உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அனைத்தில் இருந்தும் மீண்டு வர முயற்சிப்போம்: நடிகர் விஜய்

அனைத்தில் இருந்தும் மீண்டு வர முயற்சிப்போம்: நடிகர் விஜய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கரூரில் பலியான தொண்டர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்' என த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளார். அவரது அறிக்கை: கற்பனைக்கும் எட்டாத வகையில் கரூரில் நிகழ்ந்ததை நினைத்து, இதயமும், மனதும் மிக மிக கனத்து போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும், பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. கண்களும், மனசும் கலங்கி தவிக்கிறேன். நான் சந்தித்த எல்லாருடைய முகங்களும், என் மனதில் வந்து போகின்றன. பாசமும், நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும், அதன் இடத்தில் இருந்து நழுவச் செய்கிறது. நம் உயிருக்கு இணையான உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொண்ணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்பு தான். யார் ஆறுதல் சொன்னாலும், நம் உறவுகளின் இழப்பை தாங்கவே இயலாது தான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும், தலா 20 லட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு, தலா 2 லட்சம் ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால், இது ஒரு பெரும் தொகையல்ல. இருந்தும், இந்த நேரத்தில் என்னுடைய உறவுகளான உங்களுடன், மனம் பற்றி நிற்க வேண்டியது, உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனான என் கடமை. அதேபோல், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும், மிக விரைவில் வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும், அனைத்து உதவிகளையும், நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக செய்யும். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டுவர முயற்சிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

தாமரை மலர்கிறது
செப் 29, 2025 23:18

ஆடு கசாப்பு கடைக்காரனை நோக்கி வருவதை போன்று, எலி பாம்பின் வாயுக்குள் புகுவதை போன்று, திமிங்கலம் கரையை நோக்கி வருவதை போன்று, அணில்குஞ்சுகள் அடிபட்டு மிதிபட்டு சாக விஜய்யை பார்க்க வருகின்றன.


R. SUKUMAR CHEZHIAN
செப் 29, 2025 22:33

அறிவற்ற சுயபுத்தி சுய சிந்தனை அற்ற ஒரு செம்மறி ஆட்டு கூட்டத்தை இந்த திராவிட கும்பல்கள் உருவாக்கி வைத்திருக்கிறது இந்த செம்மறி ஆட்டு கூட்டத்துக்கு அரசியலும் நல்ல கெட்டதும் தெரியாது, கூத்தாடிகளுக்கு பால் அபிஷேகம் செய்யும், 8 வரை ஆல் பாஸ் செய்யனும் ஆதலால் நீட் தேர்வை எதிக்கும், 3 மொழி படிக்காது, ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாது, தமிழ் மாதங்கள் பெயர் சொல்ல தெரியாது, டாஸ்மாக் கடைகளில் அலை மோதும் இப்போது சற்று முன்னேறி கஞ்சாவை எடுத்து கொள்கிறது, ஓட்டு போட துட்டு கொடுத்தால் எவ்வளவு கேவலமானவனுக்கும் ஓட்டு போட்டும் இன்னும் பல இது போன்ற செம்மறி ஆட்டு கூட்டம் இருக்கும் வரை எந்த தகுதியும் இல்லாத முட்டாள்களும் சினிமா காரர்களும் அரசியலுக்கு வரலாம் செம்மறி ஆட்டு மந்தை போல கூட்டம் கூடும் விட்டில் பூச்சி போல செத்து மடியும். சில்க் ஸ்மிதா உணர்ச்சி வசப்பட்டு தற்கொலை செய்து கொண்டார் இப்போது இருந்து இருந்தால் ஒரு எம்.எல்.ஏ, எம்.பி ஆகி இருப்பார்.


Kulandai kannan
செப் 29, 2025 18:19

இவர் ஏன் ஞாயிற்றுக் கிழமை கூட்டம் போடுவதில்லை??


Murali Narayanan
செப் 30, 2025 00:35

சண்டே ப்ரஎர் povaru


Modisha
செப் 30, 2025 04:18

காலை தொடங்கி அவருக்கு நிறைய வேலைகள் இருக்கு . ஞாயிறு பிஸி . அல்லேலூயா .


PATTALI
செப் 29, 2025 16:41

மக்களுக்கு ஒரு மாற்றத்தை கொடுக்கவேண்டும் என நினைத்தவருக்கு துணையாக இருக்கவில்லை என்றாலும் அவதூறு பேசாமலாவது இருக்க முயற்சிக்கலாமே. அதற்காக நடந்த துயரத்தை ஞாயப்படுத்தவதாக நினைக்கவேண்டாம்.


saravanan
செப் 29, 2025 15:52

வரும் காலம் 2026 கண்டிப்பாக பதில் சொல்லும் .


