உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழகத்தில் தொழில் துவங்க இருந்த ஆலை உ.பி., சென்ற காரணம் என்ன

தமிழகத்தில் தொழில் துவங்க இருந்த ஆலை உ.பி., சென்ற காரணம் என்ன

சென்னை: 'தமிழகத்தில் தொழில் துவங்க இருந்த, 'செமிகண்டக்டர்' தொழிற்சாலை, உத்தர பிரதேசத்திற்கு சென்றது வியப்பு அளிக்கிறது. தமிழக அரசு மிகப்பெரிய வாய்ப்பை நழுவ விட்டிருப்பது வருந்தத்தக்கது' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

உ.பி., மாநிலம், கவுதம புத்தா மாவட்டம் ஜேவாரில், எச்.சி.எல்., - பாக்ஸ்கான் நிறுவனங்கள், 3,706 கோடி ரூபாய் முதலீட்டில் துவக்கும், 'செமிகண்டக்டர்' ஆலைக்கான ஒப்புதலை, மத்திய அரசு கடந்த 14ம் தேதி வழங்கியுள்ளது.இது, மொபைல் போன், லேப் டாப், வாகனங்களுக்கான, 'வேபர்ஸ்' உருவாக்கும் தொழிற்சாலையாக அமைய உள்ளது.வரும் 2027ல் உற்பத்தியை துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த தொழிற்சாைலை தமிழகத்தில் துவக்கப்பட இருப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கூறப்பட்டு வந்தது.இந்நிலையில், உ.பி.,யில் துவங்குவது வியப்பு அளிக்கிறது. தமிழக அரசு மிகப்பெரிய வாய்ப்பை நழுவ விட்டிருப்பது வருந்தத்தக்கது.உற்பத்தி மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்று பெயர் பெற்ற தமிழகம், இந்த விவகாரத்தில் தவறிழைத்ததா? அல்லது உ.பி., மாநிலம், தமிழகத்தை விட அதிக சலுகைகளை வழங்கியுள்ளதா?சென்னை விமான நிலைய விரிவாக்கம் தடைபட்டு வருவதும், தி.மு.க., அரசின் கொள்கை முடக்குவாதமும், தொழில் துறை குறித்த அலட்சியமும் தான் மிக முக்கிய காரணங்கள்.இந்தியா முழுதும் பல்வேறு மாநிலங்களில் கட்டமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தமிழக அரசு நத்தை வேகத்தில் நகர்வது இனியும் நல்லதல்ல.சூரியசக்தி, காற்றாலை மின் திட்டங்களில் முதன்மையாக உள்ளதாக நாம் பெருமை கொண்டிருந்த காலம் மாறிப்போய், இன்று, குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா போன்ற மாநிலங்கள் அதிக உற்பத்தி செய்கின்றன.பல்வேறு துறைகளில் பல மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு தமிழகத்தை பின்னுக்கு தள்ளி வருகின்றன. அம்மாநிலங்கள் முன்னேறி வருவதை தமிழக அரசும், முதல்வரும் உணர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.பழம் பெருமை பேசி பயன் இல்லை என்பதை உணருமா, தமிழக அரசு?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

sasikumaren
மே 25, 2025 07:04

தொழில் ஆரம்பிப்பவரிடம் மொத்த தொகையை முன் பணமாக கேட்டு இருப்பான்கள் அதனால் பயந்து போய் அடித்து பிடித்து ஓடி போய் இருப்பார்கள் புதிய நிறுவனம் இது கூடவா மக்களுக்கு தெரியாது போன ஆட்சியில் கியா கார் கம்பெனியிடம் ஐம்பது சதவிகிதம் லஞ்சம் கேட்டார்களே அவரும் ஆந்திராவுக்கு ஓடி விட்டாரே அது போல நடந்திருக்கும்


உ.பி
மே 24, 2025 23:41

மாடல் ஆட்சி தான் காரணம்


Kulandai kannan
மே 24, 2025 17:25

Wells Fargo என்ற அமெரிக்க வங்கி தனது சென்னை அலுவலகத்தை மூடுவதாக அறிவித்த இருக்கிறது. ஊழியர்கள் பெங்களூர்‌ அல்லது ஹைதராபாத்துக்கு மாற்றப் படுகிறார்கள்.


sasikumaren
மே 25, 2025 07:31

என்ன காரணம் சகோதரா


S Srinivasan
மே 24, 2025 12:37

இங்கு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும், கமிஷன் கொடுக்க வேண்டும் மேலே இருக்கும் அரசியல்வாதிகளுக்கு கும்பிட்டு போட வேண்டும் இது எல்லோருக்கும் பிடிக்காது பிடிக்காதவன் அடுத்த மாநிலத்துக்கு தான் போவான் நமது விடிய அரசு மற்ற மாநிலங்களைப் பார்த்து சும்மா அதிருதில்லன்னு சொல்ல வேண்டியதுதான் உண்மையா பின்னாடி போய்ட்டு இருக்கோம்


c.k.sundar rao
மே 24, 2025 10:43

Ruling party didn't receive Mamool from the company to establish the industry hence rejected by first family.


பாமரன்
மே 24, 2025 09:49

இந்த நானா தன் இருப்பை காட்ட ஏதோ கொளுத்தி போடுறார்... இந்த திட்டம் எப்பவுமே தமிழ் நாட்டில் வர்றதா சொல்லலை... ஹெச்சிஎல் டில்லி என்சிஆர் சுத்தி தான் தன் தொழில்களை பெரும்பாலும் செய்கிறது... அதன் தலைவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் அவர் மனைவி அழகு தமிழில் பேசும் தமிழ் நாட்டவர்... இருந்தாலும் பல காலமாக டில்லியில் செட்டில் ஆகி இப்போதான் சென்னை அருகில் ஒரு கல்வி பிஸினஸ் ஆரம்பிச்சிருக்காங்க...


vivek
மே 24, 2025 20:56

பாட்டிலிகு மேல பத்து ரூபா குடுக்குற பாமர கருது.....


Bhakt
மே 24, 2025 22:41

உன்கிட்ட சொன்னார்களா 200உபி ?


முக்கிய வீடியோ