாயம் தேவை என கேட்டதுமில்லை. தேர்தல் சமயத்தில் கூட்டணி பேச்சுக்கு, தி.மு.க., தலைமை எங்களை அழைக்கும்போது மட்டும், அதுகுறித்து பேசுவோம். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 52 )

Ramesh Sargam
ஜூலை 03, 2025 22:19

கருணாநிதிதான் இப்பொழுது இல்லையே. பிறகு என்ன மேலும் திமுகவுடன் உறவு. அந்த உறவை முறித்துக்கொண்டு தனியாக கட்சி நடத்தவேண்டும். அதற்கு இருக்கா துணிவு?


Ganeshan R
ஜூலை 03, 2025 09:53

ம்..... இல்லைனா ......?


Kumar GMK
ஜூலை 02, 2025 21:19

ஒத்தை MP Seat க்கு இந்த ஆளு என்ன கம்பி கட்ற கதை எல்லாம் விடுறார் பாருங்க


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 02, 2025 20:58

கேப்டனை முடிச்சு வெச்சது போல எங்க கிம்ச்சை மன்னரை முடிச்சு வெச்சுட்டுதான் வெளியே வருவீங்க ...... இல்லியா ??


Raj S
ஜூலை 02, 2025 19:21

அவங்ககிட்டயே சண்டை போட்டுட்டு வெளில போனாராம், அதுக்கப்பறம் அவர் சொல்லி வந்து சேர்ந்தாராம்... என்ன கூத்து இது??


Balaa
ஜூலை 02, 2025 19:19

கருணாநிதி இப்ப இல்லை. உண்மையா என்று விசாரிக்கவா முடியும். நீங்க கலர் கலரா ரீல் உடுங்க நைனா. ஏமி காவாலோ செப்பன்டி கோவாலு.


venugopal s
ஜூலை 02, 2025 18:34

கவலைப்பட வேண்டாம், இன்னும் கொஞ்ச வருடங்கள் தான். அப்புறம் திமுகவுக்கு மதிமுக போல் அதிமுகவும் பாஜகவின் வாழ்நாள் கொத்தடிமைகளாக விசுவாசமாக இருப்பார்கள்!


Prasath
ஜூலை 02, 2025 18:28

வீணா போனவர். அதைவிட இவர் பையனையும் எம்பியா ஜெயிக்க காசுக்கு சோரம் போகும் வீணா போன தமிழக வாக்காளர்களை சொல்லனும்


GUNA SEKARAN
ஜூலை 02, 2025 18:19

தமிழக மக்கள் நலனும் உங்கள் கட்சியின் ??? தொண்டர்களின் விருப்பமும் உங்களுக்கென்று உள்ள ??????? சுயமரியாதையும் முக்கியமில்லை. இன்னமும் கீழே தான் வீழப் போகிறீர்கள்., வைகோ அவர்களே.


Easwar Kamal
ஜூலை 02, 2025 18:14

நீங்க கேட்டாலும் கேட்காவிட்டாலும் திமுக உடன்தான் சொல்லணும். இல்லா விட்டால் டெபாசிட் தேறாது. உங்களை மாதிரியே அந்த கேப்டன் மனைவியும் உதார் விட்டுட்டு திரியுதுங்க. அதை நம்பி இவனுங்க வந்தேறி ஜாதி பயலுங்க காசை இந்த வீனா போனவங்களுக்கு கொட்டுறதுனால இவங்களும் கட்சி வச்சிக்கிட்டு dhuttu பார்க்குதுங்க.


புதிய வீடியோ