உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / குடிநீர் கிணறு அமைக்கும் திட்டத்தால் மேற்கு தொடர்ச்சி மலைக்கு ஆபத்து

குடிநீர் கிணறு அமைக்கும் திட்டத்தால் மேற்கு தொடர்ச்சி மலைக்கு ஆபத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலையில் கிணறுகள் அமைத்து, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டத்தால், கடுமையான சூழலியல் பாதிப்புகள் ஏற்படும் என, புகார் எழுந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு, மேற்கு தொடர்ச்சி மலையில் கிணறுகள் அமைத்து, குடிநீர் வழங்க அரசு திட்டமிட்டு உள்ளதாக, சட்டசபையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு அறிவித்துள்ளார்.அப்படி கிணறுகள் அமைத்தாலும், அதில், ஒன்பது மாதங்களுக்கு மட்டும் தான் தண்ணீர் கிடைக்கும் என்றும், மற்ற சமயங்களில் குடிநீர் வழங்க, வேறு வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.இதுகுறித்து, யானைகள் பாதுகாப்புக்கான, 'எலபஸ் மாக்ஸிமஸ் இண்டிகஸ்' அறக்கட்டளை நிர்வாகி தீபக் நம்பியார் கூறியதாவது:மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் சூழலியல் ரீதியாக பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. இதில் பாறைகள், மண்ணின் தன்மை தனித்துவமானதாக உள்ளதால், கிணறு அமைப்பது போன்ற பணிகள் சாத்தியமில்லை.புலிகள் காப்பகம் அமைந்துள்ளதுடன், சூழலியல் முக்கியத்துவ பகுதியாக உள்ள இதுபோன்ற இடங்களில், பெரிய அளவில் குடிநீர் திட்டத்துக்கு கிணறு தோண்ட அனுமதி கிடைக்காது. அங்குள்ள சிறிய கிராமங்களின் தண்ணீர் தேவைக்கான திட்டம் என்றால் மட்டுமே, அனுமதி கிடைக்கும். இந்த விஷயத்தில், தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பது, இன்னும் தெளிவாகவில்லை. இம்மக்களுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது மட்டும் தான் இதன் நோக்கமா அல்லது வேறு ஏதாவது நோக்கம் இதன் பின்னணியில் இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:மேற்கு தொடர்ச்சி மலை, மிக முக்கிய வனப்பகுதிகளை கொண்டதாக உள்ளது. இதனால்தான், இங்கு பெரும்பாலான இடங்களில் வீடுகளுக்கு தனிப்பட்ட முறையில், 'போர்வெல்' அமைப்பதற்கு தடை உள்ளது.மேலும், 'பொக்லைன்' போன்ற இயந்திரங்களை பயன்படுத்தவும் தடை உள்ளது. இத்தகைய சூழலில், மலைச்சரிவில் கிணறு அமைத்து தண்ணீர் எடுப்பது, நமக்கு நாமே ஆபத்தை தேடிக் கொள்வதாக அமையும். இதுபோன்ற திட்டங்களை கைவிட்டு, சமவெளி பகுதியில் ஆறு, ஓடை, ஏரி, குளம் ஆகியவற்றை முறையாக திட்டமிட்டு பயன்படுத்தினால், தேவையான குடிநீரை பெறலாம். சுற்றுச்சூழல் தொடர்பான அடிப்படை புரிதல் இல்லாத இதுபோன்ற அறிவிப்புகளை கைவிட்டு, நடைமுறைக்கு ஏற்ற திட்டங்களை, அரசு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கிணறுகளுக்கு

சாத்தியமில்லைகுஜராத் முதல் கன்னியாகுமரி வரை மேற்கு தொடர்ச்சி மலை பரவியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் தாலுகாக்களில், கரடுமுரடான மலைப் பகுதியாக அமைந்துள்ளது. இதில், கிழக்கு பகுதியில் சில இடங்கள் சமவெளியாக உள்ளன. சாத்துார், அருப்புக்கோட்டையில் மேற்கு தொடர்ச்சி மலை குன்றுகளாக அமைந்துள்ளன. வைப்பாறு, குண்டாறு வடிநில பகுதியாக விருதுநகர் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில், 90 சதவீத பகுதிகள் கடின பாறைகளாகவும், 10 சதவீத பகுதி படிவு பாறைகளாகவும் அமைந்துள்ளன. இத்தகைய மலைப் பகுதியில் கிணறுகள் அமைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை.- புவியியல் வல்லுநர்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

tilak
ஏப் 13, 2025 22:57

ஆறு,ஏரி,குளங்களை எல்லாம் அழித்துவிட்டு நீருக்காக மலையிடமும் வந்தாச்சு. அதுவும்கூட அழிந்தால் அப்புறம் என்ன நம் எல்லோர் கதி??


srinivasan varadharajan
ஏப் 13, 2025 17:58

நேரு வீட்டில் நேற்று தான் ரெய்டு நடத்தது. இந்த வேலையில் அடிக்கும் கொள்ளையில் இன்னொரு ரெய்டு ரெடி.


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
ஏப் 13, 2025 09:00

அறிவிப்பு தான். அதுக்கு மேல ஒன்றும் நடக்காது.


புதிய வீடியோ