உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கள்ளக்குறிச்சி சாராய பலிக்கு கனக்காத இதயம் கலங்காத கண்கள் இப்போது கலங்குவதேன்? பழனிசாமி

கள்ளக்குறிச்சி சாராய பலிக்கு கனக்காத இதயம் கலங்காத கண்கள் இப்போது கலங்குவதேன்? பழனிசாமி

சென்னை: 'கரூர் சம்பவத்தில் உண்மை வெளிவர, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்திற்கு வாய்த்திருக்கும் முதல்வர் எப்படிப்பட்டவர் என்பதற்கு, அவர் வெளியிட்டுள்ள, 'போட்டோ ஷூட்' வீடியோவே சாட்சி. நான் கரூர் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் தெரிவித்தேன். அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது, எவ்வித அரசியலுக்கும் இடமின்றி, மக்களின் உணர்வாக எனது கருத்துகளைத் தெரிவித்து, அதேசமயம், மக்களின் சந்தேகங்களையும் பதிவு செய்தேன். அதற்கெல்லாம் உரிய பதில் அளிக்க திராணி இல்லாமல், சமூக வலைதளங்களில் அவதுாறு பரவுகிறது என்று, முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்; என்ன அவதுாறு பரவியது? தி.மு.க.,வினர், 'தமிழ்நாடு மாணவர் சங்கம்' என்ற பெயரில், 'போஸ்டர்' ஒட்டிக் கொண்டு இருக்கின்றனரே, அந்த அவதுாறா? பிரசாரம் செய்ய, காவல் துறை ஒதுக்கிய இடத்தில் உள்ள குளறுபடிகள், தி.மு.க.,வின் வழக்கமான ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி நடந்த காட்சிகள் வெளிவந்து, அதைப்பற்றி பொதுமக்கள் பேசுவது வதந்தியா? தி.மு.க., அமைச்சர் ஒருவர் அழுவது போல் நடிக்கத் தெரியாமல் மாட்டிக் கொண்டார். முதல்வர் ஸ்டாலினின் மகனும், துணை முதல்வருமான உதயநிதி, கரூர் வந்து சம்பிரதாயத்திற்கு, 'போட்டோ ஷூட்' எடுத்த கையோடு, துபாய் சுற்றுலாவுக்கு பறந்து சென்று விட்டார். இதுதான் பொறுப்போடு நடந்து கொள்வதா? தி.மு.க., அரசின் அலட்சியத்தால், கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட சாராய மரணங்களுக்கு கனக்காத இதயம், கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா? சென்னை விமானப்படை சாகச நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் உட்கார்ந்து, அதை கண்டு களித்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி, ஐந்து பேர் உயிரிழந்தனர். அப்போது மட்டும் வீட்டிலேயே இருக்க முடிந்ததா; யாரை ஏமாற்றப் பார்க்கிறார் ஸ்டாலின்? எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை. ஆனால், உங்களின் இந்த வீடியோ தான், பலஅரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. இதில் இன்னும் கொடுமையாக, நீங்கள் அமைத்த ஒருநபர் ஆணையம் விசாரிக்கும் காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வருகின்றன. அதை பார்க்கும் மக்களுக்கே, இது ஒருதலைபட்சமான, அரசின் தவறுகளை மூடி மறைக்கும் கண்துடைப்பு ஆணையம் என்பதைக் காட்டுகிறது. மக்களுக்கு தி.மு.க., அரசின் விசாரணை மீது, நம்பிக்கை இல்லை. கரூர் துயரத்திற்கு உரிய நீதி கிடைக்க, நடந்தது என்னவென்று மக்களுக்கு உண்மை நிலை தெரிய, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

nisar ahmad
செப் 30, 2025 17:10

தூத்துக்குடியில் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டப்போது தெறியாத விசயம் இப்போது உணக்கெப்படி தௌறிந்தது.சதி அதிமுகவிற்கும் பழனிக்கும் பங்கிறுக்குமோ


selva sekar
செப் 30, 2025 15:21

இப்போது ஒன்றுமே தெரியாது போல் நடிக்கிறார்கள்


Santhakumar Srinivasalu
செப் 30, 2025 13:04

அறிக்கை எல்லாம் அப்பறம்


Arjun
செப் 30, 2025 12:47

ஒன்னரை வயது குழந்தை சடலத்தை பார்த்தால் யாருக்கும் கண்ணீர் வருமே.


Vellaichamy
செப் 30, 2025 12:36

எல்லாம் தேர்தல் கணக்குத்தான்


Ilamurugan Manickam
செப் 30, 2025 11:58

பேச எந்த அர்த்தமும் இல்லை.


பாலாஜி
செப் 30, 2025 11:29

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பு கள்ளக்குறிச்சியில் ஏற்பட்டது விபத்து இல்லை எடப்பாடி பழனிசாமி. கரூரில் ஏற்பட்ட உயிரிழப்பு விபத்து நீதிமன்ற நிபந்தனைகளை அவமதித்து "தவெக" ஜோசப் விஜய் ஏற்படுத்தியது. இந்த வித்தியாசம் தெரியாத நீங்க அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தகுதியற்றவர்.


பேசும் தமிழன்
செப் 30, 2025 18:17

அப்போ... அங்கே செத்தது மனிதர்கள் இல்லையா ???


முருகன்
செப் 30, 2025 10:20

அதுவும் இதுவும் ஒன்றா இவரை எதில் சேர்ப்பது


Sekar
செப் 30, 2025 10:13

சாராயம் குடித்தால் இறப்பான் என தெரிந்தும் குடித்து இறந்தவனை விட ஒன்றுமறியா இளம் தலைமுறையினர் கிணற்று தவளை நடிகன் விஜய்யை நம்பி பல மணி நேரம் காத்திருந்து உயிர் விட்டதுதான் காரணம்.


ராமகிருஷ்ணன்
செப் 30, 2025 09:50

இதுலெ என்னய்யா சந்தேகம். எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை