உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் செல்ல 11 ஆண்டுகள் மோடி காத்திருந்தது ஏன்?

ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் செல்ல 11 ஆண்டுகள் மோடி காத்திருந்தது ஏன்?

சென்னை : பிரதமரான பின் முதல்முறையாக, கடந்த 30ம் தேதி, நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகத்திற்கு மோடி சென்றது, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=aicwgr2a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகம் உள்ளது. அங்கு தான், ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர் டாக்டர் கேசவபலிராம் ஹெட்கேவார், இரண்டாவது தலைவர் குருஜி கோல்வால்கர் ஆகியோரின் நினைவிடங்கள் உள்ளன.

முக்கிய தருணம்

ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் தலைவர்களும், தொண்டர்களும், தங்கள் வாழ்வின் முக்கிய தருணங்களில், இங்கு வந்து மரியாதை செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.அதனால், 2014ல் பிரதமரான நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகம் வந்து, ஹெட்கேவார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூன்றாவது முறையாக பிரதமராகியும் கூட, அங்கு மோடி செல்லவில்லை. இத்தனைக்கும் 2014 லோக்சபா தேர்தலின்போது, பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட, ஆர்.எஸ்.எஸ்., தான் காரணமாக இருந்தது. மோடிக்கு, ஆர்.எஸ்.எஸ்., தலைமையின் ஆதரவு இருப்பதை அறிந்த பின்னரே, அப்போது போர்க்கொடி துாக்கிய மூத்த தலைவரான அத்வானி அமைதியானார்.ஆனாலும், பிரதமராகி 11 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக, ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகம் சென்றுள்ளார். ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர் ஹெட்கேவார் பிறந்த நாளான யுகாதி நாளில், அவருக்கு மரியாதை செலுத்துவதை, அந்த அமைப்பின் ஒவ்வொரு தொண்டரும் கடமையாக கொண்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகம் செல்ல, அந்த நாளை தான் மோடி தேர்வு செய்துள்ளார்.

கைகளில் நாடு

இதன் பின்னணி குறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:கடந்த 1925ல் ஹெட்கேவார், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை துவக்கியபோது, புதிய அமைப்பால் என்ன சாதித்து விட முடியும் என, பலரும் கேள்வி எழுப்பினர். அவர்களுக்கு பதில்அளித்த அவர், 'நாட்டின் மக்கள் தொகையில் குறைந்தது 3 சதவீதம் பேரை, ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகளுக்குள் கொண்டு வந்துவிட்டால், அப்போது நம் தொண்டர்களின் கைகளில் நாடு இருக்கும்' என்றார்.அப்போது, அதை யாரும் நம்பவில்லை; கேலியும் செய்தனர். ஆனால், 1998ம் ஆண்டிலேயே ஆர்.எஸ்.எஸ்.,சில் பயிற்சி பெற்ற வாஜ்பாய் பிரதமரானார். 2014 முதல் ஆர்.எஸ்.எஸ்.,சில் முழுநேர ஊழியராக இருந்த மோடி பிரதமராக இருக்கிறார். ஹெட்கேவாரின் லட்சியத்தை எட்டிப் பிடித்து விட்டோம் என்பதை நாட்டுக்கு உணர்த்தவே, ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டில் வரும் ஹெட்கேவாரின் பிறந்த நாளில், அவரது நினைவிடத்தில் மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.பிரதமர் மோடிக்கு மட்டுமல்ல; ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ்., தொண்டருக்கும் உணர்ச்சிபூர்வமான வரலாற்று தருணம் இது. இதற்காகவே பிரதமர் மோடி, 11 ஆண்டுகள் காத்திருந்தார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venugopal s
ஏப் 01, 2025 14:43

ஆர் எஸ் எஸ் தலைவர்கள் தன்னை தேடி வருவார்கள் என்று மோடி அவர்கள் காத்திருந்தாரோ?


pmsamy
ஏப் 01, 2025 09:14

ஆர் எஸ் எஸ் அழிக்கப்பட வேண்டும்


Columbus
ஏப் 01, 2025 07:57

Yogi next PM. Modi next President.


Senthoora
ஏப் 02, 2025 05:56

அப்போ நீங்க அடிமையா?


Ramaraj P
ஏப் 01, 2025 07:10

அடுத்த பிரதமர் யோகி. அடுத்த RSS தலைவர் மோடி.


கிஜன்
ஏப் 01, 2025 06:26

ப்ப்ப்ப்ப்ப்ப்பா ..... எப்படிங்க ....


N Sasikumar Yadhav
ஏப் 01, 2025 11:10

ஆர்எஸ்எஸ் உங்க திராவிட மாடல் எஜமான் மாதிரி ஒரு குடும்பத்தினர் மட்டுமே வரக்கூடாது


Senthoora
ஏப் 02, 2025 06:28

அதென்ன திராவிட மடல் மட்டுமா, நல்லவேளை மோடிக்கு புள்ள, குட்டி கிடையாது. அல்லது செப்டம்பரில் இருந்து அந்த புள்ளைதான் பிரதமர்,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை