உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உண்மையான பா.ம.க., எது? தைலாபுரத்தில் ராமதாஸ் அறிவிப்பு

உண்மையான பா.ம.க., எது? தைலாபுரத்தில் ராமதாஸ் அறிவிப்பு

திண்டிவனம் : திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நேற்று காலை, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலர்கள் கூட்டம், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. இதில், மாவட்ட செயலர்கள் 106 பேர் கலந்து கொண்டனர். கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, பொதுச்செயலர் முரளிசங்கர், பேராசிரியர் தீரன், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ராமதாஸ் ஸ்ரீகாந்திமதி, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், புதிதாக நிர்வாக குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள மகள் ஸ்ரீகாந்திமதியை, நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்து, பா.ம.க., உறுப்பினர் சேர்க்கை படிவங்களை ராமதாஸ் வழங்கினார். அப்போது ராமதாஸ் பேசுகையில், “தற்போது கட்சியில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவி நிரந்தரமாகும். தற்போதுள்ள நிர்வாகிகளுக்குதான் சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும். ''கட்சி சார்பில், தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களுக்கு, 'ஏ மற்றும் பி' படிவம் நான் தான் வழங்குவேன். அதுதான் செல்லுபடியாகும். “கட்சிக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நாம்தான் உண்மையான பா.ம.க., என்பதை தேர்தல் கமிஷன் விரைவில் அறிவிக்கும்,” என்றார். பின், அன்புமணி மேற்கொண்டுள்ள நடைபயணம், அவரது நடவடிக்கை, அவரால் கட்சியில் ஏதாவது பிரச்னை உள்ளதா? என, மா.செ.,க்களிடம் ராமதாஸ் கேட்டறிந்தார். இதுவரை, கட்சி நிர்வாகிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் ஸ்ரீகாந்திமதி கலந்து கொண்டதில்லை. திட்டமிட்டே, மா.செ.,க்கள் கூட்டத்திலும் அவரை ராமதாஸ் கலந்து கொள்ள வைத்துள்ளார் என கட்சியினர் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Thiagaraja boopathi.s
செப் 03, 2025 23:05

வயதாகி விட்டது...


ஆரூர் ரங்
செப் 03, 2025 22:01

சின்னமே பறி போன பின்பு ஏ. பி படிவங்கள் குப்பைக்கு சமம். மாங்கொட்டை தான் மிச்சம்.


Vijay D Ratnam
செப் 03, 2025 14:30

தமிழ்நாட்டை பீடித்த நாற்றம் இடித்த தொழுநோய், தொற்றுநோய் என்றால் அது குடும்ப அரசியல், வாரிசு அரசியல், பரம்பரை அரசியல்தான். தமிழகத்தை பொறுத்தவரை இந்த சாக்கடையை கொண்டு வந்தவர் திருட்டு ரயில்தான். இப்போ ராமதாஸ், வாசன், பிரேமலதா, வைகோ என்று நாற்றம் சகிக்க முடியல. லெட்டர் பேடு கட்சிக்காரர்கள் கூட குரங்கு குட்டியை தூக்கிகிட்டு திரியிறமாதிரி மவனோடதான் வர்றாங்க.


Thiagaraja boopathi.s
செப் 03, 2025 23:05

உண்மை தான்


Kulandai kannan
செப் 03, 2025 12:51

சுசிலாவிடம் அனுமதி வாங்கி விட்டாரா??


Tiruchanur
செப் 03, 2025 11:52

யாருமே கண்டுக்கிடறதில்லை. நாட்டை எப்படி காப்பாத்துவார்? யாருக்கு விஷ்வாஸமாய் iru ppaan?


ராமகிருஷ்ணன்
செப் 03, 2025 11:15

கைகளில் கோடாரி அல்லது மரம்வெட்டி மெஷின் வைத்து கொண்டு கூட்டம் போட்டு இருந்தால் பொருத்தமாய் இருக்கும். கோடாரியை கட்சி சின்னமாக அறிவிக்க வேண்டும். மரவெட்டி மெஷின் அன்புமணி கும்பலுக்கு கொடுத்து விடுங்க


Perumal Pillai
செப் 03, 2025 11:02

இப்படித்தான் நடக்கும் .


mohana sundaram
செப் 03, 2025 09:58

இவர்களுடைய செய்தியை படிப்பதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை. வயதாகி விட்டது மூளையும் மழுங்கி விட்டது.என்ன செய்ய.


Santhakumar Srinivasalu
செப் 03, 2025 13:29

எப்படியோ கட்சியை முடக்கி விட்டார்


புதிய வீடியோ