உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திமுக எம்பிக்கள் செயல்பாடு: விவரம் சேகரிக்குது அதிமுக

திமுக எம்பிக்கள் செயல்பாடு: விவரம் சேகரிக்குது அதிமுக

புதுடில்லி: அ டுத்தாண்டு ஏப்ரலில், தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க., அரசு பல திட்டங்களை அறிவித்து, மக்களை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகிறது. பழனிசாமி, அ.தி.மு.க.,விற்காக தமிழகம் முழுதும் அதிரடியாக பிரசாரம் செய்து வருகிறார்.இதற்கிடையே, தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள் மக்களுக்கு என்ன செய்தனர் என்பது குறித்து விபரங்களை சேகரித்து வருகிறது அ.தி.மு.க.,வின் டில்லி அலுவலகம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rpfxeixv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0லோக்சபாவில், 40 தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள் பார்லிமென்டில் எப்படி செயல்பட்டனர்; எத்தனை கேள்விகள் கேட்டனர்; தொகுதி மக்களுக்கு என்ன செய்தனர்; டி.ஆர். பாலுவிற்கும், கனிமொழிக்கும் இடையே என்ன பிரச்னை; உதயநிதி ஆதரவு எம்.பி.,க்களுக்கும், மற்ற தி.மு.க., - எம்.பி.,க்களுக்கும் உள்ள பிரச்னைகள் என, பல விபரங்களை விரைவில் அ.தி.மு.க., வெளியிட உள்ளதாம்.மேலும், 2019ல் 39 எம்.பி.,க்கள் தி.மு.க., கூட்டணியில், பார்லிமென்டில் இடம் பெற்றிருந்தனர். 'இவர்கள் என்ன செய்தனர், இவர்களால் மக்களுக்கு பயன் உண்டா?' என்கிற விபரங்களையும் அ.தி.மு.க., தயாரித்து வருகிறதாம்.இவை அனைத்தும், ஒரு சிறிய கையேடு புத்தகமாக அச்சிட்டு, பிரசாரத்தின்போது அ.தி.மு.க., மக்களுக்கு வழங்க உள்ளதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Mahendran Puru
ஆக 17, 2025 20:27

அந்த ஜட்ஜ் பணமூட்டை விவகாரத்தில் பங்கு கேட்டதும் து.ஜ வை தூக்கிட்டீங்களேப்பா. நியாயமா?


mohana sundaram
ஆக 17, 2025 17:19

பழனியாண்டி ஐயா அவர்களே, முதலில் தான் ஒரு எம்ஜிஆர் ஜெயலலிதா என்ற நினைப்பை விட்டு ஒழிக்கவும். மற்ற நிர்வாகிகளுடன் அனுசரித்துப் போனால் தான் நீர் முதலமைச்சராக முடியும். இல்லாவிடில் நீயும் ஒரு திமுக கொத்தடிமை என்றே நினைக்கத் தோன்றும்


கருப்புசாமி
ஆக 17, 2025 10:11

நீங்க கூவத்தூரில் என்ன பண்ணீங்க ராசா


Oviya Vijay
ஆக 17, 2025 09:26

ஒத்த பைசாவுக்கு பிரயோஜனம் கிடையாது... ஆமா... ஆமா... உங்களுக்கும் பொழுது போகணும்ல... நீங்க என்ன பண்ணுவீங்க... பாவம்...


vivek
ஆக 17, 2025 12:20

லப்டப் லப்டப் இதயம் பத்திரம்... ஹி.. ஹி..


vivek
ஆக 17, 2025 12:57

பத்து லட்சம் கோடியாமே..நீ நம்புரியா...


S.L.Narasimman
ஆக 17, 2025 07:40

ஒன்னும் செய்யவில்லை. கத்துவதும், வெளிநடப்பு செய்து கேண்டீனில் ஓசியில் மூக்கு முட்ட தின்னும் வேலையை நல்லாவே செய்கிறார்கள். எல்லாமே தேவையில்லா தீயசக்திகள்


முக்கிய வீடியோ