உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., கூட்டணியில் இருப்பதால் அமைதியாக இருக்க மாட்டோம்: திருமா

தி.மு.க., கூட்டணியில் இருப்பதால் அமைதியாக இருக்க மாட்டோம்: திருமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மதுரையில், நேற்று அளித்த பேட்டி: ஜி.எஸ்.டி., வரியை குறைத்து அறிவிப்பு வெளியிடப்படும் என, பிரதமர் மோடி அறிவித்ததில் மகிழ்ச்சி. இது தேர்தலுக்கானதாக இருந்தாலும் வரவேற்கலாம்; பாராட்டலாம். ஜி.எஸ்.டி., முறையை முற்றிலும் கைவிட வேண்டும். பிரதமர் ஒரு ஆர்.எஸ்.எஸ்., தயாரிப்பு. அதனால், அவர் சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ்.,ஐ பாராட்டியது ஏற்புடையதல்ல. தங்கள் உரிமைக்காக போராடிய துாய்மை பணியாளர்களை நள்ளிரவில் வலுக்கட்டாயமாக கைது செய்ய வேண்டிய தேவை இல்லை. போராட்டம் துவங்கிய நான்காவது நாளில், துாய்மைப் பணியாளர்களை சந்தித்துப் பேசினேன். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நேரு, தொடர்பு உடைய அரசு அதிகாரி களையும், இது தொடர் பாக சந்தித்து பேசினேன். ஆனால், இந்த உண்மை எதுவுமே தெரியாமல், துாய்மை பணியாளர்களை, எனக்குப் பின்னால் சென்று சந்தித்தவர்களெல்லாம், இந்த விஷயத்தில் என்னையும், எங்கள் இயக்கத்தையும் விமர்சிப்பது வேடிக்கையானது. துாய்மை பணியாளர் பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக, தி.மு.க., கூட்டணியை உடைக்க முடியுமா எனப் பார்க்கின்றனர். துாய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க., ஏன் போராட்டம் நடத்தவில்லை? கைது செய்த பின், அவர்கள் பிரச்னையை பேசியிருக்கிறார் பழனிசாமி. அ.தி.மு.க., ஆட்சியில்தான் துாய்மைப்பணி தனியார் மயப்படுத்தப்பட்டது. இப்போது போராட்டம் நடத்துபவர்கள் அ.தி.மு.க., தனியார் மயப்படுத்தியதைப் பற்றி ஏன் பேசவில்லை? அ.தி.மு.க., செய்தால் அமைதியாக இருக்க வேண்டும். தி.மு.க., செய்தால் எதிர்க்க வேண்டும் என்பது என்ன அரசியல் இது. தி.மு.க., கூட்டணியில் இருப்பதால், இந்த விஷயத்தில் திருமா அமைதியாக இருந்துவிடுவார் என பலரும் நம்புகின்றனர். ஆனால், நாங்கள் தான் அவர்களுக்காக குரல் கொடுக்கிறோம். அரசின் முரட்டுத்தனத்தை எதிர்க்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Sekar
ஆக 17, 2025 06:22

Ok mr jalra


அருண் பிரகாஷ் மதுரை
ஆக 16, 2025 23:04

போட்டி இல்லாமல், இட ஒதுக்கீடு இல்லாமல் பட்டியல் இனத்தவர் மட்டுமே பார்த்த அரசு வேலை துப்புரவு வேலை..அதில் துரோகம் செய்த திமுக அரசை கண்டிக்க முடியவில்லை..பதவிக்காக தன்னை நம்பும் மக்களுக்கு துரோகம் செய்பவர் இவர்..கட்சி நடத்துவது எதற்கு,4 எம் எல் ஏ மற்றும் 2 எம் பி, போதும் போதும் வேறு எதற்காக.. அந்த பதவியால் பட்டியல் இனத்தவர் அடைந்த முன்னேற்றம் என்ன.. ஒன்றுமில்லை.. உண்மையை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும்..


Nellai Baskar
ஆக 16, 2025 22:51

அது தான் தெரியுமே தலைவரே. அடங்க மறு , அத்துமீறு அது தானே


சண்முகம்
ஆக 16, 2025 22:06

அடிக்கடி சத்தமா சிங்கி அடிப்பாகளோ?


theruvasagan
ஆக 16, 2025 21:49

என்னப்பா நடு ரத்திரியில கத்தற சத்தம் கேக்குது. தாகம் எடுத்திருக்கும். தண்ணி குடுங்கப்பா.


Ramesh Sargam
ஆக 16, 2025 20:08

வெறும் வாய்ச்சவடால்தான். பல் பிடுங்கப்பட்ட சிங்கம்.


ஈசன்
ஆக 16, 2025 18:36

அரசின் முரட்டுத்தனத்தை எதிர்க்கிறோம் என்றால் என்ன அர்த்தம். திமுக அரசு முரட்டுத்தனமாக செயல்படுகிறது என்று பொருள. திமுக அமைச்சர்கள் முரடர்கள் என்று அர்த்தமாகும். அமைச்சர்களின் முதன்மையானவர் முதலமைச்சர். அவர் முரடர்களின் தலைவர் என்று அர்த்தமாகிறது. திருமா அவர்களே உங்களுக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். திமுக கூட்டணியில் இருந்து கொண்டு மாண்புமிகு முதலமைச்சரை எப்படி இழிவு படுத்தலாம். ஒன்று முதல்வரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள். இல்லையென்றால் எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு கூட்டணியில் இருந்து விலகுங்கள்.


சந்திரன்
ஆக 16, 2025 17:41

சிறுத்தை மிரண்டு போய் செவுத்துல முட்டிக்க போகுது


SUBBU,MADURAI
ஆக 16, 2025 18:59

நாளைக்கு ஆகத்து 17 ம் தேதி இந்த குருமாவுக்கு பிறந்தநாள். மதுரையில் கடந்த இரண்டு நாளாகவே இவரின் சிறுத்தை குட்டிகள் சைடு பார்வையில் முறைத்து பார்ப்பது, வாய்க்குள்ளே மைக் போய் விடுவது போன்று நரம்பு புடைக்க வாயை திறந்து கொண்டு உறுமுவது போன்ற இந்த குருமாவின் போஸ்டர்களை ஒட்டி மதுரை மக்களை எரிச்சலூட்டி வருகிறார்கள்.


surya krishna
ஆக 16, 2025 16:25

அய்யய்யோ, மாமாவுக்கு கோவம் வந்துருச்சு. இதுவரை மானங்கெட்டத்தனமாக கூட்டணி இருந்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Sun
ஆக 16, 2025 16:22

சிங்கம் களம் இறங்கிருச்சு?............... என்னது சிங்கமா? யாரு சொன்னது சிங் கம்னு .......... கூட்டத்தில யாரோ சொன்னான்டா....


புதிய வீடியோ