BHARATH
செப் 29, 2025 14:16

செத்தது உன் பையனோ அல்லது உன் பெண்னோ இல்லை. உன்னோட சைக்கோதனத்தால் இறந்தது உன்னை கண்மூடி நம்பின சில தற்குறிகல். அவனுங்களும் இறக்க வேண்டியதுதான். ஆனால் குழந்தை என்ன பாவம் பண்ணிருச்சு.


Suresh
செப் 29, 2025 15:36

பணம் கொடுத்துவிட்டேன் என்ற ஆணவத்தில் பேசும் பேச்சு. விலை மதிக்க முடியாத உயிர்களை பலி வாங்கிய இந்த கேடுகெட்ட கூத்தாடி கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் மறந்துவிட்டு வெளியில் வருவோம் என்பது அரக்க புத்தியின் உச்சம். அல்லு அர்ஜுனை உள்ளே தள்ளியதைப்போல் இவனையும் உள்ளே தள்ளியிருக்கவேண்டும்.


karupanasamy
செப் 29, 2025 13:48

இப்ப எதுக்கு கடவுளை கூப்பிடுற?


கடல் நண்டு
செப் 29, 2025 13:06

தமிழகத்ததின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கட்சியை கலைத்து விட்டு ஒதுங்கி விடுவது இவர் செய்த ஒரு பாவத்திற்கு விமோசனமாக எடுத்துக் கொள்ளலாம் .. மற்றபடி மீண்டும் அரசியல் அவியல் என அப்பாவி மக்களை கொல்ல வருவது , இவரின் அழிவிக்கு அஸ்திவாரம் ..


Ramesh Sargam
செப் 29, 2025 12:16

குறுகிய இடம் கூட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிந்தே கூட்டத்தை கூட்டி, அப்பாவி மக்களின் இறப்புக்கு நீயும் ஒரு காரணம் ஆகி, இப்பொழுது அனைத்தில் இருந்தும் மீண்டு வர முயற்சிப்போம் என்று சினிமா வசனம். நீங்கள் மீண்டும் வருவீர்கள். ஆனால் இறந்துபோன அந்த நாற்பது பேர் மீண்டு வர முடியுமா? மக்களின் மீது உண்மையில் அக்கறை இருந்திருந்தால் நீ அன்றைய கூட்டத்தை கரூரில் நடத்தி இருக்கக்கூடாது. முதல் தவறு உன்னுடையது. வேண்டுமென்றே குறுகிய இடத்தை ஒதுக்கியது, போதிய பாதுகாப்பு கொடுக்காதது திமுக அரசின் தவறு. மேலும் சினிமா பயித்தியம் பிடித்த மக்களின் தவறு.


Suresh
செப் 29, 2025 15:33

அந்த கட்சியினர் கேட்ட மூன்று இடத்தில் இந்த இடம் மட்டுமே அகலமாக இருந்தது என்பது உண்மை. அவர்கள் கேட்ட மற்ற இடங்கள் இதைவிட குறுகலாக இருந்ததால் இந்த இடம் காவல்துறையால் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதற்கான சான்று அவர்கள் சமர்ப்பித்த கட்சியின் விண்ணப்பம். அதில் சொன்னது 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்பது, ஆனால் வந்தது பல மடங்கு என்பது அந்த கூத்தாடி கும்பலுக்கு தெரியாது. ஆபத்து என்றவுடன் மக்களுக்கு உதவி செய்ய அவனுங்க கட்சிக்காரன் ஒரு பயல் அங்கே இல்லை. இரண்டாம் கட்டத்தில் இருப்பவனுங்க கூட ஓடிட்டானுங்க. இதுதான் இவனுங்க யோக்கிதை என்பதை பொதுமக்கள் உணரவேண்டும்...சிந்தித்து நடக்கவேண்டும்.


Gurumurthy Kalyanaraman
செப் 29, 2025 12:08

ஒனக்கு என்னப்பா நீ எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்திருவே. செத்தவங்க குடும்பத்தில் இருப்பவனுக்கு அல்லவே தெரியும் சாவின் விளைவு. கொலைகார பாவிகளுக்கு தெரிந்ததாக சரித்திரமே இல்லையே.


சமீபத்திய செய்தி